Labels

Saturday, December 25, 2010

12. நன்றி சொல்லும் தினம், பகுதி 2. Thanksgivingday 2.


12. நன்றி சொல்லும் தினம், பகுதி 2. Thanksgivingday 2.

ஸேல்ஸ்ல சீப்பா வாங்குவதென்றால் சும்மா இல்லே. நிறைய பிரப்பரேஸன்ஸ் எல்லாம் செய்ய வேண்டும். முதலில் ஏற்கனவே 'பங்கு பெற்றவர்க' ளிடம் கேளுங்கள். நிறைய வெப்சைட்டுகளில் இதைக் குறித்து முன் கூட்டியே 'ரகசியத்' தகவல்கள்வெளியாகும். எந்தெந்த சூப்பர் மார்க்கெட்டில் என்னென்ன ஸேல்ஸ் என்று 'கிசுகிசு' வரும்.

கொழுந்தியாள் மகள் வள்ளியம்மை ஃப்ளோரிடாவிலிருந்து e mail அனுப்பியிருந்தாள். ஒவ்வொரு ஸ்டோரும் எத்தனை மணிக்குத் திறக்கிறார்கன், என்னென்ன பொருகள் என்ன விலைக்கு ஸேல்ஸ் ஆகப்போகிறது என்று எக்ஸெல் வொர்க்ஷீட்டில்!
Store, Opening time,  Category, Sub-Category, Brand, Description,  Price என்று.


http://blacfridaybuyingguide.shopping.officelive.com

தம்பி மாப்பிள்ளை லாப்டாப்பில் வியாழனன்று தேடி $500 தொஷீபா லாப்டாப் $188க்கு "Best Buy"யில் ஸேல்ஸ் போட்டிருப்பதாகக் கண்டு பிடித்து வைத்திருந்தோம்.

என் மாப்பிள்ளையும் hard disk, vacuum cleaner என்று பல ஐட்டெம்ஸ்!

Target, Sears, Macys, Bestbuy, KMart,Office Depot, Home Depot என்று பல ஸ்டோர்கள்.  ஆன்லைனில் Amazon, eBay, Meritline, Overstock, Deals2catch என்று பல.

Deals on clothing, toys, electricals, electronics and housewares starting at midnight.

At 5:00am, the doorbuster deals will become available.

என் மாப்பிள்ளையும் தம்பி மாப்பிள்ளையும் "மாமா உங்களுக்குக் குளிர் தாங்காது. நாங்க ஆளுக்கு ஒரு கடையாகப்பார்த்துக்கொள்கிறோம்" என்றார்கள்.

என் மனைவியும் பல gift குடுக்க வேண்டிய ஐட்டெம்ஸ் லிஸ்ட் வைத்திருந்தார். பக்கத்தில் நடந்து போகக் கூடிய தூரத்தில் Walmart ஒன்றுதான்.

சில கடைகளில் காலை3 மணி போல் கூப்பன் குடுத்து காலை5-9க்குள் வாங்கிக் கொள்ளச் சொல்வார்கள்.

எல்லாரும் இரவு 11.30 க்குக் கிளம்பி விட்டார்கள்.

மனைவியும் மகள்களும் Walmartக்குப் போனார்கள். சும்மா பார்த்திட்டு வருவம், காலையில்தானே ஸேல்ஸ் என்று.

மாப்பிள்ளைகள் மாமியாருக்கு லாப்டாப்புக்கு கூப்பன் வாங்க 2.30am க்குப் BestBuy போவதாக இருந்தார்கள். ஆனால் சீக்கிரமே போய் விட்டார்கள். போனால், அங்கே நம்மாளுக, ஊர் ஆளுக எல்லாம் பாய் விரித்துப்படுத்திருக்காக! பிறகு ஒரு நாள் இண்டெர்னெட்டில் தேடி $600 லாப்டாப்பை $300க்கு வாங்கியது வேறு விஷயம். சந்தேகம் வேண்டாம் "இங்கே பாருங்க" தமிழ் கூட நல்லா அடிக்க வருது!

