Labels

Monday, December 13, 2010

10. நன்றி சொல்லும் தினம் பகுதி 1. Thanksgiving Day 1.


முந்திய கட்டுரையின் தொடர்ச்சி: மிகவும் லேசான சுடு நீரில் உப்புப் போட்டிருப்பதே தெரி யாத அளவு உப்புப் போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும். இரவில் எழுந்திரிக்கும்போது கூடச் செய்யலாம். தொண்டையும் மூக்கும் ஈரமாக இருப்பது நல்லது.

இதேபோன்ற ப்ளாக்கை ஆங்கிலத்திலும் வெளியிடுவதாக இருக்கின்றேன்.
தெரிந்தவர்களுக்குச் சொல்லவும். சில நாட்களில்

http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

நன்றி சொல்லும் தினம் பகுதி 1. Thanksgiving Day 1.


ஹாலோவீன் தீபாவளி என்றால்,  தாங்ஸ்கிவிங்டே பொங்கல் போல.

ஆடித்தள்ளுபடி? பொங்கல் சலுகை?! இரண்டும் சேர்ந்ததுதான், இந்த நன்றி சொல்லும் தினத்தன்று நடக்கிறது.

உண்மையாகப்பார்க்கப்போனால் இது உழவர் தினம். நாம் சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதைப்போல அமெரிக்க விவசாயிகள் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் தினம் இது. "Happy Harvest" என்று எங்கும் தொங்க விட்டிருப்பார்கள். இந்த தினத்திலேயே பெரும்பாலோர் தங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு பரிசுகளைக்கொடுத்து நன்றி தெரிவித்துக்கொள்கிறார்கள்.

( ஹாலோவீனைக்கூட சிலர் உழவர் தினம் என்கிறார்கள்)

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காவது வியாழனன்று தாங்ஸ்கிவிங்டே வரும். அப்படியே நாலு நாள் லீவும் வரும், long weekend. இதிலும் பரங்கிக்காய் ஸ்பெஷல் டிஷ்ஷெஸ் உண்டு. உழவர்கள் ஆட்டுக் கொம்பினுள் தானிய வகைகள் பழங்கள் வைத்திருப்பர்.

அடுத்த நாள் Black Friday. அதற்கு அடுத்து வருவது Cyber Monday. sales..sales..sales தான்.

ஆடி மாதம் வியாபாரம் சுமராகப்போகுமென்பதால் ஆடித்தள்ளுபடி நடைபெருவதைப்போல இங்கே குளிர்காலத்தில்  தாங்ஸ்கிவிங்டே ஸேல்ஸ் நடைபெருகிறது. ஆனால் மிக உண்மையான தள்ளுபடி. சாதரணமாக $15க்கு விற்கக்கூடிய  பொருள் $3க்குக்கிடைக்கும்.

ஸேல்ஸ்னா ஸேல்ஸ், தி. நகர் ஸேல்ஸ் தான். எல்லா இடத்திலும் அப்படியொரு கூட்டம். கடை முன்னாடி காஃபி, குக்கீஸெல்லாம் வைத்திருப்பார்கள். பார்க்க படம்.

இனி ஸேல்ஸ் குறித்து சிறிது விரிவாகக் காண்போம்.

I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics

No comments:

Post a Comment