Labels

Wednesday, November 10, 2010

4. அமெரிக்காவில் ஹாலோவீன் (Halloween in America).


அமெரிக்காவில் ஹாலோவீன் (Halloween in US).(the evening before All Hallows Day)

Independence day, Veterans day, Christmas, New Years day, and Halloween எனும் தினங்கள் வருடாவருடம் குறிப்பிட்ட தேதிகளிலேயே வரும். மற்ற விடுமுறைகள் எல்லாம் வாரக்கடைசி நாட்களைத்தொட்டே அனுசரிக்கப்படுகிறது. சனிக்கிழமை விடுமுறை வந்தால் வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை லீவு வந்தால் திங்கட்கிழமையும் சேர்த்துவிடப்படுகிறது. விஷேசமானது என்னவென்றால் தலைவர்களது பிறந்த தினங்கள் கூட 3rd Monday, 4th Thursday என்று அனுசரிக்கப்படுகிறது.வொவொரு

ஓவ்வொரு வருடமும் ஹாலோவீன் அக்டோபர் 31 உ கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா ஐரோப்பாவிலிருந்து இங்கு வந்ததென்றாலும், கெட்டவைகளையும், பேய் பிசாசுகளையும் விரட்டி விட்டு, நல்லவைகளையும், நல்லாத்மாக்களையும் வரவேற்பதற்காக கொண்டாடப்படுவதாக நம்புகிறார்கள். இலையுதிர்,  குளிர் காலத்தை வரவேற்பதாகவும் அமைகிறது.

சோளக்காட்டுப்பொம்மைகள்,பேப்பர் எலும்புக்கூடுகள், கறுப்புப்பூனைகள், சிலந்தி வலைகள், பேய் ப் பொம்மைகள், வௌவால்கள், விளக்குமாறு, சூனியக்காரி, முக்கியமாக பரங்கிக்காய், ஜாக்-ஓ-லான்டெர்ன் ஆகியவைகள் வீடுகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும்.


பரங்கிக்காயினுள்ளே உள்ள சதையை எடுத்துவிட்டு, வெளியே கத்தியினால் கண்கள் மூக்கு, வாய், கோரைப்பற்கள், என கீறி எடுத்து விடுவார்கள். ஊள்ளே ஒரு மெழுகு வர்த்தியை வைத்து வீட்டிற்கு வெளியே வைத்து விடுவார்கள். இதற்குப்பெயர்தான் jack-o-lantern.

பரங்கிக்காய் ரோல்ஸ், கேக்ஸ், ஸூப் எல்லாமே பரங்கிக்காய்தான். காய வைத்த விதை கூட விஷேசமுங்க!

' Trick or Treat ' (actually a demand by youngsters in 1930s) ஹாலோவீன் அன்று மாலை 3 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் வித விதமாக உடையணிந்து வருவார்கள். முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு, அல்லது பயமுறுத்தும் வகையில் முகமூடியணிந்தும், எலும்புக்கூடுகள், கடற்கொள்ளையர், அல்லது லேட்டஸ்ட் சினிமா, கார்ட்டூன் காரெக்டர்ஸ் போன்று உடையணிந்து வலம் வருவர். உடன் வீட்டுப் பெரியவர் ஒருவரும் வருவார். பரங்கிக்காய் கூடையுடன் இவர்கள் வீடுவீடாகச்சென்று மிட்டாய்கள் candies, கேட்பர். எல்லாருமே எதிர்பார்த்து வாங்கி வைத்து வினியோகிப்பர்.

Malls எனப்படும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஷில் ஒவ்வொரு கடை முன்னாலும் வினோதமான உடை அனிந்து கடை முன் ஒருவர் அமர்ந்து மிட்டாய்களை வினியோகிப்பார். சிறுவர்கள் கூட்டம் அபரிதமாக இருக்கும்.

'Leasing Office' பக்கத்திலுள்ள club house ல் இந்த ஊர்வலத்திற்கு முன்னால் பெரியவர்களுக்கும் ஒரு பார்ட்டி உண்டு.

Halloween haunted houses என்று automated electronic devices மூலம் உங்களை பயமுறுத்தும் பொம்மைகள் இருக்கும். லோக்கல் நியூஸ் பேப்பரில் அல்லது டிவியில் இது குறித்து விளம்பரங்களைக் காணலாம். ஃபிரீயாகவும் இருக்கலாம்.

கீழே கண்ட யூ ட்யூப் 3 நிமிடப் படத்தைப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=FHJYu-UxnbQ

இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருந்த அபார்ட்மெண்ட்ஸைச் சுற்றி அத்தனை இந்தியச்சிறுவர்கள் (பார்த்தாலே தெரியாத நம்மாளை!) ஹாலோவீன் அன்று தீபாவளியைப் போலதிரிந்தார்கள். தீபாவளியன்று ஒரு பிள்ளையக்காணோம். கோயிலுக்குப்போயிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics


WWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWW
HALLOW E'EN! (the evening before All Hallows Day)

Independence day, Veterans day, Christmas, New Years day, and Halloween fall on definite dates every year. All other holidays are combined with weekends. If holiday falls on Saturday, then Friday would be a holiday. If a holiday falls on Sunday then Monday would be a holiday.

Halloween falls on October 31st every year. Though it originates from Europe,it is believed to be celebrated for warding off evils and inviting good souls, and also to be welcoming the 'Fall' and the winter.

Scarecrows, paper skeletons, black cats, spider web made of threads, ghost images, bats, brooms and witches, pumpkins, and jack-o-lanterns are displayed in front of the houses.

The pulp inside the pumpkin is carved out. On the outer side two eyes a nose and few scary teeth are carved out with a knife. A candle is placed inside. This is known as jack-o-lantern.

Rolls, cakes and soups are made using pumpkin.

' Trick or Treat ' In the evening,The children aged 3 to12 dress up in different forms, mostly face painted like ghosts, wearing masks like presidents, dressed like pirates, avatars, skeletons. They start from their houses with one elderly person from each family, in the October 31st evening as a group and go around from house to house in the neighborhood, with open pumpkin plastic baskets collecting candies and chocolates.

In the shop houses in malls, an employee sits outside the the shop dressed in a scary manner or like one of the latest characters in cartoons and distribute candies. The whole children crowd will be there.

Look for a party organized by the leasing office of your apartment in the evening of Oct 31st at the clubhouse nearer to it.

A few people join together and create Halloween haunted houses artificially with a lot of automated electronic devices to scare off people. These houses are open normally from october 1st. They advertise the venue in newspapers. They normally charge like $10. Most of the time they are free. You can view an example at the following website.
http://www.youtube.com/watch?v=FHJYu-UxnbQ

In fact around the apartments we lived in there were so much of Indian children, still with some remnants of India, that the place seemed to be Little India.


2 comments:

  1. FINE AND FANTASTIC ISSUE ABT HALLOWEENS .. I VE SEEN IT BE4 .. BUT GET CLOSER WITH THIS ISSUE ..:))

    ReplyDelete
  2. A different view of Halloween. 'மாத்தி யோசி'

    ReplyDelete