எலெக்ரிக்கல் சாமான்கள் வாங்கும்போது ஞாபகம் வைத்துக்கொள்ளவும், 110V. அப்புறம் ரிச்சி ஸ்ட்றீட்டில் 1600 ரூபாய்க்கு ஸ்டெப் டவுன் அடாப்டெர் (voltage converter) வாங்க வேண்டும். லாப்டாப், ஸெல்ஃபோன் வகையறா வாங்கலாம்.

மனைவியும் மகள்களும் நிறைய்ய சாமான்களுடன் வந்திறங்கினார்கள். மாப்பிள்ளைகளும்தான்..இரவு2மணிக்கே. ஏனப்பா ஸேல்ஸ் காலையில்தானே? இப்ப மணி என்ன?

எல்லாரும் சிரித்தார்கள்."நாங்க வால்மார்ட்டைச் சுத்திப் பார்க்கப் போனோமா. அது 'வால்மார்ட் ஸூப்பர் ஸெண்ட்டர்' 24 ஹவர்ஸ். ஸேல்ஸ்க்காக  புது விலை எல்லாம் ஒட்டி வைத்துவிட்டார்கள். வாங்கிக்கொண்டு வந்துவிட்டோம்" என்றார்கள்.

I have hosted 2 more blogs.
Pls view and post your comments.


Monday, December 13, 2010

10. நன்றி சொல்லும் தினம் பகுதி 1. Thanksgiving Day 1.


முந்திய கட்டுரையின் தொடர்ச்சி: மிகவும் லேசான சுடு நீரில் உப்புப் போட்டிருப்பதே தெரி யாத அளவு உப்புப் போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும். இரவில் எழுந்திரிக்கும்போது கூடச் செய்யலாம். தொண்டையும் மூக்கும் ஈரமாக இருப்பது நல்லது.

இதேபோன்ற ப்ளாக்கை ஆங்கிலத்திலும் வெளியிடுவதாக இருக்கின்றேன்.
தெரிந்தவர்களுக்குச் சொல்லவும். சில நாட்களில்

http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

நன்றி சொல்லும் தினம் பகுதி 1. Thanksgiving Day 1.


ஹாலோவீன் தீபாவளி என்றால்,  தாங்ஸ்கிவிங்டே பொங்கல் போல.

ஆடித்தள்ளுபடி? பொங்கல் சலுகை?! இரண்டும் சேர்ந்ததுதான், இந்த நன்றி சொல்லும் தினத்தன்று நடக்கிறது.

உண்மையாகப்பார்க்கப்போனால் இது உழவர் தினம். நாம் சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதைப்போல அமெரிக்க விவசாயிகள் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் தினம் இது. "Happy Harvest" என்று எங்கும் தொங்க விட்டிருப்பார்கள். இந்த தினத்திலேயே பெரும்பாலோர் தங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு பரிசுகளைக்கொடுத்து நன்றி தெரிவித்துக்கொள்கிறார்கள்.

( ஹாலோவீனைக்கூட சிலர் உழவர் தினம் என்கிறார்கள்)

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காவது வியாழனன்று தாங்ஸ்கிவிங்டே வரும். அப்படியே நாலு நாள் லீவும் வரும், long weekend. இதிலும் பரங்கிக்காய் ஸ்பெஷல் டிஷ்ஷெஸ் உண்டு. உழவர்கள் ஆட்டுக் கொம்பினுள் தானிய வகைகள் பழங்கள் வைத்திருப்பர்.

அடுத்த நாள் Black Friday. அதற்கு அடுத்து வருவது Cyber Monday. sales..sales..sales தான்.

ஆடி மாதம் வியாபாரம் சுமராகப்போகுமென்பதால் ஆடித்தள்ளுபடி நடைபெருவதைப்போல இங்கே குளிர்காலத்தில்  தாங்ஸ்கிவிங்டே ஸேல்ஸ் நடைபெருகிறது. ஆனால் மிக உண்மையான தள்ளுபடி. சாதரணமாக $15க்கு விற்கக்கூடிய  பொருள் $3க்குக்கிடைக்கும்.

ஸேல்ஸ்னா ஸேல்ஸ், தி. நகர் ஸேல்ஸ் தான். எல்லா இடத்திலும் அப்படியொரு கூட்டம். கடை முன்னாடி காஃபி, குக்கீஸெல்லாம் வைத்திருப்பார்கள். பார்க்க படம்.

