Labels

Wednesday, July 6, 2016

53. ஆயுர்வேதம் ஆரோக்கியம் கூட்டும் 3 !
ஆயுர்வேதம் ஆரோக்கியம் கூட்டும் 3 !

ஆடி மாதம் ஆயுர்வேத எண்ணை போடல் ஆரோக்கியம் கூட்டும்.

கதகளி ஆட்டக்கார்ர்கள் 80 – 90 வயது வரை ஆரோக்கியமாக ஆடுவதற்குக் காரணம் எண்ணை போடல் ஆகும்.

நாம் ஏன் நமது ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்
1.   மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல், நம் அடிப்படைத் தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள
2.   நமது அனுபவம் மற்றவர்களுக்குப் பயன்பட
3.   குடும்பத்தினர், உறவினர் ஆகியவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், உதவிகள் ஆகியவற்றை நிறைவேற்ற
  
ஆடி மாதத்தை கற்கடகம், ராமாயண மாதம், பஞ்ச மாதம், ஆயுர்வேத மாதம் எனவும் கேரளாவில் கூறுவார்கள். ஆனி 15 முதல் மழையும், வெய்யிலும், காற்றும் தினசரி, உடனுக்குடன் மாறி மாறி வரும். தக்‌ஷினாயன த்தில் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலமாகும் இது. வர்ஷ ரிதுமழை சீஸன்என்கிறார்கள். இது வாத பூமியாகும். இந்தப் பருவத்தில் பச்சைக் காய்கறிகளில் துவர்ப்பு, புளிப்பு கூடும். பல நோய்கள் உண்டாகவும் பரவவும் ஏதுவான காலமாகும். அதனிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கற்கடக கஞ்சி குடிப்பார்கள். எண்ணெய் போட்டு உடலை வலுப்படுத்திக் கொள்வார்கள். வேலைக்குச் செல்பவர்கள் காலை ஐந்தரை மணிக்கே வந்து எண்ணெய் போட்டுச் செல்கிறார்கள். சுக சிகிட்ஷா என்கிறார்கள்

தமிழகத்தைப் போல் இங்கும் (கேரளாவில்தான்) ஆடி அமாவாசை, ஆடித் திருவாதிரை ஆகிய விழாக்களை விஷேசமாகக் கொண்டாடுகிறார்கள். ராமாயணத்தை வீடுகளிலும், விஷ்ணு கோவில்களிலும் படிக்கிறார்கள்.

பிரேஸில் கால் பந்தாட்ட வீரர் நெய்மாருக்கு 2014ல் அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்து முன்போல் விளையாட கேரள அரசு உத்தரவாதம் அளித்து அழைப்பு விட்டிருந்தது.

குடிதண்ணீரில் -  தாக சமனி - பதிமுகம் எனும் மரத்திலிருந்து மரத் துகள்களை வைத்துத் தயாரிக்கப்படும் பவுடர். இதை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்துக் குடிக்கிறார்கள். கிருமிநாசினி.. இதில் தாகம் தவிர்க்கும் செங்கருங்காலியும் சிறிதளவில் வெட்டிவேர், நன்னாரி, சுக்கு, மல்லி, கரிங்கலி முதலியவைகளும் கலந்திருக்கும்.

உட்கொள்ள மருந்து - திரிபலம் – மூன்று பழம் – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய். இவை  மலமிளக்கி, ஜீரண சக்தி, இரத்த சுத்திகரிப்பு என செயல் படுகின்றன.
அஷ்டவர்க்க கஷாயம் - 8 விதமான இயற்கை மருந்துகள் - இரவிலும், காலையிலும் -  வயிற்றுப் பொருமல், மூட்டு வலிகளைப் போக்கும். மற்ற மாத்திரைகள் தேவையைப் பொறுத்துத் தருகிறார்கள்.

