Labels

Showing posts with label education. Show all posts
Showing posts with label education. Show all posts

Tuesday, March 7, 2017

58. தெரிந்தது, புரிந்தது, நினைவில் இருப்பது

தெரிந்தது, புரிந்தது, நினைவில் இருப்பது

தெரிந்தது, புரிந்தது, நினைவில் இருப்பது எல்லாம் வெவ்வேறு என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அதற்கு ஒரு கதை இருக்கிறது. நன்றி: தெய்வத்திரு தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள். மாணவர்களுக்காக, கற்பித்தலுக்காக, களம் மாற்றப் பட்டிருக்கிறது.

Conduction, convection, radiation in solids, liquids and gases or vacuum respectively அல்லது கடத்தல், பரவுதல், கதிர்வீச்சு என்று ஒரு ஆசிரியர் பாடம் நட்த்திக் கொண்டிருந்தார். அப்போது தெர்மாஸ் ஃப்ளாஸ்க் (Thermos Flask) ஐ உதாரணமாகக் கொண்டு விளக்கினார். அப்போது “ இது சூடானவற்றை சூடாகவும், குளிர்சிசியான பொருளை வைத்தால் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் என்றார்.

மறுநாள் ஒரு பையன் ஃப்ளாஸ்க்கோடு வந்தான். ஆசிரியரும் தூக்கிப் பார்த்து விட்டு என்னப்பா கனமா இருக்கே? உள்ளே என்னப்பா இருக்கு? என்றார்.
பையன் சொன்னான்ஒரு கப் ஐஸ்கிரீமும், ஒரு கப் காப்பியும்

இதுதான் தெரிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்!

நினைவில் நிறுத்த

புத்தகத்திலேயே முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடு, நெளிவு அடிக்கோடு,   ◯ ◯ ◯வட்டங்கள் போட்டு வைக்கலாம். ஒவ்வொரு பாராவிற்கும் ஒரு முக்கியமான தகவல் இருக்கும். அந்த ஒரு வார்த்தையை அல்லது வாக்கியத்தை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு விரிவாக்கம் செய்து எழுதலாம்.
இவ்வாறு செய்வதால் பரீட்சைக்கு முந்தின நாள் ரிவைஸ் செய்ய வேண்டிய பக்கங்கள் குறைவாக இருக்கும். பயம் ஏற்படாது.

தனி நோட்டில் குறிப்புகள் எடுக்கும்போது வரிசைப் படுத்தி எழுதுங்கள். வாக்கியங்களாக இல்லாமல், சிறு சிறு வார்த்தைகளாக இருக்கட்டும். இந்த வார்த்தைகளைப் பார்க்கும்போது அந்தத் தலைப்பு சம்பந்தமான அனைத்து விபரங்களும் ஞாபகத்திற்கு வ்ரவேண்டும்.

இரைந்து படிக்கலாம். அப்போது கண் வாய் காது என அனைத்தும் பாட்த்திலேயே இருக்கும்.

ஒருவரைக் கேள்வி கேட்கச் சொல்லி பதில் சொல்லிப் பழகலாம். அப்படிச் செய்யும்போது மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறீர்கள். மூளைக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து, பதியப்பட்ட தகவல்களை மீட்டு சரி பார்க்க ஆரம்பிக்கும். எவ்வளவுதான் கிரிக்கெட்டை டிவியில் பார்த்தாலும், திடலில் விளையாண்டால்தான் நமக்கு எவ்வளவு கிரிகெட்டைப் பற்றி தெரிந்திருக்கிறது என்று நமக்கும், பிறருக்கும்! தெரியும்.


மணி அடித்தால் மருந்து

அந்தக் கால சினிமாவில் முடியாமல் இருக்கும் மாமியாருக்கு மருமகள் மருந்து கொடுக்கும் காட்சி வரும். மாமியார் படுத்திருக்க, மருமகள் அருகில் அமர்ந்திருக்க, அலார கடிகாரமும் அருகிலிருக்கும். நடு நிசியில் அலாரம் அடித்தவுடன் மருமகள் கண் விழித்து மருந்தை அளவு கிளாசில் ஊற்றிக் கொடுப்பாள்.                               

