Labels

Friday, July 1, 2016

52. ஆயுர் வேதம் ஆரோக்கியம் கூட்டும் 2 !

ஆயுர் வேதம் ஆரோக்கியம் கூட்டும் 2 !

 ஆடு தொடா  இலை 

எருக்கு 

கரு நொச்சி 

இந்த வருடம் (2016) ஆனி மாதத்தில் கேரளாவில் மழைக்காலம் ஆரம்பித்தது. மறுபடி மூன்றாம் வருடமாக (ஜூன் மாதம் பிற்பகுதியில்) எண்ணை போட கொல்லம் வந்து சேர்ந்தோம். “கொல்லம் கண்டா இல்லம் வேண்டா என்பது பழமொழி

முன்கூட்டியே காரைக்குடியிலிருந்து ஃபோன் செய்து வைத்தியர் இருப்பாரா, அறைகள் கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு புறப்பட்டு வந்தோம்.

காலை 10 மணிக்கு வைத்தியர் எங்கள் குறைகளைக் கேட்டு அறிந்து மருந்தாளுனரிடமும் (pharmacist) எண்ணை தேய்ப்பவரிடத்திலும் (physiotherapist) விபரங்களைக் கூறிவிட்டார். கற்கடக பருவ காலமாதலால் கூட்டம்தான். ஒரு ஆளுக்கு எண்ணை தேய்க்க ஒரு மணி நேரம் ஆகும். காலை 5.30 முதல் உள்ளூர்வாசிகள் வர ஆரம்பிக்கிறார்கள். 9 மணிக்கு மேல் வைத்தியசாலையில் தங்கி இருப்பவர்களுக்கு ஆரம்பிக்கிறார்கள்.

இரண்டு பேருக்கு சாப்பாடு, மருந்துகள், அறை வாடகை, எண்ணை தேய்க்க என்று 11 நாட்களுக்கு சுமார் 28,000 ரூபாய் வரை ஆகலாம்..

ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும் எண்ணை தேய்க்கிறார்கள். ஆனால் “Dress code” என்ன   “loin cloth” தான்!!

முதலில் ஒரு நாற்காலியில் உட்கார வைத்து உச்சந்தலையில் எண்ணை வைத்துத் தேய்க்கிறார்கள். பிறகு கழுத்திலும் முதுகிலும் தேய்த்து, தடுமன் பிடிக்காதிருக்க ராஸனாதிப் பொடியும் தேய்த்துவிடுகிறார்கள். தந்வந்த்ர எண்ணையில் முருக எண்ணையும், கற்பூர எண்ணையும் கலந்து (சுமார் 1 ½ லிட்டர்) சூட்டோடு தேய்க்கிறார்கள்.



அதற்கென காஞ்சீர  மரத்தால் செய்யப்பட்ட மேஜையில் கால்களை நீட்டி உட்காரச் சொல்லி இரண்டு பக்கமும் இருவர் நின்று சூடான எண்ணை கொண்டு அழுத்தித் தேய்ப்பார்கள். நம்மை உட்கார வைத்து கைகளை மஸாஜ் செய்வார்கள்.

பிறகு குப்புறப் படுக்க வைத்தும், மல்லாக்க படுக்க வைத்தும் கை விரல் முதல் கால் விரல் வரை அழுத்தி நீவி விடுவார்கள்.

வலி இருக்கும் இடத்தில் சற்று நேரம் கூடுதலாகவும், அழுத்தம் கூடுதலாகவும் தேய்த்து விடுவார்கள்.

அதன் பின் நீராவிக் குளியலில் நன்கு வேர்க்கும்வரை அல்லது நம்மால் தாங்க முடிந்த வரை இருக்க வேண்டும். துர்நீர் வெளியேறவும் மருந்துகளின் குணங்கள் உள்ளேறவும் பயன் படுகின்றது இது. இதற்காக பிரத்யோகமாக காட்டுப் பலா (அய்னி/அஞசிலி) மரத்தாலான பெட்டி ஒன்று உண்டு. அதனுள் ஒரு நாற்காலியும் உண்டு. பிரஷர் குக்கரிலிருந்து வரும் ஆவி உள்ளே செலுத்தப் படுகிறது. தலை மட்டும் வெளியே தெரியும்படி கதவைச் சாத்தி விடுவார்கள்


இறுதியாக கடலை மாவு தேய்த்து சுடு தண்ணீரில் குளித்து ராஸனாதிப் பவுடரை முகர்ந்து பார்த்து, உச்சந்தலையில்  தேய்த்துக்கொண்டு வரலாம்.

இள்ஞ்சூட்டில் எண்ணையை மஸாஜ் செய்வதால் உடம்பில் உள்ள நாடி நரம்புகள் தசைகள் இளகி ரத்த ஓட்டம் சரியான முறையில் நடைபெறும். எண்ணையில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படும். மூட்டு வலியும் குறையும். பசி கொடுக்கும். மேலும் அழுத்தி மஸாஜ் செய்பவதால் கல்சியம் படிந்து இறுகிப்போன எலும்பு இணைப்புகளும், தசையை எலும்புடன் இணைக்கும் நார்களும் இள்கி தளர்வு கொடுக்கும். இது முதல் 3-5 நாட்களுக்கு நடக்கும். பிற்கு உடலுக்கு பலமூட்டவும், மறுபடியும் வராமல் தடுக்கவும் (கிளி) சிகிச்சை தொடரும். எண்ணை தேய்த்ததைப் போலவே கிளி முடிச்சையும் சூடான எண்ணையில் நனைத்துத் தேய்ப்பார்கள்.


athira, sutha, prasanna senior







1 comment:

  1. Good effort .Do more .My Best Wishes.Better half Saunthala.


    ReplyDelete