தலைக்குபலாசு அஷ்வகந்தாதீ லஷாதி தைலம்

தலைக்கு - ராஸநாதி சூரணம் - ஜலதோஷம் வராமல் தடுக்க

உடம்புக்கு தேய்த்துக்கொள்ள - கற்பூர, கொத்தஞ்சுக்காதி, முருக, தன்வந்த்ரம் கலந்த எண்ணை – வாத பித்த கப உடம்பைப் பொருத்து

கிளிவெள்ளைப் பூண்டு, தேங்காய், கருநொச்சி, ஆடுலோடகம்(ஆடுதொடா), ஆமணக்கு, எருக்கு, கொத்த்ஞ்சுக்காதி, புளி இலை, முருங்கை, புங்க இலை, நார்த்த இலை இவற்றில் சில கொண்டு தயாரிக்கப்படும் சிறிய துணி முடிச்சு

பிறந்த பூமியல்லவா! “கொல்லம் கண்டா, இல்லம் வேண்டா எண்ட பாரியாள் அவள்ட சேச்சிகள் பறையும்.
கொல்லத்தில் ஹாஸ்பிட்டல் இருக்கும் இடம் காங்கத்துமுக்கு. டாக்டரின் மகன் பெயர் டாக்டர் விஷ்னு
பிரபஞ்ச வர்த்தமான குழம்பு - பஞ்சகர்மா - நவரத்ன கிளி என்று இன்னும் பல இருக்கின்றது

 
ஆமணக்கு

 மாத்திரை, கிளி

 பாபு
ஷொய் ஜூ

 ஸந்தோஷ்


Friday, July 1, 2016

52. ஆயுர் வேதம் ஆரோக்கியம் கூட்டும் 2 !

ஆயுர் வேதம் ஆரோக்கியம் கூட்டும் 2 !

 ஆடு தொடா  இலை 

எருக்கு 

கரு நொச்சி 

இந்த வருடம் (2016) ஆனி மாதத்தில் கேரளாவில் மழைக்காலம் ஆரம்பித்தது. மறுபடி மூன்றாம் வருடமாக (ஜூன் மாதம் பிற்பகுதியில்) எண்ணை போட கொல்லம் வந்து சேர்ந்தோம். “கொல்லம் கண்டா இல்லம் வேண்டா என்பது பழமொழி

முன்கூட்டியே காரைக்குடியிலிருந்து ஃபோன் செய்து வைத்தியர் இருப்பாரா, அறைகள் கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு புறப்பட்டு வந்தோம்.

காலை 10 மணிக்கு வைத்தியர் எங்கள் குறைகளைக் கேட்டு அறிந்து மருந்தாளுனரிடமும் (pharmacist) எண்ணை தேய்ப்பவரிடத்திலும் (physiotherapist) விபரங்களைக் கூறிவிட்டார். கற்கடக பருவ காலமாதலால் கூட்டம்தான். ஒரு ஆளுக்கு எண்ணை தேய்க்க ஒரு மணி நேரம் ஆகும். காலை 5.30 முதல் உள்ளூர்வாசிகள் வர ஆரம்பிக்கிறார்கள். 9 மணிக்கு மேல் வைத்தியசாலையில் தங்கி இருப்பவர்களுக்கு ஆரம்பிக்கிறார்கள்.

இரண்டு பேருக்கு சாப்பாடு, மருந்துகள், அறை வாடகை, எண்ணை தேய்க்க என்று 11 நாட்களுக்கு சுமார் 28,000 ரூபாய் வரை ஆகலாம்..

ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும் எண்ணை தேய்க்கிறார்கள். ஆனால் “Dress code” என்ன   “loin cloth” தான்!!

முதலில் ஒரு நாற்காலியில் உட்கார வைத்து உச்சந்தலையில் எண்ணை வைத்துத் தேய்க்கிறார்கள். பிறகு கழுத்திலும் முதுகிலும் தேய்த்து, தடுமன் பிடிக்காதிருக்க ராஸனாதிப் பொடியும் தேய்த்துவிடுகிறார்கள். தந்வந்த்ர எண்ணையில் முருக எண்ணையும், கற்பூர எண்ணையும் கலந்து (சுமார் 1 ½ லிட்டர்) சூட்டோடு தேய்க்கிறார்கள்.அதற்கென காஞ்சீர  மரத்தால் செய்யப்பட்ட மேஜையில் கால்களை நீட்டி உட்காரச் சொல்லி இரண்டு பக்கமும் இருவர் நின்று சூடான எண்ணை கொண்டு அழுத்தித் தேய்ப்பார்கள். நம்மை உட்கார வைத்து கைகளை மஸாஜ் செய்வார்கள்.

பிறகு குப்புறப் படுக்க வைத்தும், மல்லாக்க படுக்க வைத்தும் கை விரல் முதல் கால் விரல் வரை அழுத்தி நீவி விடுவார்கள்.