டாக்டர் ஒரு நாளைக்கு மூன்று வேளை என்று சொன்னால் சரியாக 8 மணி நேரத்திற்கு ஒரு தடவை என்றும் நான்கு வேளை என்றால் 6 மணி நேரத்திற்கு ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த மருந்து மாத்திரைகள் தொடர்ச்சியாக வேலை செய்யும். இடைவெளி அதிகமானால் மருந்து மறுபடியும் முதலில் இருந்து தன் வேலையை ஆரம்பிக்க வேண்டும். குணமாக நாளாகலாம். பெரும்பாலும் வெறும் வயிற்றில் மாத்திரைகள் சாப்பிடக் கூடாது.



Saturday, September 17, 2016

56. ஷாக்காயிட்டேன் !



56. ஷாக்காயிட்டேன் !

(< 10 மில்லிஆம்பியர் ) சும்மாதான் தொட்டென்பா, ஷாக்கடிச்சிருச்சுஅதைச் சொல்ல அவர் இருக்காரே !!
(>20 மில்லிஆம்பியர்) ஆக இருந்திருந்தால் சொல்ல அவர் இருக்க மாட்டார்

வீட்டிற்குள் வரும் மின்சாரம் மூன்று வயர்களைக் கொண்டது. ஃபேஸ் (Phase or Live,L,), நியூட்ரல் (Neutral, N ) மற்றும்
எர்த் (தரை/பூமி, Earth, E.)



எலெக்ட்ரான்கள் ஃபேஸ் வயர் வழியாக சக்தியை கொண்டு வந்து மின் சாதனத்தினுள் சூடாக்குவது, சுற்றுவது, வெளிச்சம் கொடுப்பது போன்ற வேண்டிய வினைகள் புரிந்து நியூட்ரல் வயர் வழியாக வெளியேறும்.

அயர்ன்பாக்ஸ், கிரைண்டர், மோட்டோர்கள் இன்னும் பல மின் சாதனங்களின் வெளிப்புறம் உலோகத்தால் ஆனவை. கிழே விழுவது போன்ற ஏதாவது ஒரு காரணத்தினால் லைவ் வயர் இந்த உலோகத்தைத் தொட நேர்ந்தால், கசியும் மின்சாரம் இந்த பெட்டியினுள் பாய்ந்து விடும். நாம் அதைத் தொட நேர்ந்தால் நமக்கு மின் அதிர்ச்சி ஏற்படும். பூமியும் நாமும் ஒரே சக்தி நிலையில், 0 வோல்ட்டில் இருக்கிறோம். ஃபேஸ் வோல்டேஜ் 240 ஆகவும் எர்த் வோல்டேஜ் 0 ஆகவும் வித்தியாசம் இருப்பதால் மின்சாரம் நம் உடம்பு வழியாக பூமிக்குச் செல்கிறது. ஷாக் 0அடிக்கிறது.  இதைத் தவிர்க்க அந்த உலோகப் பெட்டியினை ஒரு வயர் கொண்டு பூமியுடன் இணைக்க வேண்டும்பெட்டியிலிருந்து மின்சாரம் பூமிக்குள் பாய்ந்து விடும். பூமியும் நாமும் ஒரே சக்தி நிலையில் இருப்பதால் மின்சாரம் நம்முள் பாய்வதில்லை.






எர்த் வயர்  நம்மை ஷாக் அடிப்பதிலிருந்து காப்பாற்றும், ஆனால் கரெண்டு பில் எகிறி விடும். மின்சாரம் உள்ளே resistance  உள்ள பாகங்களின் வழியாகப் பாயாது. நியூட்ரல்  வழியாகவும் இ பி க்குத் திரும்பாது. ஆகவே மின்னோட்டத்தின் அளவு அதிகரிக்கும். பூமி எவ்வளவு எலெக்ட்ரான்களை வேண்டுமானாலும் உறிஞ்சிக்கொள்ளும். அப்ப பில்லிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது?! அங்கதான் நம்ம MCB Mini Circuit Breaker, or Fuse  உதவுகிறது. MCB டிரிப் ஆகும். ஃப்யூஸ் உருகிவிடும், சரியான அளவுள்ள காரீய,ஈய வயர் உபயோகப் படுத்தியிருந்தால். சும்மா காப்பர் வயரை உருவி மாட்டியிருந்தால் கடவுள்தான் காப்பாத்தனும்! தீப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

