Labels

Showing posts with label finance. Show all posts
Showing posts with label finance. Show all posts

Friday, April 6, 2012

27. எப்படி ஆவெரேஜ் செய்வது? Averaging in equities


ஒரு கம்பெனி ஷேரை அதிக பட்ச விலையில் வாங்கி விட்டோம். அதை ஆவெரேஜ் (average) செய்து விற்க நினைக்கிறோம். ஆவெரேஜ் செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன. 1. Number averaging 2. Cost averaging

  




Number Average

        Cost Average

# shares
price per share
         Total
               #
       shares
     price          per share
         Total
50
100
5000
50
100
5000
50
90
4500
56
90
5040
50
80
4000
63
80
5040
50
70
3500
71
70
4970
200

17000
240

20050
1
85

1
83.55



மார்க்கெட் ஏறும்போது Cost averaging படி(அதாவது ஒவ்வொரு தவணையும் ஒரே தொகைக்கு எத்தனை ஷேர் கிடைக்கிறதோ அதை வாங்குவது) 5 ரூபாய் லாபத்தை சீக்கிரம் அடையலாம். அதாவது 88.55 ரூபாய் வரும்போது விற்று விடலாம். எண்ணிக்கை யில் ஒரே மாதிரியாக ஆவெரேஜ் செய்திருந்தால் 90 ரூபாய் வர தாமதமாகும்

Tuesday, February 7, 2012

26 NISM website



                                                          

  
வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்


தமிழ் வழிக் கல்வி கற்கும் 9ம் வகுப்பு மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு எப்படி பணத்தை நிர்வகிப்பது என்று சொல்லிக் கொடுக்க, நான் மொழிபெயர்த்த புத்தகத்தைக் கொண்டு, 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தோம்.

For further knowledge seeking, please refer to
Financial Education
Pocket Money 

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் ஆராய்ந்து கண்டு பிடிக்கவும் வந்த பொருளைச் பெருக்கவும் முறையாகப் பாதுகாக்கவும் அதை அளவறிந்து செலவு செய்யவும் நன்கு தெரிந்தவன் அரசன் ஆவான்.
பணம் வளரட்டும்

Saturday, January 21, 2012

24. 72, 115 எனும் விதிகள், Rule of 72, 115



வட்டி விகிதம் X வருடங்கள் = 72

அதாவது வட்டி விகிதம் 9% என்றால் உங்கள் வைப்பு நிதி 8 வருடங்களில் இரட்டிப்பாக ஆகும். 12% வட்டி விகிதம் என்றால் 6 வருடங்களில் இரட்டிப்பாகும். 9 X 8 = 72 ; 12 X 6 = 72

இதே போல் வட்டி விகிதம் X வருடங்கள் = 115 என்றால் உங்கள் வைப்பு நிதி 11.5% என்ற வட்டி விகிதத்தில் 10 வருடங்களில் மூன்று மடங்காகும்.
11.5 X 10 + 115

இது ஒரு பொதுவான விதி. கூட்டு வட்டியாகக் கணக்கிட்டால் இன்னும் குறைந்த காலத்தில் பெருகி விடும்

உங்களிடம் யாராவது பணத்தை 2 வருடத்தில் இரட்டிப்பாக்கித் தருகிறேன் என்று சொன்னால், 72/2 = 36% வட்டி என்று அர்த்தம். உங்களுக்கு இந்த வட்டியும் கொடுத்து, மேற்கொண்டு சம்பாதிப்பதும் அவரால் முடியாத காரியம்!

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான். செய்யத்தக்க செயல்களை உடனே செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

                                                                                                                  பணம் வளரட்டும்


Friday, January 13, 2012

23. முதலீட்டு வியூகம்: (100 – வயது). Equities n Age

முதலீட்டு வியூகம்: 100 – வயது

ஷேர்கள் போன்ற ஸ்பெகுலேஷன் வகைகளில் முதலீடு செய்யும்போது வயது ஏற ஏற ரிஸ்க்கைக் குறைக்க வேண்டும்.

நீண்ட கால முதலீட்டிற்கு (A Group) ஷேர்களே ஏற்றவை. நட்டங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர கால இடைவெளி இருக்கிறது.

உங்கள் முதலீட்டில் ஷேர்கள் இருக்க வேண்டிய சதவீதம் = 100 - உங்கள் வயது

தேடாதழிக்கிற் பாடாய் முடியும்.

தேடாது அழிக்கிற் பாடாய் முடியும்!

செல்வத்தைப் பெருக்காமல், இருப்பதைச் செலவு செய்தால், பின்பு துன்பமாய் முடியும்.



Saturday, January 7, 2012

22. நிதி நிர்வாகம் 3


Other blogs of mine.

http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com
http://indiacoincollections.blogspot.com
http://chennai.sancharnet.in/kkd_spvr

சேமிப்பு வியூகம்: 70-20-10 எனும் விதி

வருமானம் எவ்வளவாக இருந்தாலும், குறுகியகால சேமிப்பாக இருந்தாலும் அல்லது நீண்டகால சேமிப்பாக இருந்தாலும், இந்த விதி உபயோகமாக இருக்கும்.

வருமானத்தில் 
அதிக பட்சம் 70 சதவீதம் வாடகை, சாப்பாடு, சேவைக் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும்

குறைந்த பட்சம் 20 சதவீதம் சேமிப்பாகவும்

அதிக பட்சம் 10 சதவீதம் மற்ற கடன்களை அடைப்பதற்கும் பயன் படுத்த வேண்டும்

வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்துவது பகுதி சேமிப்பிற்கும்/   பகுதி அன்றாடச் செலவுக்கும் ஒப்பானது. ஏனென்றால் உங்களுக்கு    வாடகை மிச்சம் அல்லது வாடகை வருமானம் வரும்.