வலி இருக்கும் இடத்தில் சற்று நேரம் கூடுதலாகவும், அழுத்தம் கூடுதலாகவும் தேய்த்து விடுவார்கள்.

அதன் பின் நீராவிக் குளியலில் நன்கு வேர்க்கும்வரை அல்லது நம்மால் தாங்க முடிந்த வரை இருக்க வேண்டும். துர்நீர் வெளியேறவும் மருந்துகளின் குணங்கள் உள்ளேறவும் பயன் படுகின்றது இது. இதற்காக பிரத்யோகமாக காட்டுப் பலா (அய்னி/அஞசிலி) மரத்தாலான பெட்டி ஒன்று உண்டு. அதனுள் ஒரு நாற்காலியும் உண்டு. பிரஷர் குக்கரிலிருந்து வரும் ஆவி உள்ளே செலுத்தப் படுகிறது. தலை மட்டும் வெளியே தெரியும்படி கதவைச் சாத்தி விடுவார்கள்


இறுதியாக கடலை மாவு தேய்த்து சுடு தண்ணீரில் குளித்து ராஸனாதிப் பவுடரை முகர்ந்து பார்த்து, உச்சந்தலையில்  தேய்த்துக்கொண்டு வரலாம்.

இள்ஞ்சூட்டில் எண்ணையை மஸாஜ் செய்வதால் உடம்பில் உள்ள நாடி நரம்புகள் தசைகள் இளகி ரத்த ஓட்டம் சரியான முறையில் நடைபெறும். எண்ணையில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படும். மூட்டு வலியும் குறையும். பசி கொடுக்கும். மேலும் அழுத்தி மஸாஜ் செய்பவதால் கல்சியம் படிந்து இறுகிப்போன எலும்பு இணைப்புகளும், தசையை எலும்புடன் இணைக்கும் நார்களும் இள்கி தளர்வு கொடுக்கும். இது முதல் 3-5 நாட்களுக்கு நடக்கும். பிற்கு உடலுக்கு பலமூட்டவும், மறுபடியும் வராமல் தடுக்கவும் (கிளி) சிகிச்சை தொடரும். எண்ணை தேய்த்ததைப் போலவே கிளி முடிச்சையும் சூடான எண்ணையில் நனைத்துத் தேய்ப்பார்கள்.


athira, sutha, prasanna seniorWednesday, October 7, 2015

51. சீனா செல்ல, visiting China

On the way to Big Buddha

சீனா செல்ல!
                                                       முன்னேற்பாடு:

Forbidden city Walk
1.   முதலில் வங்கியில் ஒரு ஆளுக்கு 1,50,000 இருப்பு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும்.
2.   வங்கியின் சின்னமுள்ள தாளில் மேலாளரின் முத்திரையுடன் 6 மாத கணக்கு விபர அறிக்கை ஒன்றுகையெழுத்திட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
3.   கடவுச் சீட்டு முடிய குறைந்தது 6 மாதங்களாவது இருக்க வேண்டும். 
4.   வெள்ளைப் பின்னணியில் கட்டம் கட்டாத
                                  ”கடவுச்சீட்டு புகைப்படஅளவில், 33 மிமீ அகலம் 48 மிமீ  உயரம்,  இரண்டு புகைப்படம் வேண்டும்.

5.   தோராயமாக முதலில் சுற்றுலா தேதிகளை முடிவு செய்து கொள்ளுங்கள். தகுந்த பருவகாலம், மலிவான விமானக் கட்டணங்கள் கிடைக்கும் காலம் ஆகியவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆகஸ்டு கடைசியில் தகுந்த காலம் என நினைக்கிறேன்.The Peak, Galleria
ஹாங்காங், மக்காவ், ஷாங்ஹாய், பெய்ஜிங் டூர்என்று வலைத்தளங்களில் தேடி எந்தெந்த ஊர்களைப் பார்க்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து அந்த ஊர்களில் எதைப் பார்க்க வேண்டும், குறிப்பிட்ட நாட்களில் அந்த இடத்திற்கு விடுமுறை உள்ளதா என்பதையும் தெரிந்து கொண்டு தேர்ந்தெடுத்து பின் ஹாலிடே பாக்கேஜ்ஜஸ்தரும் டிராவல் ஏஜெண்டுகளைப் பார்த்து உங்களுக்கு வேண்டியதைக் கூறவும். ஓருவருக்கு குறைந்தது  95,000 ஆகலாம்; பொருட்கள் vaaங்கத் தனி!

