Other blogs of mine.
http://examtechniques.blogspot.com
http://indiacoincollections.blogspot.com
24. 72, 115 எனும் விதிகள்
வட்டி விகிதம் X வருடங்கள் = 72
அதாவது வட்டி விகிதம் 9% என்றால் உங்கள் வைப்பு நிதி 8 வருடங்களில் இரட்டிப்பாக ஆகும். 12% வட்டி விகிதம் என்றால் 6 வருடங்களில் இரட்டிப்பாகும். 9 X 8 = 72 ; 12 X 6 = 72
இதே போல் வட்டி விகிதம் X வருடங்கள் = 115 என்றால் உங்கள் வைப்பு நிதி 11.5% என்ற வட்டி விகிதத்தில் 10 வருடங்களில் மூன்று மடங்காகும்.
11.5 X 10 + 115
இது ஒரு பொதுவான விதி. கூட்டு வட்டியாகக் கணக்கிட்டால் இன்னும் குறைந்த காலத்தில் பெருகி விடும்
உங்களிடம் யாராவது பணத்தை 2 வருடத்தில் இரட்டிப்பாக்கித் தருகிறேன் என்று சொன்னால், 72/2 = 36% வட்டி என்று அர்த்தம். உங்களுக்கு இந்த வட்டியும் கொடுத்து, மேற்கொண்டு சம்பாதிப்பதும் அவரால் முடியாத காரியம்!
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான். செய்யத்தக்க செயல்களை உடனே செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
பணம் வளரட்டும்
nandrae seitheer, athuvum indrae seitheer!
ReplyDelete