                                                                                                                    பணம் வளரட்டும் 

Saturday, December 17, 2011

21. நிதி நிர்வாகம் 2.



பதின்ம வயதினருக்குச் சொல்ல

பணத்தைக் கொண்டு பொருட்களை வாங்க முடியும். எல்லாவற்றையும் வாங்க முடியாது. உதாரணமாக அப்பா அம்மாவையும் அன்பையும் வாங்க முடியாது. ஆக பணத்தின் மதிப்பு என்பது ஒரு அளவுக்கு உட்பட்டதுதான். பணத்திற்கு மட்டுமே மரியாதை என்பது தவறானது.

மருத்துவத்துறையின் முன்னேற்றத்தால் சராசரி ஆயுள் கூடிக் கொண்டே வருகிறது. ஆக நம் முன்னோர்களைவிட நாம் நீண்ட நாட்கள் வாழப் போகிறோம். வயதான காலத்தில் பாதுகாப்புக்குப் பணம் தேவை. பொருளாதார மறுமலர்ச்சியின் விளைவாக வெளிநாட்டுப் பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. நமக்குத் தேர்வு செய்ய ஏராளமான வகைகள்! அதைப் பார்த்து தேவையும் ஆசையும் அதிகரித்து விட்டன. அதற்கும் பணம் தேவை. ஆகவே சேமிப்பும் அவசியமாகிறது.

சேமிக்க வேண்டுமென்றால் மேலும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். அல்லது சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். எது நல்லது?

வருமானம்செலவு = சேமிப்பு    அல்லது
வருமானம்சேமிப்பு = செலவு

ஆசைப்படுவதை எல்லாம் வாங்கக் கூடாது. வாங்குவதை ஒத்தி வைத்து விட்டுத் தேவையா, உடனடித் தேவையா, அவசியமான தேவையா என்று முடிவெடுத்து வாங்கினால் பணம் மிச்சப்படும். தேவையையும் ஆசையையும் பிரித்து உணர வேண்டும். இரண்டும் வெவ்வேறானவை.

உங்கள் தேவையை (இலக்கை) அடைய திட்டமிட வேண்டும்.

     1.   என்ன வாங்க வேண்டும்?
     2.  அதன் விலை என்ன?
     3.   எவ்வளவு நாட்களில் தேவைப்படும்?
     4.   எந்தச் செலவுகளை குறைத்து அந்தப் பணத்தை சேமிக்கலாம்?
     5.   மேல் வருமானத்திற்கு வழியிருக்கிறதா?  என்று ஆராய வேண்டும் 
                                                                                                                     
                                                                                                                      பணம் வளரட்டும்

Wednesday, December 14, 2011

20. நிதி நிர்வாகம்0.







2011 டிசம்பர் 10ம் தேதி 2வது லைன், பீச் ரோட்டிலுள்ள சென்னை பங்குச் சந்தை கட்டிடத்தில் பணத்தைப் பற்றிய விழிப்புணர்வு”  (Pocket Money Program) அதாவது சிறு செலவுக்கான தொகையை எப்படி நிர்வகிப்பது என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப் பெற்றது. அதை சென்னை பங்குச் சந்தை அமைப்பும், செபியின் என்..எஸ்.ம்மும் சேர்ந்து நடத்தினர். சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்த 50 ஆசிரியர்களுக்கு 9வது, 10வது படிக்கும் மாணவர்களுக்கு சுவையாகவும், சுலபமாக புரியும் விதத்திலும் எப்படி பணத்தைப் பற்றி எடுத்துச் சொல்வது என்று பயிற்சி அளிக்கப் பட்டது

அதில் என்..எஸ்.ம்மைச் சார்ந்த திரு. முரளி, முதலீட்டு ஆலோசகர் திரு. . நாகப்பன், சென்னை பங்குச் சந்தை அமைப்பைச் சார்ந்த திரு சம்பத் ஆகியோருடன் நானும் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

1.   பணம் மட்டுமே எல்லாவற்றையும் வாழ்க்கையில் தருமா?
2.   பணத்தைச் சேமிக்க வேண்டும், ஏன்?
3.   பணத்தைச் சிக்கனமாகச் செலவளிக்க வேண்டும், எப்படி?
4.   சேமிக்க எப்படித் திட்டமிட வேண்டும்?
5.   பணத்தை முதலீடு செய்ய வேண்டும், ஏன்?
6.   முதலீடு பெருக வேண்டும், ஏன்? எவை அவை?
7.   எந்த வகையான முதலீடு யாருக்கு நல்லது?
8.    வங்கி நடவடிக்கைகள்.
9.    எப்போது, எதற்கு கடன் வாங்கலாம்.
10. ஏமாறாமல் கடன் வாங்குவ்து எப்படி?

என்ற தலைப்புகளில் வருங்கால வளமான இந்தியாவை உருவாக்குவது என்பது குறித்து பேசினோம்.

முக்கியமாக மாநகராட்சியைச் சார்ந்த முக்கிய கல்வி அதிகாரி திரு கோவிந்தசாமி அவர்கள் பேசும்போதுநம்மில் பெரும்பாலோர் சராசரி வயதில் பாதியைக் கடந்துவிட்டோம். இனி எதிர்காலம் மாணவர்கள் கையில்தான். அவர்களை ஒழுங்கான முறையில் வழி நடத்த வேண்டியது நமது கடமைஎன்று உணர்ச்சி பூர்வமாகச் சொல்லியதுதான்!
பணம் வளரும் ----