எர்த் வயரும் வேண்டும். முறையான ஃப்யூஸ் வயரும் வேண்டும். நியூட்ரலையும் எர்த்தையும் இ பி லைன்மென் ஒன்று சேர்த்து விடுவார்கள். ஆகவே நீங்கள் தனியாக எர்த் அடிப்பது நல்லது. If not கம்ப்யூட்டர் அடி வாங்கும்.

Phase to neutral    240 V  இணைப்பு சரியாக இருந்தால் பல்ப் நன்றாக எரியும்
Phase to earth         240 V   எர்த் இணைப்பு சரியாக இருந்தால் பல்ப் நன்றாக எரியும்
Earth to Neutral      < 3 V ஒரு பல்பைக் கனெக்ட் செய்தால் டிம்மாக எரியும். or voltmeter will show <3V

எச்சரிக்கை: அனுபவமிக்க பழுதுபார்ப்பவர்களைக் கொண்டு பழுது நீக்கவும். நீங்களாக எதையும் தெரியும் என்று தொடாதீர்கள். ஒரு ஷணத்தில் மறதியும் அதன் விளைவுகளும் கற்பனையை மீறி இருக்கும். நான் ஒரு இயற்பியல் ஆசிரியராய் இருந்தாலும் எலெக்ட்ரீசியனைக் கொண்டுதான் பழுது நீக்குவேன். 3/100 Ampere போதும் மேலே அனுப்ப! MCB, Fuse  does not work speedily at times. படிப்பறிவு வேறு. பட்டறிவது வேறு! எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டால் அனுபவம்தான் காப்பாற்றும். நம் தொழில் எலெக்ட்ரீசியன் அல்ல.
சில் சொற்கள்
Maximum = அதிக பட்சம்
Minimum = குறைந்த பட்சம்
Optimum = உகந்த அளவு
Threshold = ஒரு நிலையைத் துவக்கத் தேவையான குறைந்த அளவு

யோகாசனம் அல்லது ஃபிஸியோதெராப்பி பயிற்சிகளை மெல்ல மெல்ல மெதுவாக கடுமையின்றிச் செய்யவும்



Monday, March 16, 2015

47. டுபெய்? துபாய்? மணல் நகரம்? 1

டுபெய்? துபாய்? மணல் நகரம்?





அண்மையில் திரு பிச்சப்பன், திருமதி வள்ளியம்மையின் அழைப்பின் பேரில் துபாய்க்கு 15 நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டோம். விருந்தோம்பலின் அடையாளம், அவர்கள்.


திரு சபா மெய்யப்பன், திருமதி சீதாலெஷ்மி அவர்களின் அழைப்பின் பேரில் Legacy International நடத்தும் வகுப்பைப் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. திரு சபா மெய்யப்பன், திரு குணா ஆகியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது. திரு ரவீந்திரன், திருமதி தேனம்மை, திருமதி தேன்மொழி திரு சோலை ஆகியோர்கள் குழந்தைகளை வழி நடத்துகிறார்கள். பொது மேடைகளில் பேசுவது, குழுக்களில் பங்கேற்பது, நிர்வகிப்பது, ஆளுமை, உடல் மொழி, ஒவ்வொருவரின் தனித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்வது எப்படி என்று தனிதனியாகச் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்தேன். ஐந்தாம் வகுப்பு முதல் 10வது வரை படிக்கும் குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகள்தான் ஆனாலும் என்ன ஆர்வம்? அதை விட அவர்கள் பயன்படுத்திய புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். கிட்டத்தட்ட 10 வருடங்கள் சென்று எனக்குள் இருந்த ஆசிரியரை மேம்படுத்தி வெளிக்கொணர்ந்தது.

குழந்தைகளுக்கு உதவும்படியான சில தகவல்களைக் கூறும்படி கேட்டுக் கொண்டனர். முதலில் நான் முன்பே வலைத்தளத்தில் எழுதியபடி chemistryயில் Cl, Cl-, Cl2 ஆகியவற்றை எப்படிப் வாசிப்பது போன்றவற்றைக் குறித்துப் பேசினேன். வலைத்தளத்தில் காண்க. summavinmama-rama.blogspot.com

அடுத்து ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி என்பது குறித்து தெரிவித்தேன்.

நினைவாற்றலை நம்மை அறியாமலேயே, சிரமமில்லாமல், பொழுதுபோக்காக மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் கூறினேன்.

புத்தகத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
1.   ஆசிரியர். எத்தனை வருடங்களாக எழுதி வருகிறார்?. எத்தனை புத்தகங்கள் எழுதி உள்ளார்? (கடைசி/பின் அட்டையில் இருக்கலாம்) எழுத்து நடை சுலபமானதா? ஆர்வத்தைத் தூண்டக்கூடியதா? எனப் பார்க்க வேண்டும்.
2.   சமீபத்திய வருடத்தில் பதிப்பிக்கப்பட்டதா?
3.   எத்தனை மறு பதிப்புகள் வந்திருக்கின்றன?
4.   எத்தனை திருத்தப்பட்ட பதிப்புகள் வந்திருக்கின்றன?
5.   முன்னுரையைப் படித்துப் பார்க்க வேண்டும். ஆசிரியரைப்பற்றி நன்கு தெரிந்த ஒருவர் இதை எழுதி இருப்பார். மேலே எண் 1 ல் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
6.   அணிந்துரை, புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் இருக்கும்.
7.   என்னுரையில் ஆசிரியர் அவரின் அனுபவத்தையும் நூல் எழுதியதின் நோக்கத்தையும் தெரிவித்திருப்பார்.
8.   பொருளடக்கம் உங்களுக்கு வேண்டியது புத்தகத்தினுள்ளே இருக்கிறதா என்று தெரிவிக்கும். அட்டவணை / index இருந்தால் இன்னும் நல்லது. தெரியாத ஒரு தலைப்பை எடுத்து எழுத்து நடை உங்களுக்குப் புரிகிறாற்போல இருக்கிறதா என படித்துப் பார்க்கலாம்.
9.   படங்களும் அட்டவணைகளும் நிறைந்திருக்க வேண்டும். 100 வார்த்தைகள் சொல்லக்கூடியவற்றை ஒரு படம் சொல்லிவிடும். மேலும் நன்கு நினைவிலும் நிற்கும்.
10.  பாடத்தின் இறுதியில் கேட்கப் பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதன் கீழேயே விடை கொடுக்கப்ப்பட்டிருக்கக் கூடாது. விடைகள் கடைசிப் பக்கத்தில் இருக்க வேண்டும்.

நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்வது எப்படி?

ஒரு தலைப்பைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதும், புரிந்து கொண்டிருப்பதும், நினைவில் வைத்திருப்பது என்பதும் வெவ்வேறான விஷயங்களாகும்!‼ ஒரு தடவை படித்ததும் தெரிந்த மாதிரி இருக்கும்! இரண்டு மூன்று தடவை படித்ததும் புரிந்த மாதிரி இருக்கும் புரிய வேண்டிய முறையில் புரிந்ததா என்பது application கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்கும்போதுதான் தெரியும்! நினைவில் நின்றதா என்பது தேர்வின்போது நீங்கள் விடை எழுதிக் கொண்டிருக்கும்போதுதான் தெரியும். Too late. இவற்றில் உங்கள் தகுதி நிலை எங்கே இருக்கிறது என்பதை இப்போதே தெரிந்து கொள்வது நல்லது.