With Thiru Arun and Thiru Narayanan Family
 டிராவல் ஐட்டினெரியையும், ”ஹோட்டல் புக்கிங்கையும் நீங்கள் ஒத்துக் கொண்ட பிறகு  சீனா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ”சைனீஸ் கான்ஸுலேட்டுக்காக, ஒரு கவரிங் லெட்டரையும் எழுதி உங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள். சைனாவிற்கு மட்டும் விசாவிற்கு ஒருவருக்கு 6000 ரூபாய் ஆகும். டெல்லியில் வாங்க வேண்டும். அவர்கள் ட்கடுவதென்னவோ 2800 ரூபாய்தான். ஹாங்காங்கில் இறங்கியவுடன் 14 நாட்கள் விசா தருவார்கள். அதற்கு மேல் வேண்டுமென்றால் இந்தியாவில்தான் விசா வாங்கிக் கொள்ள வேண்டும்.

The Great Wall of China
Only Cathay Pacific operates a non-stop flight. It’s 5 hours. Take a chinese translation print out from Google with you. You need not speak chinese. Just show them the print out in English equivalent of Mandarin in mandarin characters.

Or take a personal car tour with an English speaking guide like what we did, because we thought that we may not be able to walk fast in a group.

Hong Kong visa and Macau visa are free for 14 days on landing. You have to write a Hong  Kong address in your immigration card.


Thursday, June 25, 2015

50. தந்தையர் தினம் ! வாழ்க்கை அனுபவங்கள் பலருக்கு உதவட்டுமே.


1905ல் என் தந்தையாரின் பாட்டனார் குன்றக்குடியில் யஜூர் வேத பாடசாலை நிறுவி நடத்தி வந்தார்கள். பர்மாவிலும் மலாயாவிலும் லேவாதேவியும் மர வியாபரமும் நடத்தி வந்தார்கள். என் பாட்டனார் என் தகப்பனாருக்கு மூன்று வயதிருக்கும்போதே இறந்து விட்டார்களாம், அவர்களின் பாட்டனார்தான் அவர்களை வளர்த்தது. 14 வயதில் பர்மாவிற்கு கொண்டு விற்கப் போனார்களாம். சொந்த லேவாதேவிக் கடையில் வேலை பழகுவதற்கு. அதாவது முதலைக் கொண்டு போய் வியாபாரம் செய்வது. ( இன்னொரு சமூகத்தில்சாமர்த்தியம்பன்னப் போயிருக்காங்க என்று சொல்லுவார்கள். அதாவது மலாயாவிற்கு சென்று அங்கு கடன் வாங்கி தொழில் செய்து, கடனையும் அடைத்து லாபத்துடன் திரும்பி வருவது. Break even னுக்கு மேலே! மூன்று வருடங்களில். Very enterprising !  18 வயதிலிருந்து 33 வயது வரை ராதா அண் கோ, கமலா அண் கோ, சிவா அண் கோ என்று ஷேர் கம்பனிகளும் ( திரு பழ. கருப்பையா அவர்களின் தந்தையார் பாசின் பழநியப்ப செட்டியார் அவர்கள் பள்ளித் தோழர், ஒரு பார்ட்னர்!) அம்பாள் அண் கோ, பெட்றோ பாட்டரி டிப்போ என்று ஜெனெரல் மெர்ச்சண்ட்ஸ் ஷாப்பிகளும் நடத்தி வந்தார்கள்.

