Labels

Sunday, November 13, 2011

18. மெட்றாஸ் நல்ல மெட்றாஸ் 1

18. சென்னையில் அடுக்கு மாடி வீட்டில் குடியேறப் போகிறீர்களா?
Well’s always well, கிணறு கிணறுதான்   -  கிணறு நல்லதுதான் !

மேலேயுள்ளவை எல்லாம் கட்டுரைக்கான தலைப்புகள்! எப்டி வேணுனாலும் வச்சுக்குங்க!
முதல்ல நம்ம ஊரத்தெரிஞ்சுக்குங்க. காரக்குடி! தான்.

பையனுக்குச் சென்னைல வேலை கிடைச்சாச்சு. நம்மளுக்கும் வேலை இல்ல! பட்டணம் போகலாம்மான்னு இரண்டு பேரும் யோசித்தோம். பையனுக்கும் 6 வருஷம் ஹாஸ்டல் சாப்பாடு அலுத்துப் போச்சு. அம்மாவத்தான் அடிக்கடி தேடிக்குவான். அதுக்காக நான் மட்டும் போகாம காரைக்குடியிலேயா உட்கார்ந்திருக்க முடியும்?

புதுசாக் கட்ன வீட்ல குடியேறுவதே ஒரு தனி ஆனந்தம்தான். 30க்கு 60தில கீழ ஒரு வீடு, மேல 2 வீடு அப்றம் மேலே இன்னொரு வீடு. நமக்கு முதல் தளத்துல பின் வீடு. (னம்ம நோக்கப்படி ஸ்பெல்லிங்லாம் பார்க்காம எழுதறதே ஜாலிதான்)

கீழேயுள்ள வீட்டில் 9 IT பிள்ளைங்க. அடுத்த வீட்டில் 6 IT பிள்ளைங்க. நம்ம வீட்ல 3 பிள்ளைங்க !

முதல் இரண்டு நாட்கள் 6 பாத்ரூம் டாப்லையும் தண்ணி ஒழுங்கா வந்துச்சு. அடுப்படில 2 பீலி?லையும் பேஸின் 2 லையும் தண்ணி ரெம்ப ரெம்ப மெதுவா வந்துச்சு. சில சமயங்களில் வராது. ஆகா வீடு நல்லாருக்குனு எல்லாரும் சொல்லி கண்ணு பட்டுப் போச்சோன்னு நினைத்தேன்.

பில்டரக் கூப்பிட்டுக் கேட்டாசார், ஏர் லாக் ஆகியிருக்கும் எல்லா பைப்பையும் தொறந்து விட்டுட்டு சிறிது நேரம் சென்று பாருங்கள். சரியாகிவிடும்என்றார். ஏதோ ஆன மாதிரியும் இருந்துச்சு, ஆகாத மாதிரியும் இருந்துச்சு.

அடுத்த வீட்டுக்கு வந்த  ப்ளம்பரைக் கூப்பிட்டு சரி செய்யச் சொன்னேன். நல்ல பையன், வந்தான், ஸ்பானரை வைத்துத் திருகினான். அருவியாக் கொட்டினது. அதாவது பேஸின் பைப்புகளுக்கெல்லாம் நுனியில் ஒரு ஃபில்ட்டர் வைத்திருக்கிறார்கள். அது அடைத்துக் கொண்டிருப்பதாகக் கூறினான். ”டாங்க க்ளீன் பண்ணுங்க சார்என்றான்.

டாங்க க்ளீன் பண்ண ஏறிப் பார்க்கனுமில்லியா? ஏணிப்படியே வைக்கலை. ஓரு வழியா சுவத்தைப் புடிச்சு ஏறிப் பார்த்தா மூடியே இல்லை. தண்ணியும்தான். பில்டரக் கூப்பிட்டுஏணிப்படி வைச்சுத் தாங்க, மூடியப் போட்டு தண்ணிய மூடுங்கஎன்று செல்லில் சொல்லிவிட்டு வந்தா போர்வெல் மோட்டார் பெரும் சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.

