Labels

Saturday, November 20, 2010

7. அமெரிக்காவில் குளிர்காலம் - Winter in America 1அமெரிக்காவில் குளிர்காலம் - Winter in America 1

குளிர்காலம் - வட இந்தியாவில் இருப்பவர்களுக்குத் தெரிந்ததுதான்

Summer June21-Sept20  - கோடைக்காலம்
Fall        Sep21-Dec20   - இலையுதிர்காலம்
Winter    Dec21-Mar20  - குளிர்காலம்
Spring    Mar21-June20 - இளவேனிற்காலம்

இலையுதிர்காலமே குளிர் காலத்தைப்போல இருக்கிறது அட்லாண்டாவில். நவம்பர் முதல் வாரம், பகலில் 74º F டிக்ரீ ஃபாரென்ஹெய்ட் ம் இரவில் 40º F டிக்ரீ ஃபாரென்ஹெய்ட் ம் இருக்கிறது. 23.3º C,  4.4º C. இன்னும் உண்மையான குளிர்காலம் எப்படி இருக்குமோ.

வட அமெரிக்காவின் வட பகுதியில் அதாவது நயாகரா, நியூ யார்க், நியூ ஜெர்ஸி, ஸியாட்டல் போன்ற ஊர்களில் முதலில் அதாவது அக்டோபரில் ஆரம்பிக்கும் குளிர் நவம்பரில் ஐஸ் கட்டி உறைவது வரை ஆகிவிடும். பிறகு வட அமெரிக்காவின் தென் பகுதிக்கு லாஸ் ஆஞ்செலெஸ், டல்லாஸ், அட்லாண்டா விற்கு டிசம்பரில் வரும். ஃப்ளோரிடாவிற்கு சாதாரண குளிர்தான்.

கீழ்கண்ட வெப்சைட்டுகளில் பருவ நிலைகளைக் காண்க.

http://www.infoplease.com/ipa/A0762183.html
http://www.mapsofworld.com/usa/thematic-maps/usa-temprature-january.html

குளிருக்கு ஸ்வெட்டரைப்போடாமல் ஹீட்டர் உஷ்ணத்தைக்கூட்டினால் முதலில் கால்களில் வறட்சி ஏற்படும். தோல் வறண்டு வெண்மையாகக் காணப்படும். அரிக்கும். சொரிந்தால் சுகமாக இருக்கும்.  ரத்தம் வரும். உதடு வெடிக்கும். தொண்டை காய்ந்து போய்விடும். தொண்டையும் மூக்கும் அரிக்கும். வாயினுள் மேலன்னத்தில்இருந்து, மூக்கினுள்ளிருந்தும் சொட்டு ரத்தம் வரலாம். மூக்கினுள்ளே ஒரு சொட்டு உப்பு நீர் விட்டால் காய்ந்து போகாது. இதெல்லாம் மார்கழியில் ஊரில் உள்ளதுதான். 55 வயதுக்கு மேல் சான்ஸ் அதிகம். குழந்தையை பார்த்துக்கொள்கிறோம் பேர்வழி என்று வந்து அவர்கள் நம்மைப் பார்த்துக்கொள்கிறாற்போல வந்துட்டால்? ஆதலால் இங்கே வருமுன் காப்பதே நலம். Doctor's office…very expensive yaar!

குளிர் காலத்தில் காற்றில் உள்ள ஈரம் காய்ந்து போய்விடும். வெப்ப அளவை 76ºF, 24.5ºC பாகை போல வீட்டு ஹீட்டரை வைத்துக்கொள்வது நலம்.  வீட்டினுள் ஈரப்பதத்தை சீராக வைத்துக்கொள்வது நல்லது. Humidifier பொருத்தலாம். $40-$140. அல்லது ஒவ்வொரு ரூமிலும் பேஸினில் தண்ணீர் ஊற்றி வைத்து விடலாம். வீட்டினுள்ளேயே துணியைக் காயப்போடலாம். கை கால்களில் வாஸலைன் தடவிக்கொள்ளலாம். உதட்டிற்கு Lip Balm உபயோகப்படுத்தலாம். ஈரப்பதம் கூடிவிட்டால் பூச்ணம் பூத்தது போன்ற வாசம் வரும். கதவுகளைத் திறந்து விடலாம். அல்லது வெண்டிலேடர் ஃபானைப் போடலாம்.

மரம் வெப்பத்தைக் கடத்தாது. வீடுகள் மரத்திலானவை. வெளியே உள்ள குளிர் உள்ளே வராது. உள்ளே உள்ள வெப்பம் வெளியே செல்லாது!

ஹீட்டரை குறைத்து வைத்துக்கொண்டு வீட்டினுள் இருந்தால் குளிருக்கு fleece hoodies, fleece pants அணிந்தால் போதும். நல்ல க்ளவ்ஸ், ஸாக்ஸ், கண் மட்டும் தெரிகிறாற்போல உள்ள monkey cap ஊரில் வாங்கி வரலாம்.வெளியே செல்லு முன் inner thermal wear, shirts and pantsம் அணிந்து மேற்கண்டவைகளையும் அணிந்து தேவைப்பட்டால் jerkinsம் ($50)அணிந்து செல்லலாம். அப்பாட! ஏழெட்டுக் கிலோ கூடியிருப்பீர்கள். நான் குறிப்பிட்டு இருக்கும் எதையும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். $10 each @ Walmart, அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் நிறுவணங்களில் ஒன்று.

தொடரும்....
I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topicsSaturday, November 13, 2010

6. How to post a comment விமர்சனங்களை பதிவு செய்ய

Many have asked me about how to post a comment and hence this letter.

Click 'comment' at the bottom of my 'Post', i.e. article

You can type your comment and your name in the 'Post a comment' box.

For those with gmail ac, in  the 'select a profile' box enter your name and your email address. Your email address will be kept   private - no other blog readers can contact you through it. It is only used for this purpose. Your password is hidden and secure. Even blogger cannot see it. He sees 'noreply-comment@blogger.com'

For those who do not have gmail account, I have enabled 'anonymous' in 'select a profile' box.


Click 'comment' at the bottom of my 'Post', i.e. article

You can type your comment and your name in the 'Post a comment' box.


Click Anonymous in 'select a profile' box.

Click Post Comment.

Word verification will appear.

Please type and confirm the word verification. This is to prevent machines using it automatically.

Thank you

I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics


Wednesday, November 10, 2010

5. America, US, a few points to note. சில குறிப்புகள்


Purpose of my articles is to let the visitors to US to be prepared about the problems they may face and how to pass their time if they had to stay longer. Because your children are working!!
என்னுடைய நோக்கம்: புதிதாக அமெரிக்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள்  எதிர்கொள்ளும்  பிரச்னைகள் என்ன, செல்லும்பொழுதே என்ன கொண்டு செல்ல வெண்டும், கூட நாட்கள் இருந்தால்  பொழுது போக என்ன செய்யலாம் என்று தெரிவிப்பதே ஆகும். ஏனென்றால் உங்கள் குழந்தைகள் இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள்.!!

New comers to US please note down the words in bold in my articles.
புதிதாக யு எஸ் ஸுக்கு வருபவர்கள் என் கட்டுரைகளில் தடிமனான எழுத்துக்களைக் கவனிக்கவும்

Toilets become restrooms, petrol becomes gas,chocolates become candies, biscuits become cookies, in US. Please let me know if you know some more.
அமெரிக்காவில் கழிப்பறைகளை ரெஸ்ட் ரூம் எனவும், பெற்றோலை காஸ் எனவும், சாக்லெட் வகையறாவை காண்டீஸ் எனவும், பிஸ்கட்டை குக்கீஸ் எனவும் சொல்கிறார்கள். இன்னும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

Every year, on the last Sunday of October or on the first Sunday of November the clock is set back by an hour. You save an hour for winter i.e. less one hour i.e. 7 pm changes to 6 pm. You can return home early in the evening before you freeze. 8.30 am at Atlanta is 7 pm @ Chennai.This year (2010) it was set on Nov 7th.
ஒவ்வொரு வருடமும் அக்டோபரில் கடைசி ஞாயிரன்று அல்லது நவம்பர் முதல் ஞாயிரன்று கடிகாரத்தை ஒரு மணி நேரம் பின் நோக்கி வைக்கின்றனர். ஒரு ம ணி நேரம் சேமிக்கப்படுகிறது. மாலை 7மணி 6 மணீயாகிறது. அதாவது ரெம்பவும் குளிர் வரு ம் முன்னாலேயே வீட்டுக்குத் திரும்பி விடலாம். இந்த வருடம் (2010) நவம்பர் 7 உ யன்று கடிகாரம் பின்னோக்கி வைக்கப்பட்டது.

FALL is between Sept21 to  Dec20.
இலையுதிர்காலம் செப்டம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை

I intend to post one article every 10 days by god's will!
பத்து நாட்களுக்கு ஒரு முறை பதிவு செய்ய விரும்புகிறேன்.

If you think this will be useful to either your family or friends please encourage by leaving a comment in the 'post a comment' box at the bottom after clicking it.
கீழேயுள்ள 'post a comment' boxல் தயவு செய்து தங்கள் அபிப்ராயங்களைப் பதிவு செய்து உற்சாகப்படுத்தவும். நன்றி.
Thank you

I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics

4. அமெரிக்காவில் ஹாலோவீன் (Halloween in America).


அமெரிக்காவில் ஹாலோவீன் (Halloween in US).(the evening before All Hallows Day)

Independence day, Veterans day, Christmas, New Years day, and Halloween எனும் தினங்கள் வருடாவருடம் குறிப்பிட்ட தேதிகளிலேயே வரும். மற்ற விடுமுறைகள் எல்லாம் வாரக்கடைசி நாட்களைத்தொட்டே அனுசரிக்கப்படுகிறது. சனிக்கிழமை விடுமுறை வந்தால் வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை லீவு வந்தால் திங்கட்கிழமையும் சேர்த்துவிடப்படுகிறது. விஷேசமானது என்னவென்றால் தலைவர்களது பிறந்த தினங்கள் கூட 3rd Monday, 4th Thursday என்று அனுசரிக்கப்படுகிறது.வொவொரு

ஓவ்வொரு வருடமும் ஹாலோவீன் அக்டோபர் 31 உ கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா ஐரோப்பாவிலிருந்து இங்கு வந்ததென்றாலும், கெட்டவைகளையும், பேய் பிசாசுகளையும் விரட்டி விட்டு, நல்லவைகளையும், நல்லாத்மாக்களையும் வரவேற்பதற்காக கொண்டாடப்படுவதாக நம்புகிறார்கள். இலையுதிர்,  குளிர் காலத்தை வரவேற்பதாகவும் அமைகிறது.

சோளக்காட்டுப்பொம்மைகள்,பேப்பர் எலும்புக்கூடுகள், கறுப்புப்பூனைகள், சிலந்தி வலைகள், பேய் ப் பொம்மைகள், வௌவால்கள், விளக்குமாறு, சூனியக்காரி, முக்கியமாக பரங்கிக்காய், ஜாக்-ஓ-லான்டெர்ன் ஆகியவைகள் வீடுகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும்.


பரங்கிக்காயினுள்ளே உள்ள சதையை எடுத்துவிட்டு, வெளியே கத்தியினால் கண்கள் மூக்கு, வாய், கோரைப்பற்கள், என கீறி எடுத்து விடுவார்கள். ஊள்ளே ஒரு மெழுகு வர்த்தியை வைத்து வீட்டிற்கு வெளியே வைத்து விடுவார்கள். இதற்குப்பெயர்தான் jack-o-lantern.

பரங்கிக்காய் ரோல்ஸ், கேக்ஸ், ஸூப் எல்லாமே பரங்கிக்காய்தான். காய வைத்த விதை கூட விஷேசமுங்க!

' Trick or Treat ' (actually a demand by youngsters in 1930s) ஹாலோவீன் அன்று மாலை 3 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் வித விதமாக உடையணிந்து வருவார்கள். முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு, அல்லது பயமுறுத்தும் வகையில் முகமூடியணிந்தும், எலும்புக்கூடுகள், கடற்கொள்ளையர், அல்லது லேட்டஸ்ட் சினிமா, கார்ட்டூன் காரெக்டர்ஸ் போன்று உடையணிந்து வலம் வருவர். உடன் வீட்டுப் பெரியவர் ஒருவரும் வருவார். பரங்கிக்காய் கூடையுடன் இவர்கள் வீடுவீடாகச்சென்று மிட்டாய்கள் candies, கேட்பர். எல்லாருமே எதிர்பார்த்து வாங்கி வைத்து வினியோகிப்பர்.

Malls எனப்படும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஷில் ஒவ்வொரு கடை முன்னாலும் வினோதமான உடை அனிந்து கடை முன் ஒருவர் அமர்ந்து மிட்டாய்களை வினியோகிப்பார். சிறுவர்கள் கூட்டம் அபரிதமாக இருக்கும்.

'Leasing Office' பக்கத்திலுள்ள club house ல் இந்த ஊர்வலத்திற்கு முன்னால் பெரியவர்களுக்கும் ஒரு பார்ட்டி உண்டு.

Halloween haunted houses என்று automated electronic devices மூலம் உங்களை பயமுறுத்தும் பொம்மைகள் இருக்கும். லோக்கல் நியூஸ் பேப்பரில் அல்லது டிவியில் இது குறித்து விளம்பரங்களைக் காணலாம். ஃபிரீயாகவும் இருக்கலாம்.

கீழே கண்ட யூ ட்யூப் 3 நிமிடப் படத்தைப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=FHJYu-UxnbQ

இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருந்த அபார்ட்மெண்ட்ஸைச் சுற்றி அத்தனை இந்தியச்சிறுவர்கள் (பார்த்தாலே தெரியாத நம்மாளை!) ஹாலோவீன் அன்று தீபாவளியைப் போலதிரிந்தார்கள். தீபாவளியன்று ஒரு பிள்ளையக்காணோம். கோயிலுக்குப்போயிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics


WWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWW
HALLOW E'EN! (the evening before All Hallows Day)

Independence day, Veterans day, Christmas, New Years day, and Halloween fall on definite dates every year. All other holidays are combined with weekends. If holiday falls on Saturday, then Friday would be a holiday. If a holiday falls on Sunday then Monday would be a holiday.

Halloween falls on October 31st every year. Though it originates from Europe,it is believed to be celebrated for warding off evils and inviting good souls, and also to be welcoming the 'Fall' and the winter.

Scarecrows, paper skeletons, black cats, spider web made of threads, ghost images, bats, brooms and witches, pumpkins, and jack-o-lanterns are displayed in front of the houses.

The pulp inside the pumpkin is carved out. On the outer side two eyes a nose and few scary teeth are carved out with a knife. A candle is placed inside. This is known as jack-o-lantern.

Rolls, cakes and soups are made using pumpkin.

' Trick or Treat ' In the evening,The children aged 3 to12 dress up in different forms, mostly face painted like ghosts, wearing masks like presidents, dressed like pirates, avatars, skeletons. They start from their houses with one elderly person from each family, in the October 31st evening as a group and go around from house to house in the neighborhood, with open pumpkin plastic baskets collecting candies and chocolates.

In the shop houses in malls, an employee sits outside the the shop dressed in a scary manner or like one of the latest characters in cartoons and distribute candies. The whole children crowd will be there.

Look for a party organized by the leasing office of your apartment in the evening of Oct 31st at the clubhouse nearer to it.

A few people join together and create Halloween haunted houses artificially with a lot of automated electronic devices to scare off people. These houses are open normally from october 1st. They advertise the venue in newspapers. They normally charge like $10. Most of the time they are free. You can view an example at the following website.
http://www.youtube.com/watch?v=FHJYu-UxnbQ

In fact around the apartments we lived in there were so much of Indian children, still with some remnants of India, that the place seemed to be Little India.


Tuesday, November 2, 2010

3. அமெரிக்காவில் பிரசுபம் Delivered in America (child)

மகள் பிரசுபத்திற்காக அமெரிக்கா செல்கிறீர்களா? தெரிந்துகொள்ளவேண்டியவை இதோ! (முதலில் பாஸ்போர்ட்டில் 'Surname' இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். விசா கதைக்கு அப்புறம் வருவோம்.)

இன்சூரன்ஸ் இல்லையென்றால் டாக்டரின் 'ஆபீஸ்' ஆமாம் 'ஆபீஸி'னுள் போகவே முடியாது. அப்பாயின்மெண்ட்டை மிஸ் பண்ணிவிட்டால் $25 பெனால்ட்டி கட்ட வேண்டும். ஆனால் ஆஸ்பத்திரியில் எமெர்ஜென்சி என்றால் அவசியம் அவர்கள் நம்மைப் பார்த்தே ஆகவேண்டும். Medicaid, Medicare எனும் US gov. agency பணத்தைக்கட்டி விடும்.

