Labels

Tuesday, August 13, 2013

42. நாணயங்களும், நாணயமும், ’நா நயமு’ம், Rare,Scarce,Error Coins















நீங்கள் நாணயம் சேகரிப்பவரா? முதலில் இதைத் தெரிந்துகொள்ளுங்கள்! நம்முடைய அறியாமை வியாபாரிகளுக்கு நன்மை. அவர்களின் நா வண்மை நமக்குப் போட்ட வலை. அதேசமயம், விபரம் தெரிந்தவர்கள் சிலர் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் நியாயமானதே. இப்போது சில விஷயங்களைப் பார்க்கலாமா ?
·          Rare,
·          scarce,
·          error
எனும் வார்த்தைகளால்தான் நம்மை இந்த வியாபாரிகள் தூண்டில் போட்டு சுண்டியிழுப்பர்.

நாணயச்சாலைகளில் குறைவான அளவில் அச்சடித்திருந்தால் கிடைப்பது அரிதாக இருக்கும். இவற்றை ‘scarce’ எனலாம். சென்னையில் பெட்டிக்கடைகளில்கூட சாதாரனமாகக் கிடைப்பது கைமுறுக்கு. ஆனால், டில்லியில் ?! மும்பையில் ரோட்டுக்கு ரோடு “வடா பாவ்”; நியூ யார்க்கில் கிடைப்பதில்லை. ஆக scarce என்பது ஒரு ஒப்பீடல் (relative term) ஆகிவிட்டது. எனவே, ஏற்கனவே நடந்த ஏலங்களில் எத்தனை முறை ஏலத்திற்கு வந்திருக்கிறது, பிரபலமான Krauss Catalogueபோன்றவற்றில் என்ன கூறப்பட்டிருக்கிறது, கண்காட்சிகளில் வேர்கடலைபோல வெள்ளமாகக் கொட்டிக் குவித்து வைத்திருக்கிறார்களா, எல்லா ஊர்களிலும் நிறையக் கிடைக்கிறதா, நாணயச் சாலைகளில் மொத்தம் எத்தனை அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்ற ஐந்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, ”ரேர்”; Rare  என்பதும் scarceதான். ஆனால் காசுகளின் மேலுள்ள வடிவம் அல்லது “பேட்டர்ன்” (elephant looked like a pig in George V coins) legend (bharath printed as marath in some coins) அபூர்வமானவைகளாக இருக்கும். அடிக்கடி பார்க்காதவைகளாக இருக்கும்.

இனி “எரர்”; அச்சடிக்கும்பொழுது சில சமயங்களில் ஒரு பக்கம் அச்சு விழாமலிருக்கலாம் அல்லது அச்சு தள்ளி விழுந்திருக்கலாம். இவற்றை error என்கிறோம்.

இவற்றை ஒரு ஆல்பத்தில் எப்படி அடுக்குவது ? : கால அடிப்படையில் வரிசைக்கிரமமாக, தேதிவாரியாக, (periods) அல்லது அடுத்தடுத்து அடுக்குகளாக (series), அல்லது மதிப்பு வாரியாக (denominations) அடுக்கலாம்.

இத்துறை சம்பந்தப்பட்ட இன்னும் சில வார்த்தைகள்:
·         செர்டிஃபைட் காயின் : Certified coin = சான்றிடப்பட்ட நாணயம்
·         டை வெரைட்டி : Die variety = பலவகையான வார்ப்புருவுக்கான படிவம், படிவ அச்சு
·         மிண்ட் : Mint = நாணயச் சாலை
·         மிண்ட் வெப்சைட் : Mint websites = இணைய தளம், வலைத் தளம்
·         க்ரேட் : Grade = தரம் பிரித்தல்
·         லோ மிண்டேஜ் : Low mintage = குறைவான அளவில் அச்சடித்திருத்தல்.
·         ஃபேக் : Fake = போலி
·         டெஃபெனிடிவ் சீரீஸ் : Definitive series = வழக்கமான (நிலையான)  வரிசை
·         கமெமொரேட்டிவ் சரீஸ் : Commomerative series = நினைவாக வெளியிட்ட வரிசை

மேலும் விவரங்களுக்கு : இணையதளங்கள்:
http://www.worldofcoins.eu/forum/index.php/topic,16207.0.html?PHPSESSID=c0c4ed9c24fc3b77a6a098c8c226d9ff

வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம

http://examtechniques.blogspot.com
http://indiacoincollections.blogspot.com

http://indiansvisitingamerica.blogspot.com


Wednesday, July 10, 2013

41. ஆதார அட்டை !! Aadhar,

Before you say OK for a print out of your aadhaar receipt

Don't forget to add Phone number and email id. If you add them you can make certain changes online by yourself.

Insist on including the "aadhar enabled" bank account details (including bank’s IFSC code) to the operators uploading the information as the process of amendment is way too difficult. They are not well informed, so you insist on it.

Not giving details of your bank account can cost you a dear, as most cash subsidies including EPF transfer, bank KYCs, LPG cylinder subsidy and so on will soon be given through banks. If the account details are missing from your Aadhaar Card then be prepared to forgo such subsidies.

After this, you should inform your bank and the subsidy agency about your Aadhaar details to avail subsidies.

You are not allowed to use contact lens while imaging iris.

வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,



அடுத்தவர் அனுபவம், பயன்படுத்த வேண்டியது. 

நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்

Tuesday, April 9, 2013

40. ஆயுர்வேதம் ஆயுசு கூட்டும் Ayurveda


40. ஆயுர்வேதம் ஆயுசு கூட்டும்

தான் பிறந்து வளர்ந்த ஊரான கொல்லத்தில் இரண்டு வாரங்கள் தங்குவோம் என்று கொஞ்சம்கூட என் மனைவி எதிர்பார்க்கவில்லை! எல்லாம் அவள் அக்காவும் அவா புருஷரும் ஆயுர்வேதத்தில் நம்பிக்கை வைத்து எண்ணெய் போடச் சென்று வந்து குணமான புண்ணியத்தில்தான்.

சீனியர் சிட்டிசன் டிக்கெட்டை தட்கலில் புக் செய்து கொல்லம் சென்று சேர்ந்தோம்.

வைத்தியர் / டாக்டர் கொஞ்சம் நம்ம பாரதிராஜா மாதிரி இருந்தார். உன்னிகிருஷ்ணன் s/o கேசவன் பிள்ளை. BAMS, PhD. பரம்பரை வைத்தியர் பட்டமும் வாங்கியவர். பொளந்து கட்டுகிறார் ஆங்கிலத்தில், மலையாளத்திலும்தான். நமக்கும் வசதி, ‘பாரியாளுக்கு’ம் ‘சௌகரியம்’.

“நிங்களுக்கு வாத-பித்த தேகமானும். அதே அனுசரித்து எண்ணை இடணம். வலத்தே தோளிக்கு மஸாஜ் செய்யணம். ஏழு திவசம் எண்ணெய் இடணம். ஒரு திவசம் ரெஸ்ட்டானும் purgative தரணம். பின்னே மூனு திவசம் கிழி (முடிச்சு) இடணம். சுக சிகிச்சைதன்னே. நோ ப்ராப்ளம்.” என்றார்.

வேர்க்கக்கூடாது ஆதலால் மழைக்காலத்தில்தான் எண்ணெய் இட வேண்டுமாம். எண்ணை தேய்த்துக் குளித்த உடன் தூங்கக் கூடாது

அடிப்படை எண்ணைகள் நல்லெண்ணை, தேங்காய் எண்ணை, ஆமணக்கு எண்ணை, வேப்பெண்ணை, கடுகு எண்ணை, வாதாம் எண்ணை, ஷீரபலா, தந்வந்த்ரம், முக்கூட்டு போன்றவை ஆகும்.

இலைகள், கருநொச்சி, ஆடாதொடை, ஆமணக்கு, எருக்கு, மஞ்சனத்தி, வேப்பிலை, புளி இலை, முடக்கத்தான், யூகாலிப்டஸ், ஐந்திலை நொச்சி, முருங்கை, நார்த்தை, சதகுப்பை போன்றவை ஆகும்.

தவிர பூண்டு, தேங்காய், இஞ்சி, சீரகம், அரிசி, பெருங்காயம் போன்றவையும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

அவரவர் உடம்புக்குத் தகுந்தவாறு எவைஎவை, எந்த அளவில், எப்படி உபயோகப்படுத்துவது என்பது தீர்மானிக்கப் படுகிறது. வாத உடம்பிற்கு நல்லெண்ணையும் பித்த உடம்பிற்கு தேங்காய் எண்ணையும் கப உடம்பிற்கு கடுகு எண்ணையும் அடிப்படை எண்ணெய்யாக உபயோகப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் தேய்ப்பவருக்கு டெக்னீக் தெரிந்திருக்க வேண்டும்‼

தங்குவதற்கும் எண்ணெய் போடுவதற்கும் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 1200 ரூபாய் ஆகலாம்.

Wednesday, February 6, 2013

38. நான் பார்த்த நாடுகள். Europe Tour













இங்கிலாந்து – சிம்னி வைத்த வீடுகள், குறுகலான தெருக்கள்,மேடம் டூஸாட்ஸ் வாக்ஸ் (மெழுகுச் சிலைகள்) மியூசியம், லண்டன் ஐ வீல் (பறவையின் பார்வை)

ஃப்ரான்ஸ் - ஃபோக்ஸ்டோனை காலேய்லுடன் இணைக்கும் யூரோடனல் (கடலுக்கடியில் ரயில் பாதை), பராதே லாதீன் ஷோ (மிக டீஸண்டான காபரே), ஐஃபில் டவர், நோட்ர் டாம் கதீட்ரல், மோனா லிசா உள்ள மியூஸியம்

பெல்ஜியம் – புருஸெல்ஸில் மான்னெக்கென் பீஸா (சிறுநீர் கழிக்கும் சிறுவன்) சிலை, ஆட்டோமியம் (இரும்பு அனுவின் உள்ளமைப்பு) ஆண்ட்வெர்ப் டைமண்ட்லாண்ட்

நெதெர்லாந்து - கூக்கென்ஹோஃப் டுலீப் தோட்டம், சீஸ் ஃபாக்டரி, விண்ட் மில், ,

ஜெர்மெனி – ஓ டி கோலோன் ஒரிஜினல் ஷாப், கோலோன் கதீட்ரல், ரைன் நதியின்மீது படகு சவாரி, ப்ளாக் ஃபோரெஸ்ட், குக்கூ க்ளாக்

சுவிட்சர்லாந்து – (மல மல  ஆறு எங்கெங்கும்) ரைன் ஃபால்ஸ், ஜூரிச், மவுண்ட் டிட்லிஸ்(10 000 அடி), யூங்ஃப்ராவோ யூரோப்பின் சிகரத்தில் 11333 அடி) வித விதமான 200 கேபிள் கார்கள்
லீகென்ஸ்டெய்ன் – வாடூஸ் – வரி இல்லா நாடு, எல்ல நாட்டு அரசியல் வாதிகளுக்கும் தாதாக்களுக்கும் அக்கவுண்ட் உண்டு என்கிறார்கள்

ஆஸ்த்ரியா – ஸ்வராவ்ஸ்கி (கிறிஸ்டல் கல் நகைகள்), வைன் யார்ட்ஸ் (திராட்ச்சைத் தோட்டங்கள்) வைனும் ஷாம்பேனும்தான்

இத்தாலி - வெனீஸில் கீடெக்கா கானல் போட் ரைட், ஸெயிண்ட் மார்க் பாஸிலிகா, க்ளாக் டவர்
பீஸா - சாய்ந்த கோபுரம், ஃப்ளாரென்ஸ்
ரோம் – பழைய ரோமானிய கோட்டைகள், த்ரெவி ஃபவுண்டன், 3D யில் ரோமானிய சரித்திரம், கொலோஸியம்
வாடிகன் – உலகத்தின் மிகச் சிறிய நகரம், மிகப் பெரிய கதீட்ரல் ஸெய்ண்ட் பீட்டர்ஸ் பாஸிலிகா

எல்லா நாடுகளிலும் உடைகளும்  கட்டிடங்களும் ரசிக்கத் தக்கவை. நாம் பார்திராத வித்தியாசமானவை.

லண்டனிலிருந்து ஃபோக்ஸ்டோனுக்கு பஸ்ஸில் வந்தோம். ஃபோக்ஸ்டோனிலிருந்து யூரோ டன்னல் வழியாக காலேய்லுக்கு வந்து பின் பாரீஸிற்கு வந்தோம். யூரோ டன்னல் என்பது ஃபோக்ஸ்டோனை காலேய்லுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் போடப்பட்ட ரயில் பாதை ஆகும். பஸ்ஸை அப்படியே ரயிலில் ஏற்றி விடுகிறார்கள். நாம் இறங்கி நிற்க சிறிது இடம் இருக்கிறது. ஒவ்வொரு பஸ்ஸுக்கும் இடையில் ஒரு தடுப்பு இருக்கிறது. சுமார் 30 நிமிடத்தில் பயணம் முடிந்து விடுகிறது.

அலுப்புத் தெரியாமல் எல்லா நாடுகளுக்கும் பஸ்ஸிலேயே போக முடியுமா? முடியும். சாலைகள் அவ்விதம். ஒரு நாளைக்கு ஒரே தடவையில் 500 கிலோ மீட்டர்  மூன்று மணி நேரத்தில் போகிறார்கள். ஆனால் இத்தாலிக்குள் நுழைந்தோமா, டிரைவர் பாடு குஷிதான். இந்தியாவில் இருப்பது போன்று பெருமிதமாக இருந்தது! எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்தார்கள். அதற்கு முந்திய நாடுகளில் பஸ்ஸில் சாப்பிட்டாலே போலிஸில் ஃபைன் கட்ட வேண்டும் என்றார்கள்!

சாலைகளில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் உலோகப் பொருட்கள் அழகானவை. இன்னும் 100 வருடத்திற்கு அழியாதவை. “no cement pillars, which break easily!”

ஜலதோஷம் யாருக்குமே இல்லை

எல்லா நாடுகளிலுமே இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது

அமெரிக்காவில் பெர்ஸனல் கேள்விகள் யாரும் கேட்பதில்லை. உ-ம் கல்யாணம் ஆச்சா? எத்தனை குழந்தைகள்? என்ன வேலை?
ஐரோப்பாவில் நிறம் மதம் வேறானாலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சில நல்ல கோட்பாடுகள் வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக நம்முடைய குடும்ப வாழ்க்கை முறை அவர்களை விட மேம்பட்டதாகத்தான் கருதுகிறேன். 

Wednesday, January 16, 2013

37. Dear Parents, பெற்றோர்களுக்கு


பெற்றோர்களுக்கு

அந்தந்த வயதில் ஏற்படும் உணர்வுகளை சரியான வகையில் புரியவைத்து, இளைஞர்களை வழிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இங்கே இல்லை. கூட்டுக்குடும்பத்தில் பிள்ளைகள் மீதான கண்காணிப்பு அதிகம். தனிக்குடும்பங்கள் அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் தகர்ந்துவிட்டன. பிள்ளைகளால் முடிவெடுக்கவோ, தோல்விகளைத் தாங்கிக்கொள்ளவோ முடியவில்லை. அதனால் வன்முறையில் இறங்குகிறார்கள். – ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி திலகவதி அவர்கள்

(ஆக தாத்தா பாட்டி நம்ம வீட்ல இருப்பது நல்லது!
இன்றைய இரண்டு வயதுக் குழந்தை எவ்வளவு அடம் பண்ணுகிறது பாருங்கள்! (I was a discipline master in the school. I use to come across problem children where the mother is married second time. But could solve their problems with the help of grandparents)

குழந்தைகளுக்கு தோல்விகளைத் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்க்க வேண்டும். வயதுக்கு வரும் பருவத்தில் எழும் ஈர்ப்புகள், உணர்வுகள் பற்றியும், அதைக் கடந்து செல்லும் முறைகள் பற்றியும் கவுன்சலிங் கொடுக்க வேண்டும். இதைப் பெற்றோரே தரலாம். – மன நல மருத்துவர் ஷாலினி அவர்கள்

(சிங்கப்பூரில் 7ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் குழந்தை பிறப்பு பற்றி பாடம் உள்ளது.
ஸயின்ஸ் மியூசியத்தில் டெலிவரி வீடீயோவும் உள்ளது.)

நன்றி – வெ. நீலகண்டன் – குங்குமம் 24.12.2012


கூட்டுக் குடும்பங்கள் குலைந்துவிட்டன. பாட்டி, அக்கா, தங்கை, சித்தி, என உறவுகளின் தன்மைகளை புரிந்து கொள்ளாமல் வளரும் குழந்தை, தன் பருவத்தில் பெண்ணை பாலியல் பண்டமாகவே பார்க்கும். ’கோ-எஜூக்கேஷன்’ சிஸ்டம்தான் ஆண்-பெண் நட்பு பற்றிய புரிதலை உருவாக்கும். பெண்ணை சக உயிராகப் பார்க்க வைக்கும். – மன நல ஆலோசகர் வசந்தி பாபு அவர்கள்.

நன்றி – வெ. நீலகண்டன் – குங்குமம் 21-01-2013


Monday, December 31, 2012

36. What our Tour Manager said and didn't!!!






Compliments to Our Europe Tour Manager Mr. Vipul:
 What he said and didn’t
Good Morning everybody!
I am your Tour Manager. My name is Vipul.
(Of Course ‘we pull’ each other for next 15 days. I am chota baiya Vipul Anand, your ‘GUIDE’ Dev Anand. Wahida Rehmaan will come into my life within a few months.)

Now a few advices to you all,

  1. First follow four Bs
i.                 Be patient when I am late (because I went around looking for missing persons in the loos)
ii.               Be pleasant when late comers come in (for they’ll be when u come in)
iii.             Be punctual (in your next trip)
iv.             Be fine in hotels ( r u’ll be fined 50Fr frankly)

  1. Don’t leave anything behind – wife, jewellery, passport etc (whatever you ate)

  1. Give the credit card to your wife (you keep the PIN, for both will be safe)


  1. Don’t come late or else I’ll leave you behind (Indian High commission will take care of you and Kuoni me!)

However Vipul is a nice boy, tactful, strict, alert and polite! Taught us discipline in a group.

A wide travelled Neil Pomento said “ Don’t just pile up Deposit certificates, take children out, let them learn to adjust in a group with varied Characters and deal with difficult situations. This trip will give them not only entertainment but also ways to accommodate oneself in life”

After all man is a social Animal!!

I presented Revathi Sankar's Youtube way of Twinkle twinkle little star, phonetic versions from various states of India.

Yoga teacher Porkodi said “ Don’t eat fruits at last in a meal as they digest and ferment easily. Eat them  before food”

And I said “Physical exercises use up oxygen and yoga helps us to retain oxygen.

Nothing ventured, nothing gained!

Friday, September 14, 2012

35. பிரயாணத்தின்போது உங்கள் ஆவணப் பிரதிகளைப் பாதுகாக்க, safety measures






1.   ஜெராக்ஸ் நகலெடுத்து வீட்டிலொன்றும் பிரயாணப் பெட்டியிலும் வைத்திருக்கவும்
2.   காமெராவில் படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்
3.   மோபைல் ஃபோனிலும் வைக்கவும்
4.   இ-மெயிலில் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கவும்.

அதற்கு முன் password/கடவு(ள்)ச்சொல்லைப் பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம்.

சி
ங்
க
பூ
ர்

வ
ந்
த
ன
ம்
1
2
3
4
5

6
7
8
9
0

5432 என்பதை ர்பூகங் என்று எழுதி வைத்துக் கொள்ளலாம்
ஏபிசிடி யை தமிழில் எழுதி வைத்துக் கொள்ளலாம். 

R
O
U
N
D
P
L
A
T
E
1
2
3
4
5
6
7
8
9
0



இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் ஆராய்ந்து கண்டு பிடிக்கவும் வந்த பொருளைச் பெருக்கவும் முறையாகப் பாதுகாக்கவும் அதை அளவறிந்து செலவு செய்யவும் நன்கு தெரிந்தவன் அரசன் ஆவான்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான். செய்யத்தக்க செயல்களை உடனே செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
பொருள் வரும் வழிகளைப் (வருமானத்தைப்) பெருகச் செய்து, அவற்றால் வளத்தை (செழிப்பான வாழ்வை) உண்டாக்கி, வரும் இடையூறுகளை (தொல்லைகளை) ஆராய்ந்து நீக்க வல்லவனே எந்தச் செயலையும் செய்ய வேண்டும்.

வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம், பயன்படுத்த வேண்டியது. நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்