இந்தச் சத்தத்தோடு இரண்டு நாட்கள் ஓட்டியாயிற்று. மூன்றவது நாள் சத்தம் கூடிக் கொண்டே வந்தது. பக்கத்து ஃப்ளாட்டிலிருந்து எல்லாரும் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். எதிர்த்த வீட்டுக்காரர் வந்தார். “நாங்கள்ளாம் எப்பிடி சார் குடியிருக்கிறது. கண்ட நேரத்தில மோட்டாரப் போட்றீங்க. கம்ப்ளேய்ண்ட் பண்ணப் போறேன்என்றார். யார்ட்டனு கேட்காம இதாண்டா சாக்குன்னு பில்டர் நம்பரைப் போட்டுக் குடுத்தேன்! பில்டர் ஆளை அனுப்பி மோட்டரைக் கழற்றிச் சென்றார். 3 நாள் ஆகுமென்றார்


ஒரு மோட்டரைக் கெடுத்தாயிற்று, இன்னொன்னை விடலாமா. IT பிள்ளைங்க எல்லாம் sump மோட்டார்ல கை வச்சுட்டாங்கஸம்ப்ல தண்ணியில்லாமே ஓட்டிட்டாங்க. பதறிப்போய் ஒடிஅப்பா, அம்மா பிள்ளைங்களா நீங்கள்ளாம் எஞ்சினியர்தானே படிச்சீங்க?” ”ஆமா அங்கிள் ஆனா IT, Computer Science, Electronic and communication” என்றதுகள். கேலி பன்றேன் என்று தெரிந்து போய்விட்டது. ஸம்ப்ல தண்ணியில்லாம ஓட்னா மோட்டார் காயில் எரிந்து போய் விடும் அம்மா என்று சொல்லி விட்டு டாங்கர் (தனியார், மாநகராட்சி இரண்டிலும் இருக்கிறது) தண்ணிக்கு ஆர்டர் குடுத்தோம்.

12000 லிட்டர், 900 ரூபாய், 48 மணி நேரத்தில முடிச்சுட்டாங்க க்ITடிக்கரப் பசங்க. 8000 லிட்டர்னா ரூ.600தான். நமக்கு பங்கு 3/18 தான் குடுக்கனும். இருந்தாலும் 48 ஹவர்ஸ்லயா. தர முடியாது என்று சொல்லி விட்டேன். ”எப்பிடி சார், 12000 லி. 1 வாரத்துக்கு வரனும் சார். இன்னும் ஆள் வராத வீட்லல்லாம் தொறந்து பார்ப்பம் சார்என்றார் பக்கத்து வீட்டுக்காரர். ஆனால் ஒன்னும் மிஸ்டேக் இல்லை!

மறுபடியும் ஒரு டாங்கிற்கு ஆர்டர் குடுத்தோம்இதுவும் 48 மணி நேரத்தில் முடியப் போற சமயத்தில் சரிசெய்யப்பட்ட போர்வெல் மோட்டார் வந்து சேர்ந்து காப்பாற்றியது.

அப்ப நம்ம எதிர் வீட்டு வாட்ச்மேன் பையன் வந்தான். ”ஸார் கார்ப்பொரேஷன் பைப் கனக்ஷனுக்காக ஸம்ப்பில் ஒரு இன்லெட் பைப் இருக்கும்  சார். இன்னும் கனக்ஷன் கொடுக்கவில்லை. அதனால் அது ஓப்பனா இருக்கோ, என்னமோ?” என்றான். டார்ச் லைட்டைக் கொடுத்து ஸம்ப்பில் இறங்கிப் பார்க்கச் சொன்னேன். “அடைக்கல சார்என்றான். ”பிளக் போட வராது சார், அரை இஞ்ச் cap காப்தான் போடனும். 5 ரூபாய்தான்என்றான். ”இந்தா பிடி 20 ரூபாய், வைச்சுக்கோ. அடுத்த டாங்க் வர்ரதுக்குள்ள வேலைய முடிச்சுரு. இப்பப் பார்த்து விடு.” என்றேன். “சார் சாயந்திரம் பார்க்கிறேன்என்றான். என்னடா இவன் தவணை போடுறானே என்று நினைத்தேன். ஆனால் நல்ல பையன். சாயந்தரமா குளிச்சு முழுகி வந்தான்.

தொடரும்

3 comments:

  1. Ha ha ha very funny. Waiting to read the next episode

    ReplyDelete
  2. எங்கன்னனா கொக்கா . . . ? சஸ்பென்சோட முடிசுட்டீங்க ? அடுத்தது எப்ப ?

    ReplyDelete