இனி ஸேல்ஸ் குறித்து சிறிது விரிவாகக் காண்போம்.

I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics

Thursday, December 9, 2010

9 சும்மாவின் மாமா தலைப்பிற்குக் காரணம் என்ன? reason 4 the blog title


 சும்மாவின் மாமா தலைப்பிற்குக் காரணம் என்ன?

நான் NSE நடத்தும் NCFM எக்ஸாம்முக்கு இலவசமாக கடந்த 7 வருடங்களாக  classes நடத்தி வருகிறேன். அதற்கு முன் physics and chemistry ஆசிரியர். கடந்த மூன்று வருடங்கள்ஆக travelling பிடித்திருக்கிறது.

நாணயம் விகடனில் ஆரம்ப காலத்திலிருந்து ஆலோசகராகவும் எழுத்தாளராகவும் இருந்து வரும் வ.நாகப்பன் எனது தம்பியாவார். பங்குச்சந்தை குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார். SUNTV யில் அடிக்கடி வருவர்.

SEBI secondary market advisory committee,  Fedederation of Stock Exchanges of India, Madras Stock Exchange, STOWA, HCC, MSEICM, ACCM போன்றவற்றில் பதவி வகித்த(ப்ப)வர்.

என்னிடம் அடிக்கடி 'அண்ணே உங்க எக்ஸ்பீரியென்ஸெல்லாம் வைத்து புத்தகங்கள் போடவேண்டும் என்பார்.

என் தமக்கையின் மகள் தேனம்மை http://honeylaksh.blogspot.com என்று நடத்தி வருகிறார். லேடீஸ் ஸ்பெஷல், யூத்ஃபுல் விகடன், தேவதை, திண்ணை மற்றும் பலவற்றில் எழுதி புகழடைந்தவர்.

என் தமக்கையார் முத்துக்கருப்பாயி சபாரெத்தினமும் மெய்யம்மை மாணிக்கமும் சிறு வயது முதலே கவிதை எழுததுபவர்கள். திருமதி முத்துக்கருப்பாயி அவர்கள் http://muthusabarathinam.blogspot.com ஆரம்பித்தவுடன் மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம் சேர்ந்து எனக்கு ஆர்வம் வந்து ஆரம்பித்ததுதான் இந்த ப்ளாக்.

அடுத்தது "என்ன பேர் வைக்கலாம் எப்படி வைக்கலாம்?"!

என் மனைவி சொன்னது 'summavinmama-rama'

http://honeylaksh.blogspot.com/   =   அக்கா மகள் = சும்மா
http://muthusabarathinam.blogspot.com/   =   அக்கா = சும்மாவின் அம்மா
http://summavinmama-rama.blogspot.com  =  நான்  = சும்மாவின் மாமா

இப்படியாகத்தானே மாட்டிக் கொண்டேன். 'சும்மா' இல்லே! 10 நாட்களுக்கு ஒரு முறையாவது நான் இன்னும் ப்ளாக்கில் இருக்கிறேன் என்று காட்டவேண்டும்.
ஆண்டவன் வித்த வழி ஸாரி, விட்ட.   d  க்குப்பதிலா t ஐ அழுத்திவித்தேன். (இது என்ன சாஃப்ட்வேர்? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!)
I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics

Wednesday, December 1, 2010

8. அமெரிக்காவில் குளிர் காலம் (2). 8 Winter in America Part 2.
Todays temperature: 13ºC and 5ºC

சாதரணமாக நம் வீட்டிலுள்ள ஃபான் (கூரைக்காத்தாடி!) நாம் கீழிருந்து பார்க்கும்போது anticlockwise (forward) ஆக சுற்றும். காற்றைக் கீழ் நோக்கித்தள்ளும். குளிர்ச்சியை உண்டாக்கும். எப்படி? காற்று நம் தோலின் மேல் படும்போது, நம் உடம்பின் மேலுள்ள வேர்வையை ஆவியாக்கிக் குளிர்ச்சியைத்தருகிறது.

ஆனால் இங்குள்ள ஃபானின் மண்டையில் உள்ள சுவிட்சைத் தட்டினால் clockwise (reverse)ஆகச் சுற்றும். குளிர் காலத்தில் இப்படி ஓட்டுகிறார்கள். ஏன்?!

