பிரிந்தவர் கூடினால் ! !
முதலில் இந்தத் தலைப்பே சரியா என்ற கேள்வி என்னுள் எழுந்தது; தொழில் நிமித்தமாக வசிப்பிடத்தால்
பிரிந்திருந்தாலும், மனதளவிலும் சமூகவலைத் தளங்கள் ஊடாகவும் இணைந்து
இருப்பவர்கள்தானே நாம்? இருந்தாலும் அவ்வப்போது நேரில் சந்திப்பதுபோல்
வருமா? அப்படி சமீபத்தில் நேரில் சந்தித்து மகிழ்ந்த உறவினர்கள்
பற்றிஉங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பெண் குழந்தைகள் கலியாணம் ஆனவுடன் வேறு குடும்பங்களுடன்
ஐக்கியமாய் விடுவர். ஆனாலும் நாம் “பெண்கிளைபெருங்கிளை” என்றுதான் சொல்வோம். அப்படி மேற்கொண்ட மறு சந்திப்பு நிகழ்ச்சிதான் கோட்டையூர் சி.அ.சி. வகையறா பேத்திகளும் அவர்களின் வாரிசுகளும் மேற்கொண்ட சந்திப்பு (S.A.S Family Reunion) நாள்: 29-12-2013, ஞாயிற்றுக் கிழமை.
Employers
to employees என்று மாறிய சமூகத்தை (இளையசமுதாயத்தை)
Employers ஆக மாற்ற
வேண்டும் என்பது சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த நகரத்தார் உலக வர்த்தக மாநாட்டின்
குறிக்கோளாக இருந்தது.
நம் குழந்தைகளுக்கு நம் முன்னோர்களின் சாதனைகளையும், அவர்கள் சந்தித்த சோதனைகளையும், அதனிலிருந்துமீண்டு வந்ததையும், குலப் பெருமையையும், அதனை அவர்கள் காப்பாற்ற வேண்டியதின்
அவசியத்தையும், அவரவர் பெரியப்பச்சி, பெரியய்யா, பெரியாயா/அப்பத்தா, மாமா, அத்தை போன்றவர்களின் வாயிலாக நேருக்குநேராகக் கேட்கவைப்பதும்
பெரியவர்களுக்கு business தொடர்புகள் கொள்ள வாய்ப்பளிப்பதும்தான்
நமது நோக்கமாக இருந்தது. இவை பெரும்பாலும் நிறைவேறியது!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் வரும் கானத்தூரில்
உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் அருகே உள்ள பங்களாவில் சந்தித்தோம். இது காரைக்குடி ஹோட்டல் சிருங்கார் நிறுவனரால் நடத்தப்பெறுவது
என அறிந்தோம். பங்களா, மண்டபம், தோட்டம்எனசுமார் 20,000 சதுரஅடிஇருக்கும்.
சந்தித்துச் சந்தோஷப்பட்ட குடும்பங்கள்
முப்பத்தி ஒன்று, 31. நபர்கள் 85. அமெரிக்கா, ஹாங்காங், குவைத், சிங்கப்பூர், நாகர்கோயில், மதுரை, சென்னை, காரைக்குடி மற்றும்
பல ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள்.
நிகழ்ச்சிக்கு வித்திட்டவர்கள், ஏற்பாடுகள் செய்து நடத்தியவர்கள்: திரு லட்டுகண்ணன் (சுப. லெஷ்மணன்) காசி நகரச்சத்திரச் செயலாளர்
ராமனாதன் (கொத்தமங்லம்), சுதா (நாகம்மைலெஷ்மணன்) அவர்களும்.
நிகழ்ச்சிநிரல்
08.30
- 09.30
|
வருகை, காலைஉணவு
|
09.30
- 10.30
|
ஜெகந்நாதர் கோவிலில் காசிவிஸ்வநாதர், காஞ்சிவிநாயகர், ஜெகந்நாதர்(கிருஷ்ணர்), பலராமன், சுபத்ரா தரிசணம்.
|
10.30
- 11.30
|
Thumb
Charade
|
11.30
– 01.00
|
முன்னோர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளல் – இதுதான் மிக முக்கியம்.
|
1
– 2
|
மதியஉணவு, கலந்துரையாடல்
|
02.00
- 02.30
|
பழமொழித் துண்டுகளை ஒன்றுசேர்ப்பது 15-24வயது
|
02.30
– 03.00
|
பெற்றோர் சொல்ல சொல்ல, கண்ணைக்கட்டிக்கொண்டு 3-5 வயது குழந்தைகள் ஒரு படத்தை முழுமை செய்வது
|
03.00
- 03.30
|
பெண்களுக்கான ping-pong-name
எனும் நிகழ்ச்சி
|
03.30
- 04.00
|
ஆண்களுக்கான ping-pong-name
எனும் நிகழ்ச்சி
|
4
|
டீ சிற்றுண்டி
|
04.00
- 04.30
|
musical
chair for youngsters
|
04.30
- 5.00
|
slide show, Family Tree, பாட்டையா, பாட்டியாயா முதலானோர் போட்டோக்களைப் பார்த்து,
வந்திருந்தவர்கள் நினைவு கூறல்.
|
05.00
– 06.00
|
ஒருவருடன் ஒருவர் சந்திப்பு. இப்போது நெருக்கமாகி விட்டார்களல்லவா!
|
6.30
|
Pack செய்யப்பட்ட இரவு உணவுடன் அனைவரும் பயணம்.
|
வந்திருந்தவர்களிடம் பின் தொடர்புகொள்ள வீட்டு விலாசம், முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முதலியவை பரிமாற்றம். அதுவரை எடுத்த புகைப்படங்களின் பரிமாற்றம்.
நிகழ்ச்சிகளை compere செய்து சுதா லெஷ்மணன் தொய்வில்லாமல் நடத்திச் சென்றது மெச்சத்
தகுந்தது.
இனிமேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நினைப்பவர்களுக்கு
ஒரு வழிகாட்டியாக இக்கட்டுரை இருக்கும் என நம்புகிறேன்..
வணக்கம்... மிக்க மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புடன் DD