சும்மா இருந்தால் விசா சுலபமா கிடைக்காது!
SOTC (Sindh Oriental Travel Company) was acquired by Kuoni Travels, Popular
in Europe and with headquarters at Zurich .
They are also owners of VFS Global, a company which helps in prcessing visas.
Marketing Persnnel கார்த்திக் நம்ம வீட்டுக்கு வந்து 42000 ரூபாய்க்கான
செக்கையும் வாங்கிக்கொண்டு, ஒரு அக்ரீமெண்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார். நாம் ஒரு வேளை போக வேண்டாமென்று நினைத்தால்
பணம் திரும்பக் கிடைக்காது. எதற்கும் அக்ரீமெண்டை படித்து வைத்துக் கொள்வது நல்லது.
ஃபாண்ட் சைஸ்தான் 8க்கும் கீழே! பாஸ்போர்ட் காப்பி ஒன்று கேட்பார்கள். பாஸ்போர்ட்
குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடி ஆகக் கூடியதாக இருக்க வேண்டும்.
இரண்டு பேருக்கு, மொத்தம் சுமார் 3.5 லட்ச ரூபாயும் கைச்
செலவுக்கு சுமார் 50,000 ரூபாயும் உங்கள் S.B. கணக்கில் காட்ட வேண்டும். ரொக்கப் பரிமாற்றங்கள் கூடாது
என்று சொன்னார்கள். செக்தான், ஆனால் பினாமியாக இருக்கக் கூடாது. விளக்கங்கள் தேவை.
அப்பத்தான் மியூச்சுவல் ஃப்ண்ட், ஷேர், போஸ்ட் ஆபீஸ், இன்ஸூரன்ஸ், நம்ம வயது!
எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. ஷேர்ஸ் 10% நட்டத்தில் இருந்தது சில சுமாரான
கம்பெனிகளும் இருந்தன. மேலும் மகன் “அப்பா ஊருக்கெல்லாம் கதை சொல்லிட்டு நமக்கு
இப்பிடி வைச்சிட்டுப் போயிருக்காரே” என்று சொல்லப்படாதில்லையா! அதனால எல்லாத்தையும் சப்ஜாடா வித்து செக்கை
பாங்க்ல போட்டாச்சு. மியூச்சுவல் ஃப்ண்ட் எல்லாம் பத்திர வடிவில் இருந்ததால் பணம்
வர நாளாகலாம். இருந்தாலும் redemption க்கு அனுப்பி
விட்டேன். Post Office Monthly Income Scheme எல்லாமே முடிவடையும் தருவாயில்
இருந்ததால் அதையும் குளோஸ் செய்தாயிற்று. எல்லாரையும் இதைச் செய்யச் சொல்லவில்லை.
என் வயதிற்கு இது சரி. அவ்வளவுதான். மீதி இருப்பதை பாங்கில் F.D. போட்டாயிற்று. 6
மாத S.B. கணக்கு அறிக்கை
வேண்டும்
அடுத்து சொத்து பத்திரங்கள் வேண்டும். ஆங்கிலத்தில் இருக்க
வேண்டும். தமிழில் இருந்தால் High Court ல் கொடுத்து மொழிபெயர்த்து நோட்டரியிடம் கையெழுத்து வாங்க
வேண்டும்.
பாங்க் டெப்பாஸிட்டுகள், எல்.ஐ.சி சர்ட்டிபிகேட், மூன்று
வருட இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன் ஆகியவையும் வேண்டும்.
எதையும் கொடுப்பதற்கு முன்னால் அவசியம் ஜெராக்ஸ் எடுத்துக்
கொள்ளவும்.
பாஸ்போர்ட், விஸா, ட்ராவெல் இன்ஸூரென்ஸ், பெட்டிகள்
ஆகியவற்றை உங்கள் மோபைலில் ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளவும்.
Yoga helps you to keep warm in cold countries esp. kapaalapathy.
FYI Yoga retains oxygen, Gym uses up oxygen.
No comments:
Post a Comment