குளிக்கலாம் வாங்க!
“நம்மளால பச்சத் தண்ணீலெல்லாம் குளிக்க முடியாதுப்பா”
“அட? முடியும் வாங்க!”
“அப்டியா”
“நல்லா மூச்சை இழுத்துப் பிடிச்சிக்குனு, பெறகு மெதுவா மூச்சை வெளியே
விட்டுக்கினே, தண்ணியையும் மெதுவா தலையில் ஊத்திப் பாருங்க!”
நரம்புகள் தோலின் கீழே முடியும். அவைகள் ஐந்து வகைப்படும். அவற்றில்
ஒன்று சூட்டை உணரக் கூடியது. மூச்சை தம் கட்டும்போது அவற்றின் உணரும் தன்மை குறைக்கப்
படுகிறது என நினைக்கிறேன்.
எப்படிக் குளிக்க வேண்டும்?
“நல்லா நிறையத் தண்ணிய மோந்து ஊத்தித்தான்”
”இல்லீங்க, ஒரு லிட்டெர் குவளையும் 20 லிட்டெர் வாளித்தண்ணியும்
போதுங்க”
குவளையில் தண்ணீர் முகந்து, தலை வழியாக மெதுவாக ஊற்றவும். சுமார்
40-60 செகண்ட் வரை எடுத்துக் கொள்ளவும். காலில் வந்து விழும்போது சுடுவதை உணர்வீர்கள்.
ஏன் மெதுவாக? Because water is a bad conducor of
heat. And therefore we have to give it some time to absorb the heat. தண்ணீர்
ஒரு சுமாரான வெப்பம் கடத்தி. ஆகவே நம் உடம்போடு சிறிது நேரமாவது ஒட்டியிருந்தால்தான்
அதனால் வெப்பத்தைக் கடத்த முடியும்.
Specific heat capacity of
water is 4200 J/kg/0C. அதாவது ஒரு குவளைத் தண்ணீர் (1 லிட்டர் = ஒரு கிலோ) நம் உடம்பிலிருந்து உஷ்ணத்தை
ஒரு டிக்ரீ செல்ஸியஸ் அளவிற்குக் குறைக்க 4200J
வெப்ப சக்தியை எடுத்துச் செல்கிறது. ஆக நிறையத்தான் வெப்பத்தைக் கடத்துகிறது. ஆனால்
சுமாரான வெப்பம் கடத்தி என்பதால் மெதுவாக ஊற்ற வேண்டும்.
நல்லாக் குளிங்க!
!
மூச்சை நிறுத்துங்க?
யோகாவில் ”மூச்சை இழுத்து, நிறுத்தி, மெதுவாக வெளியேற்றி, நிறுத்தி,
பின் மூச்சை . . . “ என்று சொல்லிக் கொடுப்பார்கள். உடற்பயிற்ச்சிகளையும் “ காலை மெதுவாகத் தூக்கி, நிறுத்தி, பின் மெதுவாக கீழே இறக்கி, நிறுத்தி
. . .” என்பார்கள். அது எதுக்கு நிறுத்தி நிறுத்தி?
பேருந்தில் அமர்ந்திருக்கும்போது, ஓட்டுனர் ப்ரேக்கை அழுத்தும்போது,
நம் உடம்பு தானாக முன்னே போவதை உணர்வீர்கள். அதுதான் inertia
என்பது. Inertia is the tendency of a body to
coninue to do what it is doing. Resting body continues to be at rest and the
moving body continues to move unless acted upon by external forces..
நீங்கள் மூச்சை உள்ளே இழுத்து நிறுத்தும்போது காற்றானது அலைஅலையாய்
சில வினாடிகள் உள்ளே செல்வதை உணரலாம். அதன் பின் நுரையீரலில் அல்வியோலஸ் செல்கள் பிராணவாயுவை
உறிஞ்சும். மாறாக காற்றை உள்ளே இழுத்து உடனே வெளியே விட்டால் பிராணவாயு உறிஞ்சப் படுவதில்லை.
நீங்கள் அதற்காண கால அவகாசம் கொடுக்கவில்லை.
வாழ்க ஆரோக்கியத்துடன்!
அறிந்தேன் ஐயா... நன்றி...
ReplyDelete