ஆன் யுவர் மார்க்ஸ்.
பாங்க் பாலன்ஸ் ரெடி பண்ணியாயிற்று.
அட்வான்ஸ் விஸா பேமெண்ட் கட்டியாயிற்று. மற்ற டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணியாயிற்று. சுமார் 15 நாட்கள் ஆயிற்று. முதலில்
UK விஸாவிற்கு பாரங்களை டிராவெல் ஏஜெண்ட்ஸ் தயார் செய்து நம் கையெழுத்தை வாங்கி அனுப்பி வைப்பார்கள். பெரும்பாலும் விஸா நிச்சயமாகக் கிடைப்பதற்குத் தோதாக இவர்களே எல்லாவற்றையும் நம்மிடம் கேட்டு வாங்கி அனுப்புவதால் விஸா கிடைத்துவிடும். நாம் கையெழுத்திட்டு கொடுத்த 15 நாட்களுக்குள் VFSல் இன்டெர்வியூவிற்கான தேதி ஆன்லைனில் கிடைத்து விடும். எல்லாம் சரியாகச் செய்து தந்துவிடுவதால் இன்டெர்வியூவில் கேள்விகளுக்கு இடமில்லை. பிறகு 10 நாட்களில் விசா கிடைத்து விடும்.
UK visa கிடைத்த பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கான
’ஷென்ஜென்’ விசாவிற்கு டிராவெல் ஏஜெண்ட்ஸ் தயார் செய்து மும்பைக்கு அனுப்ப வேண்டும் அது இன்னும் 20 நாட்களுக்கு மேல் ஆகலாம். ஆக பயணம் செய்யும் தேதிக்கு 80 நாட்கள் முன்னதாக நீங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் passport with schegen visa ஏர்போர்ட்டில் இருக்கும்பொது கூட கிடைக்கலாம் ‼!
No comments:
Post a Comment