1945ல் என் தந்தையவர்களுக்கு, 33 வயதில், ஷேர் மார்க்கட்டில் 1 லட்ச ரூபாய்க்கு மேல் நட்டம் வந்ததாம்.
முன்னோர்கள் வைத்திருந்த சொத்தை விற்று அதை சரி செய்திருக்கலாம். கையில் இருந்த ஷேர்களை விற்று சுமார்லட்ச ரூபாயை அடைத்து விட்டு, மீதமிருந்த சிறிய தொகையை மலாயாவிற்குச் சென்று சம்பாதித்து அனுப்புவேன் என்று நண்பர்களிடம் கூறி 1948ல் மலாயாவிற்குப் புறப்பிட்டுச் சென்றதாக என் தகப்பனார் என்னிடம் கூறியுள்ளார்கள், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் ஜப்பானியர்களின் சித்திரவதைக்குப்பின் மலாயா பிரிடிஷாரின் கைக்குத் திரும்ப வந்து விட்டது. அங்கு எல்லாம் ஜப்பான் நோட்டுக்களாகப் போனதால் ரொக்கம் கையில் இல்லை. பிரிடிஷ் கரன்சி மறைத்து வைத்திருந்தவர்களிடம் மட்டுமே பணம் இருந்தது, ஆனால் 2 வீடுகளும் தென்னந்தோப்பும் இருந்தன. எங்கள் பங்காளிகளில் ஒருவர் தானாகவே முன் வந்து உதவி செய்கிறேன் என்று கூறியபோதும் அவர்களிடம் ஒரு வீட்டை அடமானம் வைத்தும் மற்றவற்றை விற்றும் லேவாதேவி தொழிலை ஆரம்பித்தார்களாம். தன் திறமையையும் உண்மையையும் முதலில் மதித்தவர்கள் என்பதால் ராமசாமி பெரியப்பச்சி மீது கடைசி வரை அவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள். மலேசியாவில் எங்கள் கடை 1928 நவம்பரில் எங்கள் பாட்டைய்யா மெ.நாக.மெய்யப்ப செட்டியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 20 வருடங்கள் ஏஜெண்டுகளளாலேயே நடத்தப்பட்டு வந்திருக்கின்றது. அவ்வளவு நம்பிக்கையான காலம் அது! 1948ல் தான்  என் தகப்பானாரவர்கள் பத்து பகாட்டிற்குச் (வத்துப்பகார்) சென்றிருக்கிறார்கள். நான் 11 வயதில் 1959ல் பத்து பகாட்டிற்குச் சென்றேன்.

உழைப்பவர்களைக் கண்டால் மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயங்க மாட்டார்கள்.”அப்பறம்என்கிற பேச்சே கிடையாது. உடனே சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்கள்

சில உறவினர்களிடம் கடன் கொடுக்கும்போது எழுதி வாங்குவார்கள். எனக்குத் தெரியும், இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் திருப்பித் தரப் போவதில்ல என்று. “மனுஷங்காரியம் நிச்சியமில்லைப்பா, ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். நல்லா வரும். அப்ப தந்திருவாகஎன்பார்கள் அப்படி 10, 15 வருடம் சென்று பணம் திரும்பி வந்ததும் உண்டு.

என் தாயாரின் பணத்தைத் தனிக்கடையாக வைத்து சம்பாதித்துத் தந்தார்கள். பிற்பாடு என் உறவினர்கள் என் தந்தையிடம் நீங்க எங்க பணத்தையும் பெருக்கித்தரவேண்டுமென்று கேட்டு அவர்கள் செய்து கொடுத்தார்கள்.”தாயைக் கொல்லாத தொழில் வட்டித் தொழில் என்பார்கள.

ஷேர் டிரேடிங், புத்தகங்கள் வாசிப்பது, வரைவது, சங்கீதம் கேட்பது, மொழிகள் கற்றுக் கொள்வது அவர்களது பொழுது போக்காகும். 96 வயதில் இயற்கை எய்தும் வரை நன்கு செயல் பட்டார்கள். 93 வயதில் மலையாளம் எழுதக் கற்றுக் கொண்டார்கள். தமிழ், ஆங்கிலம் தவிர உருது, ஹிந்தி,மலையாளம், ஜாவி மலாயும் எழுதத் தெரியும். இறப்பதற்கு 13 நாட்கள் முன்பு பட்ஜெட் டிரேடிங், ஹாஸ்பிட்டலில் இருந்தவாரே!
  
1981ல் பர்மா காலனிக்கு எதிர்புரம் கற்பக விநாயகர் நகர் அமைத்து கோவிலும் கட்டி அவார்கள் வாழ்நாள் முழுதும் டிரஸ்டியாக இருந்து வந்தார்கள். 9 பார்ட்னர்கள். நிதி, படிப்பு, ஆள்பலம் கொண்ட அனைவரையும் அரவணைத்து, சுமார் 32 ஏக்கர், 346 பிளாட்டுகளை மூன்று வருடங்களில் விற்று முடித்தார்கள். 9 பார்ட்னர்கள் ! !

