Labels

Tuesday, October 26, 2010

2. அமெரிக்க அபார்ட்மென்ட்ஸ் American apartments

நகரங்களில் "ஸ்டுடியோ அபார்ட்மென்ட்","அபார்ட்மென்ட் வீடு", "டவுன் ஹோம்ஸ்", "கொன்டோ" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்டுடியோ அபார்ட்மென்டில் பெரிதாக ஒரு ஹால், சமையல் டேபிள், பாத் ரூம் முதலியவை உள்ளன.

சாதாரண அபார்ட்மென்ட் வீடுகளில் மேலும் தனி பெட் ரூம் உண்டு.

டவுன் ஹோம்ஸ் எனப்படுவைகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிதனி நுழைவு வாயில் தனிக்கதவுகளாகவும், காரெஜ் வசதிகளுடன் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பாத்ரோம், பெட்ரூம்களுடன் இருக்கும்.

இவையெல்லாமே வரிசையாகவும் மூன்று அல்லது அதற்கு மேல் அடுக்குகளாகவும் உள்ளன. இம்மூன்றுவகை வீடுகளுமே ஒரே காம்பவுன்டிற்குள் ஓரே கம்பெனியால் கட்டப்பெற்று வாடகைக்கு விடப்படுகின்றன.ஸுமார் 300 முதல் 500 வீடுகள் வரை இருக்கும். வாடகை $600 முதல் $1400 வரை இருக்கும்.

சொந்த வீடு வாங்குபவர்கள் சூப்பர் சிங்கரில் வரும் அருன் எக்செல்லோ வைப்போல் கோன்டோவில் வாங்க வேண்டும். அதாவது பிளாட் வீடுகள்! கனவுதான். யு ஓன் "அன்டிவைடெட் லான்ட்"

இன்னும் பெரிய கனவு, தனி வீடுகள். நிலம் உங்களுக்குச்சொந்தம். ஆனால் நீங்கள் காம்பௌன்டு சுவர் கட்ட முடியாது!

உங்கள் வீட்டைச்சுற்றீ ஃப்லோரிடா போன்றவற்றில் குளங்கள் நிறைய உண்டு. முதலைகளும் உண்டு பாம்பு ஆமைகளும் உண்டு. நீங்கள் ஒன்றும் செய்யாவிட்டால் அவைகளும் ஒன்றும் செய்யாது. இருந்தாலும் இரவில் வாக்கிங் போவதைத் தவிர்ப்பது நல்லது! தவறி அவை வெளியே வந்துவிட்டால் குளத்தினுள்ளே எடுத்து விடுவதற்கு ட்ரெய்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது,"நம்மைப்போல அவைகளும் இங்கே ரெம்ப நாட்களாகவே இரூக்கின்றன." அமெரிக்க சம உரிமை! எதுலேப்பா?

நீங்கள் நம்ப வேண்டியது இத்தனை வீடுகளும் மரத்தாலானவை

மரம் நிறையக்கிடைப்பதால் மலிவு. நிலநடுக்கத்திலும், ஹரிகேன் காற்றிலும் குறைந்த சேதத்தை உண்டாக்குவது. மரவேலை தெரிந்த ஆசாரி மட்டும் போதும். கொத்தனார், சித்தாள், செங்கல், சிமென்ட் என்ற அலக்குடுப்பெல்லாம் வேண்டாம். இப்பொது தெரிகிறதா ஏன் கொத்தனாரெல்லம் சிங்கப்பூர் மட்டும் போகிறார்கள் என்று. சொல்லப்போனல் "ஹோம் டெப்பஓ" என்கிற சூப்பர் மார்கெட்டில் மர வீடு கட்டத்தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன. சிறுவர்களுக்கு சிறிய மரசாமான்கள், சேர், சிறிய வீடு போன்றவற்றை எப்படிச்செய்வது என்று கற்றுக்கொடுக்கிறார்கள்.