பேருந்தில் அமர்ந்திருக்கும்போது தெரிந்த ஒருவரைப் பார்க்கிறோம். அவர் பெயர் நினைவிற்கு வரவில்லை. பேருந்தை விட்டு இறங்கி சிறிது நேரம் சென்று அவர் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது நமது மூளை ஒரு தகவலை மீட்டுக்கொண்டு வர சிறிது அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டது என்று அர்த்தம். மறக்கவில்லை. இந்த time of recall சுருக்க என்ன செய்யலாம்?

நமது உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பயிற்சி தேவைப்படுவது போல மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும் பயிற்சி தேவைப் படுகிறது.

1.   உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்
2.   படிக்கும்பொழுது புத்தகத்தைப் பார்த்து, வாய்விட்டுப் படித்து, எழுதிப் பார்க்கவும். எந்த டி வி சீரியலும் உங்கள் கவனத்தைச் சிதறடிக்க முடியாது. இப்படிச் செய்யும்பொழுது ஒரு தகவலுடனான உங்கள் தொடர்பு நேரம் நீட்டிக்கப்படுகிறது.
3.   குறுக்கெழுத்துப்போட்டி, புதிர்கள், சுடோகு முதலியவற்றை செய்து பாருங்கள். முதலில் சிரமமாக இருந்தாலும் போகப்போக நீங்கள் இவை சுலபமாக வருவதைக் காண்பீர்கள். ஆரம்பத்தில் மற்றவர்களின் உதவியுடன் செய்து பழகுங்கள். நினைவு மீட்டல் சக்தி கூடிக்கொண்டே போகும். நேரம் குறைந்து கொண்டே வரும்!
4.   விஜய் டிவி யில் ’Connexion’, குமுதத்தில்ஆறு வித்தியாசங்கள்’, WhatsApp ல் வரும் emoticons ஆகக் கொடுக்கப்பட்டுள்ள ஊரப் பெயர்கள், சினிமாப் பாடல்கள், படப் பெயர்கள் ஆகியவற்றைக் கண்டு பிடியுங்கள்.

உங்களை அறியாமலேயே, பொழுதுபோக்காக ஆரம்பித்து, வலி தெரியாமல், உங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்து உங்கள் நினைவாற்றல் பெருகுவதைக் காணலாம். வாழ்க, வளர்க.

மேலும் விபரங்களுக்கு:



Wednesday, April 30, 2014

46. ஒரு மாதிரியானதெல்லாம் ஒரே மாதிரியல்ல ! Chemistry


Chemistry, a mystery for many
வேதியியல் ஒரு புதிராபுதிரல்ல! கற்கும் முறை சரியில்லை.

இமயமலை என்ற உடன் ^ கோபுரம் போன்ற தோற்றமும் பனியும்தான் ஞாபகத்திற்கு வரும். அதுபோல CuSO4 என்ற உடன் சி யூ எஸ் ஃபோர் என்று படிக்காமல் காப்பர் ஸல்ஃபேட் , “ஊதாஆ கலருகிறிஸ்டல் என்று ஞாபகத்திற்கு வர வேண்டும்! அப்போதுதான் வேதியியல்புரிய வேண்டிய முறையில்புரிந்திருக்கிறது என்று அர்த்தம். அப்படிப் புரிய என்ன செய்ய வேண்டும்?

ஒரு மொழியைப் படிக்க ஆரம்பிக்கும்போது எழுத்து, வார்த்தைகள், வாக்கியங்கள் என்று படிப்பது போல வேதியியலைப் (chemistry} படிக்க ஆரம்பிக்கும்போது குறி, சூத்திரம், சமன்பாடு (symbols, formula, equations) என்று மனனம் செய்ய வேண்டும். அதேபோல 3Rs of Chemistry, அதாவது வாசிப்பது, எழுதுவது, கணக்குகள் போடுவது என்று முறையாக அவசரமில்லாமல் படிக்க வேண்டும். இவை நன்கு தெரிந்த பின்தான்  மற்ற chaptersக்குப் போக வேண்டும்.