காரைக்குடி, சேலம், அரூர் ஆகிய நகரங்களில் தங்க நகை அடகு, மறு அடகு கடைகளை நடத்தி வந்தார்கள். காரைக்குடியில் சிமிண்ட் ஏஜென்சியும் நடத்தி வந்தார்கள். பிறகு வைர வியாபாரத்தில் நேரடிக் கொள்முதல் செய்து நடத்தினார்கள்.

மற்றவர்களுக்கு தொந்தரவில்லாமல் இருக்க தம் உடல் நலத்தைப் பேண வேண்டும் என நினைப்பார்கள். பண லாப நட்டங்களுக்காக கவலைப் பட்டதே கிடையாது.

எளிமையான வசதிகள் நிறைந்த வாழ்க்கையை விரும்புவார்கள். எங்களையும் அப்படியே பழக்கி விட்டார்கள்.

ஆலோசனை கேட்பவர்களுக்கு, தனக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கு நல்லதையே  கூறுவார்கள். அவர்களின் இறுதிச் சடங்கின்போது, கட்டத்தளத்தில் கூடியிருந்த கூட்டமே. அதற்குச் சாட்சி.

அப்பச்சி, ஐய்யா, மாதிரி இனிமே எங்களுக்கு உண்மையாக யோசனை பாசனை சொல்ல ஆளில்ல அண்ணே!” அம்மன் சன்னதி கடைகளிலிருந்து வந்த அத்தனை பேரும் சொன்னார்கள். எங்கள் பெரியாயா பேரன் கும்பாபிஷேகதிற்காக காப்புக் கட்டியிருந்ததை அவிழ்த்து வைத்து விட்டு வந்து விட்டார்!

பிரச்சினைகளை வரிசைப்படுத்திவர வர நகளுவோம்என்பார்கள். ”அப்பச்சி! இன்கம் டாக்ஸ்ல கணக்க இந்த வருஷம் மலாய்ல குடுக்கனும்னு சொல்றாக. நீங்க இந்தியாவில இருக்கீங்க. ஆடிட்டருக்கு மலாய் தெரியல. அவரும் யார்ட்டயோ குடுத்து வாங்குவார் போல. அப்புறம் இண்டர்வியூ வேற போகணும். அவன் என்ன கேட்பானோ?” என்று நானும் சரமாரியாக ஃபோனில் பேச, அப்பச்சி சொன்ன பதில்வரவர நகளுவம்”. பின்னொருநாளில் நான் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டேன். தேவர்கள் சிவபெருமானிடம் வந்துஇந்திர லோகமே பற்றி எரிகிறது இங்கும் வரப் போகுது என்ன செய்வதுஎன்று கேட்டார்களாம் அதற்கு சிவ பெருமான் சொன்ன பதில்தான்வரவர நகளுவம்”  பதட்டப்படாதே, ஒன்றொன்றாகக் கடந்து போவோம் என்று அர்த்தமாம்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு, வயதான காலத்திலும் போரடிக்காமல் பொழுது போக்குவது எப்படி என்று அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டோம்.

ஹாஸ்யத்திலும் குறைந்தவரல்ல:
ஒரு முறை மத்தியானம் ஸ்கூல் விட்டு வந்து கதவைத் திறந்தபோது, இடித்துக் கொண்டு விட்டேன். பசி வேறையா! கதவை ஓங்கி ஒரு உதை விட்டேன். படுத்துக் கொண்டிருந்த அப்பச்சிடேய் என்னடா அதுஎன்றார்கள். “ஒன்னுமில்ல கதவு இடிச்சுருச்சு” ”என்ன கதவு இடிச்சுருச்சுருச்சா? அறிவு கெட்ட கதவு என்று சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டார்கள்
வடையைக் கடித்துத்திங்காதே. பிச்சுச் சாப்டம்னா, யாரும் வந்தா அவங்களுக்கு ஒரு பகுதியக் கொடுக்கலாம். நல்ல பிரண்ட்ஷிப் கிடைக்கலாம்.யார் கண்டா நல்ல பிஸினஸ் பார்ட்னரே கிடைக்கலாம!” ஓ அப்ப பாசின் பழ. இப்படித்தானோ என்று நினைத்துக் கொண்டேன்.