முதல் 7 மாதங்கள் மகளிர் நல மருத்துவர். அடுத்த மூன்று மாதங்கள் மகப்பேறு மருத்துவர், அவருடன் இருக்கும் அனுபவமிக்க தாதியர் 'midwife', பிறகு குழந்தை நல மருத்துவர், நல்ல மருத்துவ மனை என நான்கையுமே முன்கூட்டியே தெரிவு செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

7வது மாதம் நாம் தெரிவு செய்த மருத்துவமனையைச் சுற்றிப்பார்க்கக் கூப்பிடுவார்கள். ஆஸ்பத்திரி நடைமுறைகளைச் சொல்வர். கணவர் அவசியம் செல்லவேண்டும். 8வது மாதம் தாய்ப்பாலின் அவசியத்தை கணவருடன் வரச்சொல்லி உபதேசிப்பர். 9வது மாதம் நார்மல் அண்ட் சிஸேரியன் விபரங்களை விபரிப்பர்.

Labor pain, பனிக் குடம் கசிவதுபோல அல்லது உடைந்தது போலத்தோன்றும்போது மகப்பேறு மருத்துவருக்குப் போன் செய்து கேட்டு உடன் மருத்துவமனைக்குச்செல்லச்சொன்னால் செல்ல வேண்டும். முதலில் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்தான் கவனிப்பர். வந்த உடன் பெயரைச்சொல்லி 'நேம் டாக்" குடன் போட்டோவையும் முகத்தையும் காட்டிவிடுவர்! பிறகு போன் செய்து நமது தாதியை, midwifeஐ, வரவழைப்பர். அவசியம் ஏற்பட்டால் நமது டாக்டரைக்கூப்பிடுவார்கள். ஹாஸ்ப்பிட்டல் Hotel போல இருக்கும். பினாயில் வாசமே இருக்காது.

Labor ரூமில் வீடியோ காமெரா, லாப்டாப்பில் பிடித்த இசை, கணவர், அம்மா எல்லா(ரு)மே அலவ்டு. பிறந்த குழந்தையை தாய்மேல் போட்டு விடுவார்கள். தொப்புள் கொடியை கணவர்தான் கட் செய்வார்!

தாத்தாவின் பெருமையை இங்கேதான் பார்க்கவேண்டும். மகள், மருமகன்,பேத்தி எல்லார் கையிலும் பட்டைகள் 'bar code' பார் கோடுடன் தாத்தாவின் பெயர் மகளின் பெயர்(இனிஷியல் மட்டும்) இருக்கும். தாத்தாவும் பெருமையுடன் 'I am a Grandpa' என்று பாட்ஜ் குத்திக்கொள்ளத் தருவார்கள. குழந்தையை வாங்கும்போதும் கொடுக்கும்போதும் கைகளில் இருக்கும் பட்டையைச் சரிபார்த்துக்கொள்கிறார்கள். நம்மையும் செவிலியரின் கழுத்திலுள்ள போட்டோ ஐ டி யையும் ஒத்துப்பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள்

You can request the hospital to keep your umbilical cord for your family or donate for research such as transplantation, stem cell etc. You have to pay about $2000 to preserve it in the Banking facility for years.

அமெரிக்கா எங்கும் 'Diaper Changing Station' என்று எல்லா 'Rest Rooms' அதாவது பாத்ரூம்களிலும் ஒரு சின்ன டேபிள் சுவற்றோடு இருக்கும். குழந்தைகளுக்கு அப்பாமார்களே நாப்கின் அழகாக மாற்றி விடுவார்கள்!

அப்போதுதான் பிறந்த குழந்தைகளைக் கூட காரில் கூட்டிச்செல்ல தனியாக ஒரு சேர் 'infant restraint' என்று பின் சீட்டில் மாட்டவேண்டும். மாட்டாமல், ஆத்தா பிள்ளையப்பாத்துக்குவா என்று ஓட்டிப்போய் தாணாக்காரரனிடம் மாட்டிக்கொண்டால் டிக்கெட்தான்! $150 ஓடு இன்சஸுரன்ஸும் எகிறிடும்!!
I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topicsIf you think this will be useful to either your family or friends please leave a comment.
I intend to post one article every 10 days by god's will!
Thank you