Labels

Saturday, December 17, 2011

21. நிதி நிர்வாகம் 2.



பதின்ம வயதினருக்குச் சொல்ல

பணத்தைக் கொண்டு பொருட்களை வாங்க முடியும். எல்லாவற்றையும் வாங்க முடியாது. உதாரணமாக அப்பா அம்மாவையும் அன்பையும் வாங்க முடியாது. ஆக பணத்தின் மதிப்பு என்பது ஒரு அளவுக்கு உட்பட்டதுதான். பணத்திற்கு மட்டுமே மரியாதை என்பது தவறானது.

மருத்துவத்துறையின் முன்னேற்றத்தால் சராசரி ஆயுள் கூடிக் கொண்டே வருகிறது. ஆக நம் முன்னோர்களைவிட நாம் நீண்ட நாட்கள் வாழப் போகிறோம். வயதான காலத்தில் பாதுகாப்புக்குப் பணம் தேவை. பொருளாதார மறுமலர்ச்சியின் விளைவாக வெளிநாட்டுப் பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. நமக்குத் தேர்வு செய்ய ஏராளமான வகைகள்! அதைப் பார்த்து தேவையும் ஆசையும் அதிகரித்து விட்டன. அதற்கும் பணம் தேவை. ஆகவே சேமிப்பும் அவசியமாகிறது.

சேமிக்க வேண்டுமென்றால் மேலும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். அல்லது சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். எது நல்லது?

வருமானம்செலவு = சேமிப்பு    அல்லது
வருமானம்சேமிப்பு = செலவு

ஆசைப்படுவதை எல்லாம் வாங்கக் கூடாது. வாங்குவதை ஒத்தி வைத்து விட்டுத் தேவையா, உடனடித் தேவையா, அவசியமான தேவையா என்று முடிவெடுத்து வாங்கினால் பணம் மிச்சப்படும். தேவையையும் ஆசையையும் பிரித்து உணர வேண்டும். இரண்டும் வெவ்வேறானவை.

உங்கள் தேவையை (இலக்கை) அடைய திட்டமிட வேண்டும்.

     1.   என்ன வாங்க வேண்டும்?
     2.  அதன் விலை என்ன?
     3.   எவ்வளவு நாட்களில் தேவைப்படும்?
     4.   எந்தச் செலவுகளை குறைத்து அந்தப் பணத்தை சேமிக்கலாம்?
     5.   மேல் வருமானத்திற்கு வழியிருக்கிறதா?  என்று ஆராய வேண்டும் 
                                                                                                                     
                                                                                                                      பணம் வளரட்டும்

No comments:

Post a Comment