Labels

Tuesday, November 2, 2010

3. அமெரிக்காவில் பிரசுபம் Delivered in America (child)

மகள் பிரசுபத்திற்காக அமெரிக்கா செல்கிறீர்களா? தெரிந்துகொள்ளவேண்டியவை இதோ! (முதலில் பாஸ்போர்ட்டில் 'Surname' இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். விசா கதைக்கு அப்புறம் வருவோம்.)

இன்சூரன்ஸ் இல்லையென்றால் டாக்டரின் 'ஆபீஸ்' ஆமாம் 'ஆபீஸி'னுள் போகவே முடியாது. அப்பாயின்மெண்ட்டை மிஸ் பண்ணிவிட்டால் $25 பெனால்ட்டி கட்ட வேண்டும். ஆனால் ஆஸ்பத்திரியில் எமெர்ஜென்சி என்றால் அவசியம் அவர்கள் நம்மைப் பார்த்தே ஆகவேண்டும். Medicaid, Medicare எனும் US gov. agency பணத்தைக்கட்டி விடும்.

முதல் 7 மாதங்கள் மகளிர் நல மருத்துவர். அடுத்த மூன்று மாதங்கள் மகப்பேறு மருத்துவர், அவருடன் இருக்கும் அனுபவமிக்க தாதியர் 'midwife', பிறகு குழந்தை நல மருத்துவர், நல்ல மருத்துவ மனை என நான்கையுமே முன்கூட்டியே தெரிவு செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

7வது மாதம் நாம் தெரிவு செய்த மருத்துவமனையைச் சுற்றிப்பார்க்கக் கூப்பிடுவார்கள். ஆஸ்பத்திரி நடைமுறைகளைச் சொல்வர். கணவர் அவசியம் செல்லவேண்டும். 8வது மாதம் தாய்ப்பாலின் அவசியத்தை கணவருடன் வரச்சொல்லி உபதேசிப்பர். 9வது மாதம் நார்மல் அண்ட் சிஸேரியன் விபரங்களை விபரிப்பர்.

Labor pain, பனிக் குடம் கசிவதுபோல அல்லது உடைந்தது போலத்தோன்றும்போது மகப்பேறு மருத்துவருக்குப் போன் செய்து கேட்டு உடன் மருத்துவமனைக்குச்செல்லச்சொன்னால் செல்ல வேண்டும். முதலில் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்தான் கவனிப்பர். வந்த உடன் பெயரைச்சொல்லி 'நேம் டாக்" குடன் போட்டோவையும் முகத்தையும் காட்டிவிடுவர்! பிறகு போன் செய்து நமது தாதியை, midwifeஐ, வரவழைப்பர். அவசியம் ஏற்பட்டால் நமது டாக்டரைக்கூப்பிடுவார்கள். ஹாஸ்ப்பிட்டல் Hotel போல இருக்கும். பினாயில் வாசமே இருக்காது.

Labor ரூமில் வீடியோ காமெரா, லாப்டாப்பில் பிடித்த இசை, கணவர், அம்மா எல்லா(ரு)மே அலவ்டு. பிறந்த குழந்தையை தாய்மேல் போட்டு விடுவார்கள். தொப்புள் கொடியை கணவர்தான் கட் செய்வார்!

தாத்தாவின் பெருமையை இங்கேதான் பார்க்கவேண்டும். மகள், மருமகன்,பேத்தி எல்லார் கையிலும் பட்டைகள் 'bar code' பார் கோடுடன் தாத்தாவின் பெயர் மகளின் பெயர்(இனிஷியல் மட்டும்) இருக்கும். தாத்தாவும் பெருமையுடன் 'I am a Grandpa' என்று பாட்ஜ் குத்திக்கொள்ளத் தருவார்கள. குழந்தையை வாங்கும்போதும் கொடுக்கும்போதும் கைகளில் இருக்கும் பட்டையைச் சரிபார்த்துக்கொள்கிறார்கள். நம்மையும் செவிலியரின் கழுத்திலுள்ள போட்டோ ஐ டி யையும் ஒத்துப்பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள்

You can request the hospital to keep your umbilical cord for your family or donate for research such as transplantation, stem cell etc. You have to pay about $2000 to preserve it in the Banking facility for years.

அமெரிக்கா எங்கும் 'Diaper Changing Station' என்று எல்லா 'Rest Rooms' அதாவது பாத்ரூம்களிலும் ஒரு சின்ன டேபிள் சுவற்றோடு இருக்கும். குழந்தைகளுக்கு அப்பாமார்களே நாப்கின் அழகாக மாற்றி விடுவார்கள்!

அப்போதுதான் பிறந்த குழந்தைகளைக் கூட காரில் கூட்டிச்செல்ல தனியாக ஒரு சேர் 'infant restraint' என்று பின் சீட்டில் மாட்டவேண்டும். மாட்டாமல், ஆத்தா பிள்ளையப்பாத்துக்குவா என்று ஓட்டிப்போய் தாணாக்காரரனிடம் மாட்டிக்கொண்டால் டிக்கெட்தான்! $150 ஓடு இன்சஸுரன்ஸும் எகிறிடும்!!
I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics



If you think this will be useful to either your family or friends please leave a comment.
I intend to post one article every 10 days by god's will!
Thank you

2 comments:

  1. we enjoyed the slang in 'aatha pullaya pathukkuva'.
    this can be a title for a 'pongal release tamil padam'.

    ReplyDelete
  2. A different way to tell the importance of infant restraint. nice...
    -meenu

    ReplyDelete