Labels

Wednesday, January 16, 2013

37. Dear Parents, பெற்றோர்களுக்கு


பெற்றோர்களுக்கு

அந்தந்த வயதில் ஏற்படும் உணர்வுகளை சரியான வகையில் புரியவைத்து, இளைஞர்களை வழிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இங்கே இல்லை. கூட்டுக்குடும்பத்தில் பிள்ளைகள் மீதான கண்காணிப்பு அதிகம். தனிக்குடும்பங்கள் அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் தகர்ந்துவிட்டன. பிள்ளைகளால் முடிவெடுக்கவோ, தோல்விகளைத் தாங்கிக்கொள்ளவோ முடியவில்லை. அதனால் வன்முறையில் இறங்குகிறார்கள். – ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி திலகவதி அவர்கள்

(ஆக தாத்தா பாட்டி நம்ம வீட்ல இருப்பது நல்லது!
இன்றைய இரண்டு வயதுக் குழந்தை எவ்வளவு அடம் பண்ணுகிறது பாருங்கள்! (I was a discipline master in the school. I use to come across problem children where the mother is married second time. But could solve their problems with the help of grandparents)

குழந்தைகளுக்கு தோல்விகளைத் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்க்க வேண்டும். வயதுக்கு வரும் பருவத்தில் எழும் ஈர்ப்புகள், உணர்வுகள் பற்றியும், அதைக் கடந்து செல்லும் முறைகள் பற்றியும் கவுன்சலிங் கொடுக்க வேண்டும். இதைப் பெற்றோரே தரலாம். – மன நல மருத்துவர் ஷாலினி அவர்கள்

(சிங்கப்பூரில் 7ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் குழந்தை பிறப்பு பற்றி பாடம் உள்ளது.
ஸயின்ஸ் மியூசியத்தில் டெலிவரி வீடீயோவும் உள்ளது.)

நன்றிவெ. நீலகண்டன்குங்குமம் 24.12.2012


கூட்டுக் குடும்பங்கள் குலைந்துவிட்டன. பாட்டி, அக்கா, தங்கை, சித்தி, என உறவுகளின் தன்மைகளை புரிந்து கொள்ளாமல் வளரும் குழந்தை, தன் பருவத்தில் பெண்ணை பாலியல் பண்டமாகவே பார்க்கும். ’கோ-எஜூக்கேஷன்சிஸ்டம்தான் ஆண்-பெண் நட்பு பற்றிய புரிதலை உருவாக்கும். பெண்ணை சக உயிராகப் பார்க்க வைக்கும். – மன நல ஆலோசகர் வசந்தி பாபு அவர்கள்.

நன்றிவெ. நீலகண்டன்குங்குமம் 21-01-2013


No comments:

Post a Comment