56. ஷாக்காயிட்டேன் !
(< 10 மில்லிஆம்பியர் ) ”சும்மாதான் தொட்டென்பா,
ஷாக்கடிச்சிருச்சு” அதைச்
சொல்ல அவர் இருக்காரே !! 
(>20 மில்லிஆம்பியர்) ஆக
இருந்திருந்தால் சொல்ல அவர் இருக்க மாட்டார்
வீட்டிற்குள் வரும்
மின்சாரம் மூன்று வயர்களைக் கொண்டது. ஃபேஸ் (Phase or Live,L,), நியூட்ரல் (Neutral, N ) மற்றும் 
எர்த் (தரை/பூமி, Earth, E.)
எலெக்ட்ரான்கள் ஃபேஸ் வயர் வழியாக சக்தியை கொண்டு வந்து மின் சாதனத்தினுள்
சூடாக்குவது, சுற்றுவது, வெளிச்சம் கொடுப்பது போன்ற வேண்டிய வினைகள் புரிந்து நியூட்ரல் வயர் வழியாக வெளியேறும். 
அயர்ன்பாக்ஸ், கிரைண்டர்,
மோட்டோர்கள் இன்னும் பல மின் சாதனங்களின் வெளிப்புறம் உலோகத்தால் ஆனவை. கிழே
விழுவது போன்ற ஏதாவது ஒரு காரணத்தினால் லைவ் வயர் இந்த உலோகத்தைத் தொட நேர்ந்தால்,
கசியும் மின்சாரம் இந்த பெட்டியினுள்
பாய்ந்து விடும். நாம் அதைத் தொட நேர்ந்தால் நமக்கு மின் அதிர்ச்சி ஏற்படும்.
பூமியும் நாமும் ஒரே சக்தி நிலையில், 0 வோல்ட்டில் இருக்கிறோம். ஃபேஸ் வோல்டேஜ் 240 ஆகவும் எர்த்
வோல்டேஜ் 0 ஆகவும் வித்தியாசம் இருப்பதால் மின்சாரம் நம் உடம்பு வழியாக பூமிக்குச் செல்கிறது. ஷாக் 0அடிக்கிறது.
 இதைத் தவிர்க்க அந்த உலோகப் பெட்டியினை ஒரு வயர் கொண்டு
பூமியுடன் இணைக்க வேண்டும். பெட்டியிலிருந்து மின்சாரம் பூமிக்குள் பாய்ந்து விடும். பூமியும் நாமும் ஒரே சக்தி
நிலையில் இருப்பதால் மின்சாரம் நம்முள் பாய்வதில்லை.
எர்த் வயர்  நம்மை ஷாக் அடிப்பதிலிருந்து
காப்பாற்றும், ஆனால் கரெண்டு பில் எகிறி விடும். மின்சாரம் உள்ளே resistance  உள்ள பாகங்களின் வழியாகப் பாயாது. நியூட்ரல்  வழியாகவும் இ பி க்குத் திரும்பாது. ஆகவே
மின்னோட்டத்தின் அளவு அதிகரிக்கும். பூமி எவ்வளவு எலெக்ட்ரான்களை வேண்டுமானாலும்
உறிஞ்சிக்கொள்ளும். அப்ப பில்லிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது?! அங்கதான்
நம்ம MCB
Mini Circuit Breaker, or Fuse  உதவுகிறது.
MCB டிரிப்
ஆகும். ஃப்யூஸ் உருகிவிடும், சரியான அளவுள்ள காரீய,ஈய வயர் உபயோகப்
படுத்தியிருந்தால். சும்மா காப்பர் வயரை உருவி மாட்டியிருந்தால் கடவுள்தான்
காப்பாத்தனும்! தீப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
எர்த் வயரும் வேண்டும். முறையான ஃப்யூஸ் வயரும் வேண்டும்.
நியூட்ரலையும் எர்த்தையும் இ பி லைன்மென் ஒன்று சேர்த்து விடுவார்கள். ஆகவே
நீங்கள் தனியாக எர்த் அடிப்பது நல்லது. If not கம்ப்யூட்டர் அடி
வாங்கும்.
’
Phase
to neutral    240 V  இணைப்பு சரியாக இருந்தால் பல்ப் நன்றாக எரியும்
Phase
to earth         240 V  
எர்த் இணைப்பு சரியாக இருந்தால் பல்ப் நன்றாக எரியும்
Earth
to Neutral      < 3 V ஒரு பல்பைக்
கனெக்ட் செய்தால் டிம்மாக எரியும். or voltmeter will show <3V
எச்சரிக்கை: அனுபவமிக்க பழுதுபார்ப்பவர்களைக்
கொண்டு பழுது நீக்கவும். நீங்களாக எதையும் தெரியும் என்று தொடாதீர்கள். ஒரு
ஷணத்தில் மறதியும் அதன் விளைவுகளும் கற்பனையை மீறி இருக்கும். நான் ஒரு இயற்பியல்
ஆசிரியராய் இருந்தாலும் எலெக்ட்ரீசியனைக் கொண்டுதான் பழுது நீக்குவேன். 3/100 Ampere போதும்
மேலே அனுப்ப! MCB, Fuse  does not work speedily at
times. படிப்பறிவு
வேறு. பட்டறிவது வேறு! எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டால் அனுபவம்தான் காப்பாற்றும்.
நம் தொழில் எலெக்ட்ரீசியன் அல்ல. 
சில் சொற்கள்
Maximum = அதிக
பட்சம்
Minimum = குறைந்த
பட்சம்
Optimum = உகந்த
அளவு
Threshold = ஒரு
நிலையைத் துவக்கத் தேவையான குறைந்த அளவு
யோகாசனம் அல்லது ஃபிஸியோதெராப்பி பயிற்சிகளை மெல்ல மெல்ல மெதுவாக கடுமையின்றிச் செய்யவும்
யோகாசனம் அல்லது ஃபிஸியோதெராப்பி பயிற்சிகளை மெல்ல மெல்ல மெதுவாக கடுமையின்றிச் செய்யவும்










