Labels

Monday, June 18, 2012

30. யூரோப் டூர் 1, Europe Tour 1




வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்

பிப்ரவரி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என் இல்லத்தரசியின் டாக்டர் நண்பியை குடும்பத்தினருடன் பிரின்சிபால் நண்பியின் சென்னை இல்லத்தில் சந்தித்தோம். ஒன்றாகப் படித்து 45 வருடங்கள் ஆனாலும் என் இல்லத்தரசி தன் நண்பிகள் சுமார் 18 பேருடன் இன்றும் தொடர்பு வைத்திருப்பவர்! கோயம்புத்தூர் டாக்டர் தம்பதிகள் அடிக்கடி சுற்றுப் (உல்லாசப்!) பயணம் செல்பவர்கள். SOTC எனும் டூர் ஏஜெண்ட்ஸ் மூலம் செல்பவர்கள். அவர்களும் தாங்கள் இருவரும் மே 9 தேதி யூரோப் டூர் செல்வதாகக் கூறினார்கள். ப்ரின்சிபாலும் அவர் ஆத்துக்காரர் ஃபிளைட் இஞ்சினியரும் கூட டூர் போவதாகச் சொன்னார்கள். டாக்டர்களும்SOTC 100 வருட அனுபமுள்ள நிறுவனம் என்றும் அவர்கள் 12 முறை சென்றிருப்பதாகவும், எல்லாமே 3* அல்லத் 4* ஹோட்டல்ஸ், இந்தியன் ஃபூட் எவ்ரிவெயர் என்று கூறவும், பத்திக்கிருச்சி! அதை விட முக்கியம் நமக்கு 60+ல ரெண்டு (ரெண்டு சார்!) டாக்டர்களோட அவ்வளவு தூரத்துல பயணம் செய்யறதுக்கு கொடுத்து வைச்சிருக்கனும் இல்லையா?!

“சித்தப்பா சான்ஸ விட்றாதீங்க. அவசியம் போங்க. என் மக கலியாணத்திற்கு வந்திடுங்க.” “ அண்ணே நல்ல சந்தர்ப்பம். என் மக கலியாணத்திற்கு வந்திடுங்க “அண்ணே ரெம்ப கோல்டா இருக்கும். மங்கி காப், தெர்மல் வேர், அப்புறம் நல்ல ஷூஸ் நாம போய் வாங்கிருவம்நாகப்பன் தம்பி நம்மள தள்ளி விடுறதுண்ணே முடிவு பண்ணிட்டார்.

“பரவாயில்லல்ல, நம்ம டூர் போறம்ன உடனே பல நல்ல நிகழ்ச்சிகள் நடக்கப்போகுது!

தம்பிகளா, ஐயர்ட சொல்லி ரெம்ப நல்ல நாளா மே 26க்கு அப்புறம் வைக்கச் சொல்லுங்கப்பா. மலேசியாவில 7ப்பு ஹிஸ்டரி புக்ல பார்த்ததெல்லாம் பார்க்கனும்பா நெடுநாள் ஆசை!

SOTC ல கேட்டா மே 9க்கு இடமில்ல என்று சொல்லி விட்டார்கள். அப்புறம் நெடு நாள் வாடிக்கையாளர்களான Mrs. டாக்டரின் சிபாரிசில் கிடைத்தது. (ஃபிப்ரவரி 26ந் தேதி கலியாண தேதிகள் முடிவான பிறகுதான் (ஜூன்1ம்7ம்))

உடன் 42000 ரூபாய் முன்பணமாக விசா உட்பட கட்டியாயிற்று. UK Visa and Schengen visa.(ஸ்கென்ஜென், ஷென்ஜென்?) எங்கே இத மொதல்ல phonetic typeல அடிச்சுப் பாருங்க. எப்பிடிச் சொன்னா என்ன? விசா கெடைச்சாச் சரி! அதுவும் நாம பென்ஷனருமில்ல, பிஸினசும் இல்ல. அப்பத்தான் தெரிஞ்சது சும்மா இருந்தால் சுலபமா விசாக் கிடைக்காது என்பது!
விசாவுக்கு அப்புறம் பயணம், தொடரும்





No comments:

Post a Comment