குளிர்ந்த காற்று அடர்த்தியானது. ஆகவே கீழ் மட்டத்திலேயே இருக்கும். வெப்பமான காற்று மேல் நோக்கிச் செல்லும். வெப்பக்காற்று மேலேயே நிற்கும். கீழே சூடு இறங்க வெகு நேரமாகும். Termostat ஹீட்டரை நிறுத்த நேரமாகும். எலெக்ட்றிசிட்டி பில்லும் எகிறிவிடும். ஃபான் reverseல் ஓடும்போது காற்று நம் உடம்பின் மீது படாது. நம் உடம்பைக் குளிர்விக்காது. ஹீட்டரிலிருந்து வரும் வெப்பக்காற்றை சம அளவில் குளிர்ந்த காற்றுடன் கலக்கும். பக்கவாட்டில் சுவற்றில் பட்டு கீழிறங்கும். பிறகு அறையின் நடுவில் வந்து காற்று மேலே ஏறும். Convection currents!

கீழ்கண்ட சூழ்நிலைகளில் மேற்கண்ட தியரி எடுபடாது.
1. ரூமின் உயரம் 9 அடிக்கு மேல்.
2. ஃபானுக்கும் கூரைக்கும் உள்ள இடைவெளி 1.5 அடிக்கு மேல்
3. 11 * 11 * 11 க்கு மேல் பெரிஅய அறை
4. அறையினுள் படிகளுக்கான திறந்த வெளிகள்

இந்த சூழ்நிலையில் ஃபானை எப்போதும்போல் போட்டு மெதுவாக ஓட விடவும். ரிவர்சோ பார்வர்டோ பானை ஓட விடுவது நல்லது. இல்லையென்றால் மேல் வீட்டுக்காரருக்குத்தான் நல்லது!!

போர்த்திக்கொள்ள 'comfort' என்ற ஃபோம் வைத்த ப்ளான்கெட்டை உபயோகப்படுத்துகிறார்கள். உல்லன் ப்ளான்கெட்டும் உண்டு.

மூக்கிலிருந்து வாய் வளியாக ரத்தம் வந்தால் காற்றில் ஈரப் பதத்தைக் கூட்டுவதோடு மூக்கினுள் saline spray (< $2) விட்டுக் கொள்ளலாம். மூக்கும் வாயும் காய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளவும். பயமுறுத்த வில்லை. எல்லாருக்கும் வரவேண்டும் என்பதும் இல்லை. அறையின் நான்கு மூலைகளிலும் டப்பில் தண்ணீர் வைக்கலாம். Hygrometerஐ ($7) வைத்துப்பார்த்தால் 30%-50% இருந்தால் நல்லது.

இலையுதிர் காலத்தில் காற்றில் மகரந்தம் (pollen grains) அதிகரித்து asthma வர வாய்ப்பு உண்டு. a pollen count between 200 and 400 (pollen grains per cubic meter of air) is considered “high”.

ஃப்ளூ காய்ச்சல், Flu shots for $20 என் று pharmacyயில் preventive ஊசி போட்டு விடுவார்கள்.

காலையும் மாலையும் யோகாவும் முக்கியமாக கபாலபதியும் செய்வது நல்லது. உடம்பை உஷ்ணமாக வைத்துக் கொள்ள உதவும்.

www.wunderground.comல் எப்போது 'cold front' வருகிறது என்று பார்த்து வைத்துக் கொள்ளவும். அப்போது 3-4 நாட்கள் மட்டும் வெளியே செல்ல வேண்டாம்.

பெரும்பாலும் மதியம் 12 - 4 மணிக்குள் வெளியே செல்வது சுகமாக இருக்கும். உடையை அணிந்து செல்வதில் சோம்பல் பட வேண்டாம். எல்லா உடைகளையும், இன்னெர், காப், க்ளவ்ஸ், ஸாக்ஸ் முதற்கொண்டு அணிந்து செல்லவும்.

வீட்டு நுழைவு வாயிலுக்கு வெளியே snow இருந்தால் சுத்தம் செய்ய வேண்டியது வீட்டுக்காரர் பொறுப்பு. தபால்காரர் தடுக்கி விழுந்தால் மருத்துவச் சிலவு உங்களைச் சேர்ந்தது!!
I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics