இங்கிலாந்து – சிம்னி வைத்த வீடுகள், குறுகலான தெருக்கள்,மேடம் டூஸாட்ஸ் வாக்ஸ் (மெழுகுச் சிலைகள்) மியூசியம், லண்டன் ஐ வீல் (பறவையின் பார்வை)
ஃப்ரான்ஸ் - ஃபோக்ஸ்டோனை காலேய்லுடன் இணைக்கும் யூரோடனல் (கடலுக்கடியில் ரயில் பாதை), பராதே லாதீன் ஷோ (மிக
டீஸண்டான காபரே), ஐஃபில் டவர், நோட்ர் டாம் கதீட்ரல், மோனா லிசா உள்ள மியூஸியம்
பெல்ஜியம் – புருஸெல்ஸில் மான்னெக்கென் பீஸா (சிறுநீர் கழிக்கும் சிறுவன்) சிலை, ஆட்டோமியம் (இரும்பு அனுவின் உள்ளமைப்பு)
ஆண்ட்வெர்ப் டைமண்ட்லாண்ட்
நெதெர்லாந்து - கூக்கென்ஹோஃப் டுலீப் தோட்டம், சீஸ் ஃபாக்டரி, விண்ட் மில், ,
ஜெர்மெனி – ஓ டி கோலோன் ஒரிஜினல் ஷாப், கோலோன் கதீட்ரல், ரைன் நதியின்மீது படகு சவாரி, ப்ளாக் ஃபோரெஸ்ட், குக்கூ க்ளாக்
சுவிட்சர்லாந்து – (மல மல ஆறு எங்கெங்கும்) ரைன் ஃபால்ஸ், ஜூரிச், மவுண்ட் டிட்லிஸ்(10 000 அடி), யூங்ஃப்ராவோ யூரோப்பின் சிகரத்தில் 11333 அடி) வித விதமான 200 கேபிள் கார்கள்
லீகென்ஸ்டெய்ன் – வாடூஸ் – வரி
இல்லா நாடு, எல்ல நாட்டு அரசியல் வாதிகளுக்கும் தாதாக்களுக்கும்
அக்கவுண்ட் உண்டு என்கிறார்கள்
ஆஸ்த்ரியா – ஸ்வராவ்ஸ்கி (கிறிஸ்டல்
கல் நகைகள்), வைன் யார்ட்ஸ் (திராட்ச்சைத்
தோட்டங்கள்) வைனும் ஷாம்பேனும்தான்
இத்தாலி - வெனீஸில் கீடெக்கா கானல் போட் ரைட், ஸெயிண்ட் மார்க் பாஸிலிகா, க்ளாக் டவர்
பீஸா - சாய்ந்த கோபுரம், ஃப்ளாரென்ஸ்
ரோம் – பழைய ரோமானிய கோட்டைகள், த்ரெவி ஃபவுண்டன், 3D யில் ரோமானிய சரித்திரம், கொலோஸியம்
வாடிகன் – உலகத்தின் மிகச் சிறிய நகரம், மிகப் பெரிய கதீட்ரல் ஸெய்ண்ட் பீட்டர்ஸ் பாஸிலிகா
எல்லா நாடுகளிலும் உடைகளும் கட்டிடங்களும் ரசிக்கத்
தக்கவை. நாம் பார்திராத வித்தியாசமானவை.
லண்டனிலிருந்து
ஃபோக்ஸ்டோனுக்கு பஸ்ஸில் வந்தோம். ஃபோக்ஸ்டோனிலிருந்து யூரோ டன்னல் வழியாக காலேய்லுக்கு வந்து பின்
பாரீஸிற்கு வந்தோம். யூரோ டன்னல் என்பது ஃபோக்ஸ்டோனை காலேய்லுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் போடப்பட்ட ரயில் பாதை
ஆகும். பஸ்ஸை அப்படியே ரயிலில் ஏற்றி விடுகிறார்கள்.
நாம் இறங்கி நிற்க சிறிது இடம் இருக்கிறது. ஒவ்வொரு
பஸ்ஸுக்கும் இடையில் ஒரு தடுப்பு இருக்கிறது. சுமார்
30 நிமிடத்தில் பயணம் முடிந்து விடுகிறது.
அலுப்புத்
தெரியாமல் எல்லா நாடுகளுக்கும் பஸ்ஸிலேயே போக முடியுமா? முடியும். சாலைகள் அவ்விதம். ஒரு நாளைக்கு ஒரே தடவையில் 500
கிலோ மீட்டர் மூன்று மணி
நேரத்தில் போகிறார்கள். ஆனால் இத்தாலிக்குள் நுழைந்தோமா,
டிரைவர் பாடு குஷிதான். இந்தியாவில் இருப்பது
போன்று பெருமிதமாக இருந்தது! எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங்
செய்தார்கள். அதற்கு முந்திய நாடுகளில் பஸ்ஸில் சாப்பிட்டாலே
போலிஸில் ஃபைன் கட்ட வேண்டும் என்றார்கள்!
சாலைகளில்
உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் உலோகப் பொருட்கள் அழகானவை. இன்னும் 100 வருடத்திற்கு அழியாதவை. “no cement pillars, which break easily!”
ஜலதோஷம்
யாருக்குமே இல்லை
எல்லா
நாடுகளிலுமே இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது
அமெரிக்காவில்
பெர்ஸனல் கேள்விகள் யாரும் கேட்பதில்லை. உ-ம் கல்யாணம் ஆச்சா?
எத்தனை குழந்தைகள்? என்ன வேலை?
ஐரோப்பாவில் நிறம் மதம் வேறானாலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சில நல்ல கோட்பாடுகள் வைத்திருக்கிறார்கள்.
ஐரோப்பாவில் நிறம் மதம் வேறானாலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சில நல்ல கோட்பாடுகள் வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக நம்முடைய குடும்ப வாழ்க்கை முறை அவர்களை விட மேம்பட்டதாகத்தான் கருதுகிறேன்.
இந்தியாவில் இருப்பது போன்று பெருமிதமாக இருந்தது!
ReplyDeleteவெளிநாடுகளில் இப்படி ஒரு
இடத்தைப்பார்த்தால்தான் மனசே ஆறுகிறது ....