டாக்டர் அறிவொளி ஒரு கதை சொல்வார். ”ஒரு மாதிரியானதெல்லாம் ஒரு மாதிரி தானே தவிர ஒரே மாதிரியல்ல”. மனநல மருத்துவ மனையில் ஒரு அறையில் அடைக்கப் பட்டிருந்த ஒருவர்லைலா, லைலாஎன்று கத்திக் கொண்டிருந்தார். வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர்இவர் ஏன் இப்படிக் கத்திக் கொண்டிருக்கிறார்என்று கேட்டார். அதற்கு அங்கிருந்த காப்பாளர்இவர் லைலாவைக் காதலித்து இப்படி ஆயிட்டார்என்கிறார். சில அறைகள் தாண்டி மறுபடி ஒருவர் அதே போல லைலா லைலா என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே பார்வையளர் காப்பாளரிடம்எனக்குத் தெரியும். இவரும் லைலாவைக் காதலித்துத்தான் இப்படி ஆயிட்டார்என்றார். காப்பாளர்இல்லீங்க இவர் லைலாவைக் கலியாணம் பண்ணித்தான் இப்படி ஆயிட்டார்என்றாரே பார்க்கலாம்!

பெரும்பாலான மாணவர்கள் CI, Cl- , Cl2 எல்லாவற்றையும் குளோரீன் என்றே வாசிப்பார்கள். எல்லாமே ஒரு மாதிரியாக இருந்தாலும் ஒரே மாதிரியல்ல’!
CI chlorine atom அனு
Cl- chloride ion அயனி
Cl2 chlorine molecule மூலக்கூறு

 இவைகளின் வேதிவினைகள், (reactions) வெவ்வேறானவை. ஆகவே தவறாக வாசித்தால் அவைகளின் reactions யையும் தவறாகத்தான் புரிந்து கொள்வார்கள். ஒரு மாதிரியானதெல்லாம் ஒரே மாதிரியல்ல !

ஆக கால தாமதம் ஆனாலும் symbols, formula, equations ஆகியவற்றை நன்கு மனனம் செய்யாமல், அடுத்தடுத்த chapters ஆசிரியர் நடத்திக்கொண்டு செல்வதும் தவறு. மாணவர்கள் அப்படிப் படிப்பதும் தவறு. நல்ல அஸ்திவாரம் இல்லாமல் மேலேமேலே கட்டிக் கொண்டு சென்றால் என்னவாகும்?


Chemistry is observation, Physics is aaccuracy!?

Tuesday, October 22, 2013

43. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்! Course to chose

என்ன படிக்கலாம்? அதற்கு, எப்படிப் படிக்கலாம்

என் மகள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். படித்தாளா?
என் மகன் டாக்டருக்குப் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நடந்ததா?
என் பேரன் agriculture படிக்க வேண்டுமென்கிறான். படிப்பான்!
ஏன் +2 வில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் ஆசைப் படுவது நடப்பதில்லை.?

காரைக்குடி, அங்கு பெயர் பெற்ற பள்ளிக்கூடம், அதில் என் மகள் +2 படித்தாள்.
எப்பொழுதும் முதல் மூன்று பேரில் ஒருவள். 98%க்கு மேல். Cut off for medical course 89.5; for engineering 93.5. We belong to O C category. That was with entrance exam TNPCEE. Counselling கில் Dental course தான் free seat இரண்டாவது சுற்றில் கிடைத்தது. அவளுக்குப் போக விருப்பமில்லை. ஆனாலும் சோர்ந்து போய்விடவில்லை. காரைக்குடி அழகப்பா எஞ்சினீயரிங் காலேஜில் EEE யில் முதல் மாணவியாகச் சேர்ந்து 84% வாங்கி இங்கு TCS ல் சேர்ந்து பின் திருமணமாகி U S ல் வேலை பார்த்து வருகிறாள். மகன் எஞ்சினீயரிங் படிக்க வேண்டுமென்றவனை பயாலஜி யையும் படிக்கச் சொல்லி physics மார்க்கைக் குறைத்ததுதான் சாதனை. இருந்தாலும் சோழிங்கநல்லூர் St.Josephs ல் படித்து CTS Cognizant ல் வேலை பார்த்து வருகிறான். பின் எதற்கு இந்தப் பீடிகை?

உங்கள் குழந்தைகள் (என் பேரனும்தான்) எப்படிப் படிக்க வேண்டுமென்பதற்குத்தான். வாழ்க்கை  பூராவும் அனுபவமாகவே போய்விடக் கூடாதல்லவா? Not only that your ambitions must be high but executions should also be effective. நம் குழந்தை அதைக் கட்டி இழுக்க (கொண்டு செலுத்த!) முடியுமா என்று பார்க்க வேண்டாமா? என் மகள் இழுப்பாள் என்று நம்பி மதுரையில் பிரபல tutorial college ல் week end course ல் சேர்த்து all India medical entrance exam (AIPMT 15% seats for all over India, AIIMS 80000 people for 50 seats, VELLORE only 60 seats, JIPMER only 120 seats) மிற்கு படிக்கச் சொன்னேன். ஒவ்வொரு வாரமும் 2 நாள் அதற்காகச் செலவானது. அது TNPCEE யிலும், +2 விலும் மதிப் பெண்களைக் குறைத்து ஆசைப்பட்டதை அடைய முடியாமல் செய்து விட்டது. ”காலம் போற்று. அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட மாதிரி, இக்கரைக்கு அக்கரை பச்சை, ஆசை இருக்கு தாசில் பண்ணஎன்று கூறலாமா? இம்மாதிரியான ஆல் இந்தியா தேர்வுகளில் வெற்றி பெரும் முதல் 15% பேர்களுக்குத்தான் இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் இடம் கிடைக்கும். மேலும் இதைப் பற்றி தெரிந்தவர்கள் பெருநகரங்களில் 9 வது வகுப்பு முதலே தாயாரால் தயாராகி விடுகிறார்கள்!

பல tuitions, பல guides, பல exams பல CDs என்று கவனம் சிதறுகிறது. எந்தப் பரிட்சைக்குப் படிப்பது எந்தப் புக்கை ஃபோலோ பண்ணுவது. எந்த வாத்தியார் சொல் கேட்பது என்று குழப்பம். இதனால் எந்த டெஸ்ட்டிலும் முழு மார்க்குகள் வாங்குவதில்லை.  

ஆக நம் +2 text book ஒழுங்காகப் படித்து, கடந்த வருடங்களில் நடந்த தேர்வுகளுக்கு பதில் எழுதி அதை எப்படித் திருத்துகிறார்கள் (marking scheme step by step) என்று பார்த்தலே போதும். OC, BC, POOCHI எல்லாம் அப்புறம். தெரிந்தவை, புரிந்தவை எல்லாம் ஞாபகத்தில் இருக்கும் என்று கட்டாயம் இல்லை! அதை நினைவில் வைத்துக்கொள்ள மேலும் பயிற்சிகள் தேவை. பார்க்க இந்த வலைப்பூவில் : 28  ”நினைவாற்றலை மேம்படுத்த

Peter Principle:  (The members of an organization where promotion is based on achievement, success, and merit will eventually be promoted beyond their level of ability)
அதாவது People  tend  to  be  given  increasing  responsibility  until   they cannot  continue  to  work  competently!

கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் கல்வி ஒன்றே
Knowledge is wealth. But imparting  does not reduce it

கல்வியின் வேர்கள் கசப்பானவை, கனிகளோ இனிப்பானவை
Roots of Education are Bitter but the Fruit is sweet                                                              
வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்
Learn through others experience.......you stay young!         

SP.V. Ramanathan 
Life's treasures are people .................. together!



Monday, June 18, 2012

29. நன்றி தினமலர் சிறுவர் மலர், improve memory2




பெரும்பாலானோர் வரைவது பெயிண்டிங் செய்வதில்லையாதலால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவற்றை படமாக வரைந்து வைத்துக் கொண்டால் ஞாபகத்தில் இருக்கும். chart, pictures, tables, coloured writings etc.

http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com
http://indiacoincollections.blogspot.com

கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் கல்வி ஒன்ற
Knowledge is wealth. But imparting  does not reduce it
Roots of Education are Bitter but the Fruit is sweet 
வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,

அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்