Labels

Tuesday, March 7, 2017

58. தெரிந்தது, புரிந்தது, நினைவில் இருப்பது

தெரிந்தது, புரிந்தது, நினைவில் இருப்பது

தெரிந்தது, புரிந்தது, நினைவில் இருப்பது எல்லாம் வெவ்வேறு என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அதற்கு ஒரு கதை இருக்கிறது. நன்றி: தெய்வத்திரு தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள். மாணவர்களுக்காக, கற்பித்தலுக்காக, களம் மாற்றப் பட்டிருக்கிறது.

Conduction, convection, radiation in solids, liquids and gases or vacuum respectively அல்லது கடத்தல், பரவுதல், கதிர்வீச்சு என்று ஒரு ஆசிரியர் பாடம் நட்த்திக் கொண்டிருந்தார். அப்போது தெர்மாஸ் ஃப்ளாஸ்க் (Thermos Flask) ஐ உதாரணமாகக் கொண்டு விளக்கினார். அப்போது “ இது சூடானவற்றை சூடாகவும், குளிர்சிசியான பொருளை வைத்தால் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் என்றார்.

மறுநாள் ஒரு பையன் ஃப்ளாஸ்க்கோடு வந்தான். ஆசிரியரும் தூக்கிப் பார்த்து விட்டு என்னப்பா கனமா இருக்கே? உள்ளே என்னப்பா இருக்கு? என்றார்.
பையன் சொன்னான்ஒரு கப் ஐஸ்கிரீமும், ஒரு கப் காப்பியும்

இதுதான் தெரிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்!

நினைவில் நிறுத்த

புத்தகத்திலேயே முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடு, நெளிவு அடிக்கோடு,   ◯ ◯ ◯வட்டங்கள் போட்டு வைக்கலாம். ஒவ்வொரு பாராவிற்கும் ஒரு முக்கியமான தகவல் இருக்கும். அந்த ஒரு வார்த்தையை அல்லது வாக்கியத்தை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு விரிவாக்கம் செய்து எழுதலாம்.
இவ்வாறு செய்வதால் பரீட்சைக்கு முந்தின நாள் ரிவைஸ் செய்ய வேண்டிய பக்கங்கள் குறைவாக இருக்கும். பயம் ஏற்படாது.

தனி நோட்டில் குறிப்புகள் எடுக்கும்போது வரிசைப் படுத்தி எழுதுங்கள். வாக்கியங்களாக இல்லாமல், சிறு சிறு வார்த்தைகளாக இருக்கட்டும். இந்த வார்த்தைகளைப் பார்க்கும்போது அந்தத் தலைப்பு சம்பந்தமான அனைத்து விபரங்களும் ஞாபகத்திற்கு வ்ரவேண்டும்.

இரைந்து படிக்கலாம். அப்போது கண் வாய் காது என அனைத்தும் பாட்த்திலேயே இருக்கும்.

ஒருவரைக் கேள்வி கேட்கச் சொல்லி பதில் சொல்லிப் பழகலாம். அப்படிச் செய்யும்போது மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறீர்கள். மூளைக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து, பதியப்பட்ட தகவல்களை மீட்டு சரி பார்க்க ஆரம்பிக்கும். எவ்வளவுதான் கிரிக்கெட்டை டிவியில் பார்த்தாலும், திடலில் விளையாண்டால்தான் நமக்கு எவ்வளவு கிரிகெட்டைப் பற்றி தெரிந்திருக்கிறது என்று நமக்கும், பிறருக்கும்! தெரியும்.


மணி அடித்தால் மருந்து

அந்தக் கால சினிமாவில் முடியாமல் இருக்கும் மாமியாருக்கு மருமகள் மருந்து கொடுக்கும் காட்சி வரும். மாமியார் படுத்திருக்க, மருமகள் அருகில் அமர்ந்திருக்க, அலார கடிகாரமும் அருகிலிருக்கும். நடு நிசியில் அலாரம் அடித்தவுடன் மருமகள் கண் விழித்து மருந்தை அளவு கிளாசில் ஊற்றிக் கொடுப்பாள்.                               