வெள்ளைப்பணியாரம், வற்றல் வறுப்பது, கவனம் தேவை! ஸ்மோக் அலாரம் கத்தத்துடங்கிவுடும். பரவயில்லை கழற்றி வைத்துவிடுவொம். ஆனல் அபார்ட்மென்ட் ஆள் யாராவது பார்த்துவிட்டால் ஃபைன் கட்டத்தயராகவேன்டும். வீட்டினுள்ளேயே தீப்பிடித்தலைத் தவிர்க்க  வாட்டர் ஸ்ப்ரின்க்லெர் உண்டு. தனித்தனி ஏர் கண்டிஷனர்/ஹீட்டர் டிஷ் வாஷர், ஃபிரிட்ஜ் எல்லாம் வீட்டோடு உண்டு. எலெக்ட்ரிக் சுவிச்செல்லாம் தலைகீழ். ஆன் என்றால் ஆஃப். ஆஃப் என்றால் ஆன். எதாவது   வீட்டில் கேட்டு  விட்டால் இன்டெர்னெட்டில்  அல்லது போனில் புகார் குடுக்கலாம். உடன் ஆள் வருவார். ஃப்ரீ தான். இப்படி வந்தவர் ஒருவர் சகல கலா வல்லுனர் (elctrician,plumber,woodworker,i.e. carpenter)

பாத்ரூமில் பொட்டு ஈரம்கூட இருக்காது. குளிப்பது கழுவுவது எல்லம் பாத்டப்பினுள்தான்!!. தரை மரமல்லவா?! நோ இந்தியன் க்ளோஸெட். டிஸூ பேப்பர் நிறைய செலவாகிறது.



காம்பவுன்டிற்குள்ளெயெ உள்ள Community Amenities
இவற்றில் குறிப்பிடத்தக்கவை முதல் மூன்றும்.
Immediate repair services free of cost
Controlled Access Entry Gate
Laundry facilities 
Grilling Area(s)
Picnic Area(s)
Fully Equipped Fitness Center
Two Lighted Tennis Courts
Car Care Center
Recycling Area
Pet Friendly (rules apply)
Swimming Pool
Post boxes


Controlled Access Entry Gate: காம்ப்வுண்டிலிருந்து கார்களில் வெளியே செல்வதற்கு 'remte control' கேட் உண்டு. நடந்து போகிறவர்களுக்கு  ஒரு தனி சின்ன கேட். நடந்து உள்ளே வருவதற்கு "access key" என்று ஒரு சின்ன சாக்லேட் போன்ற ஒரு பொருள். அதை ஒரு எரியும்  சிகப்பு LED மேல் வைத்த உடன் கேட் திறக்கிறது. புதிதாக கார்களில் வருபவர்கள் குடியிருப்பவரின் பெயரைத் தட்டிப்பார்த்தால் ஒரு code நம்பர் வரும். அந்த நம்பரை அழுத்தினால் நம் நண்பரின் வீட்டில் போன் அடிக்கும். அவர் உடன் குறிப்பிட்ட நம்பரை அழுத்தினால் கேட் திறக்கும்!


பக்கத்து வீட்டு மக்கள், வெள்ளையர், கறுப்பர், பிரௌனர், மஞ்சளர் எல்லாருமே , நம்மை பார்க்கும்பொது "ஹாய் ஹௌ ஆர் யு?" என்று புன்சிரிப்புடன் செல்கின்றனர். அவர்கள் பேசுவது புரிய கொஞ்சம் நாளாகும். அதற்குள் விசா முடிந்து ஊருக்கு வந்து விடுவோம்.


I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics






4 comments:

  1. MAMA SUPER UNGA TAMIL.." அமெரிக்க சம உரிமை! எதுலேப்பா? AND அவர்கள் பேசுவது புரிய கொஞ்சம் நாளாகும். அதற்குள் விசா முடிந்து ஊருக்கு வந்து விடுவோம்.

    SUPER

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு மாமா..ரசித்தேன்.. ரொம்ப ஹ்யுமரஸ்..:))

    ReplyDelete
  3. Nice one Mama. Informative & Interesting. Have a nice time.

    - Meyyar

    ReplyDelete
  4. moral conveyed by this blog:
    if you get a chance to squeeze out atleast a little amount of work from "kothannar, sithal and cement", you get the talent to write interesting blogs!

    ReplyDelete