டாக்டர் ஒரு நாளைக்கு மூன்று வேளை என்று சொன்னால் சரியாக 8 மணி நேரத்திற்கு ஒரு தடவை என்றும் நான்கு வேளை என்றால் 6 மணி நேரத்திற்கு ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த மருந்து மாத்திரைகள் தொடர்ச்சியாக வேலை செய்யும். இடைவெளி அதிகமானால் மருந்து மறுபடியும் முதலில் இருந்து தன் வேலையை ஆரம்பிக்க வேண்டும். குணமாக நாளாகலாம். பெரும்பாலும் வெறும் வயிற்றில் மாத்திரைகள் சாப்பிடக் கூடாது.



Wednesday, January 4, 2017

57. துணுக்குகள் – Tit-Bits

தோல உரிச்சு உப்புப் போட்ருவேன்”, உப்புத் தண்ணீல கொப்பளிங்க

தொண்டை கரகர என்று ஆரம்பிக்கும்போதே உப்புத் தண்ணீரில் கொப்பளித்தால் ஜலதோஷத்தைத் தவிர்த்துவிடலாம் என்பர். நோய்க்கிருமிகள் 2,4,16,256 என்ற் கணக்கில் பெருகுவதால் நம் உடல் 2 மணி நேரத்தில் அதன் வசமாகிவிடும். ஆகவே இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும். சரி. எவ்வளவு உப்புப் போடவேண்டும்? “தோல உரிச்சு உப்புப் போட்ருவேன்என்பார்களே அந்த அளவிற்கா? அதிகமாக உப்புப் போட்டால் தொண்டை ரண களமாகிவிடும்!! தண்ணீரில் உப்புப் போட்டிருக்கிறது என்று லேசாகத் தெரியுமளவுக்குப் போட்டால் போதும்.

மருந்தின் அளவு

ஒரு மருந்து செயல்பட உகந்த, குறைந்த பட்ச அளவு தேவைப்படும். அந்த அளவிற்கு குறைந்து இருந்தால் அது நமது உறுப்புகளைச் செயல்படத் தூண்டி விட முடியாது. அதற்கு மேல் மிக அதிகமாக இருந்தாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 2mg  என்றால் பெரும்பாலான generic மருந்துகளில் 2 mg என்று சொன்னாலும் அப்படி இருப்பதில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆகவே ஒரு pharmacist அல்லது மருத்துவரைக் கலந்து ஆலோசித்தபின் generic மருந்துகளை வாங்கவும்.

யோகா பயிற்சிகளை மிக மிக மெதுவாக-மெல்ல- செய்யவும்

அது அரசு 
40 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் தொலைபேசிக் கட்டணங்கள், 3 நிமிடங்களுக்கு, 20 காசிலிருந்து 10 காசாக்க் குறைக்கப்பட்டது. எல்லாருக்கும் ஆச்சரியம். இதற்கு திரு லீ குவான் யூ கூறியது. ஒரு தவகலைச் சொல்வத்ற்கு பேருந்தில் ஏறிச் சென்று சொல்வதென்றால் 20-60 காசுகள் சிலவாகும். பெட்ரோலை இறக்குமதி செய்ய அந்நியச் செலவாணி வேண்டும். நேரமும் வீணாகும். தொலைபேசிக் கம்பிகள் ஒருமுறை நிறுவப்பட்டால் போதும் பராமரிப்புச் சிலவுகள் குறைவு. பல வருடங்களுக்குப் பயன் அளிக்கும். கட்டணத்தைக் குறைப்பதால் பயனீட்டாளர்கள் அதிகரிப்பர். ஆகவே இதனால் அரசாங்கதின் அனாவசியச் சிலவு குறைவதோடு பொது மக்களுக்கும் பலன் உண்டு.இதை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வானொலியில் சொல்லிக் கொண்டே இருப்பர்கள். இந்தியாவில் சிலோன் வானொலியும் மலேசியாவில் சிங்கபூர் வானொலியும் அப்போது பிரபல்யம். நமது தினமலரைப் போல அங்கும் பத்திரிக்கைகளில் இதுபோன்ற் செய்திகளை சிறு சிறு வாக்கியங்களில் இலவசமாக வெளியிடுவார்கள்.