Labels

Tuesday, February 7, 2012

26 NISM website



                                                          

  
வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்‼


தமிழ் வழிக் கல்வி கற்கும் 9ம் வகுப்பு மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு எப்படி பணத்தை நிர்வகிப்பது என்று சொல்லிக் கொடுக்க, நான் மொழிபெயர்த்த புத்தகத்தைக் கொண்டு, 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தோம்.

For further knowledge seeking, please refer to
Financial Education
Pocket Money 

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் ஆராய்ந்து கண்டு பிடிக்கவும் வந்த பொருளைச் பெருக்கவும் முறையாகப் பாதுகாக்கவும் அதை அளவறிந்து செலவு செய்யவும் நன்கு தெரிந்தவன் அரசன் ஆவான்.
பணம் வளரட்டும்

Saturday, January 28, 2012

25. தேர்வை எதிர் கொள்ள தெளிவான உத்திகள், Objective Qs


1.   ’பன்முகத் தெரிவு’ வினாவை உருவாக்குவது எப்படி?

கேள்வியிலேயே குறிப்பிட்ட பொருளை நோக்கி கொண்டு செல்லும் கேள்விக்கு ’குறிக்கோளுடன் கூடிய கேள்விகள்’ (objective questions) என்று பெயர். அவற்றுள் ’பன்முகத் தெரிவு’ வினா’ (multiple choice question MCQ ) என்பது ஒரு வகை, நான்கு மாற்று விடைகளில் மிகவும் சரியான விடையை தேர்ந்து எடுப்பது.

இந்த  வினாவை உருவாக்குவது எப்படி? முதலில் மாணவர்களுக்கு ’கோடிட்ட இடத்தை நிரப்புக’ என்று கேள்விகள் கொடுக்கப் படும். அதிலிருந்து சரியான விடை தவிர மிகவும் அதிகமான தடவைகளில் வந்துள்ள தவறான பதில்கள்தான் மாற்று விடைகளாக பயன் படுத்தப் படுகிறது. இதில் மாணவர்கள் எப்படிச் சிந்திப்பார்களோ அதே பாணியில் விடைகள் அமைந்திருப்பதால, அவர்கள் சரியென்று நினைத்து எதிர்பார்க்கும் தவறான விடைகளும் அங்கே இருக்கும். ஆதலால் பரீட்சை முடிந்தவுடன் எல்லா மாணவர்களும் மகிழ்ச்சியாய் இருப்பர், முடிவுகள் தெரியும் வரை!

எதிர்பார்க்கும் விடைகளைக் கண்டு ஏமாற வேண்டாம். விடையைத் தேர்ந்தெடுக்கும் முன் எல்லா மாற்று விடைகளையும் படித்துப் பார்க்கவும் ஏனென்றால் நீங்கள் முதலில் தேர்ந்தெடுத்த விடையை விட மிகச் சரியான விடை வேறொன்று இருக்கலாம். 

அதனால் தான் . . . .  மேலே தடிமனான எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தையைப் படிக்கவும்





Saturday, January 21, 2012

24. 72, 115 எனும் விதிகள், Rule of 72, 115



வட்டி விகிதம் X வருடங்கள் = 72

அதாவது வட்டி விகிதம் 9% என்றால் உங்கள் வைப்பு நிதி 8 வருடங்களில் இரட்டிப்பாக ஆகும். 12% வட்டி விகிதம் என்றால் 6 வருடங்களில் இரட்டிப்பாகும். 9 X 8 = 72 ; 12 X 6 = 72

இதே போல் வட்டி விகிதம் X வருடங்கள் = 115 என்றால் உங்கள் வைப்பு நிதி 11.5% என்ற வட்டி விகிதத்தில் 10 வருடங்களில் மூன்று மடங்காகும்.
11.5 X 10 + 115

இது ஒரு பொதுவான விதி. கூட்டு வட்டியாகக் கணக்கிட்டால் இன்னும் குறைந்த காலத்தில் பெருகி விடும்

உங்களிடம் யாராவது பணத்தை 2 வருடத்தில் இரட்டிப்பாக்கித் தருகிறேன் என்று சொன்னால், 72/2 = 36% வட்டி என்று அர்த்தம். உங்களுக்கு இந்த வட்டியும் கொடுத்து, மேற்கொண்டு சம்பாதிப்பதும் அவரால் முடியாத காரியம்!

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான். செய்யத்தக்க செயல்களை உடனே செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

                                                                                                                  பணம் வளரட்டும்


Friday, January 13, 2012

23. முதலீட்டு வியூகம்: (100 – வயது). Equities n Age

முதலீட்டு வியூகம்: 100 – வயது

ஷேர்கள் போன்ற ஸ்பெகுலேஷன் வகைகளில் முதலீடு செய்யும்போது வயது ஏற ஏற ரிஸ்க்கைக் குறைக்க வேண்டும்.

நீண்ட கால முதலீட்டிற்கு (A Group) ஷேர்களே ஏற்றவை. நட்டங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர கால இடைவெளி இருக்கிறது.

உங்கள் முதலீட்டில் ஷேர்கள் இருக்க வேண்டிய சதவீதம் = 100 - உங்கள் வயது

தேடாதழிக்கிற் பாடாய் முடியும்.

தேடாது அழிக்கிற் பாடாய் முடியும்!

செல்வத்தைப் பெருக்காமல், இருப்பதைச் செலவு செய்தால், பின்பு துன்பமாய் முடியும்.



Saturday, January 7, 2012

22. நிதி நிர்வாகம் 3


Other blogs of mine.

http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com
http://indiacoincollections.blogspot.com
http://chennai.sancharnet.in/kkd_spvr

சேமிப்பு வியூகம்: 70-20-10 எனும் விதி

வருமானம் எவ்வளவாக இருந்தாலும், குறுகியகால சேமிப்பாக இருந்தாலும் அல்லது நீண்டகால சேமிப்பாக இருந்தாலும், இந்த விதி உபயோகமாக இருக்கும்.

வருமானத்தில் 
அதிக பட்சம் 70 சதவீதம் வாடகை, சாப்பாடு, சேவைக் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும், 

குறைந்த பட்சம் 20 சதவீதம் சேமிப்பாகவும், 

அதிக பட்சம் 10 சதவீதம் மற்ற கடன்களை அடைப்பதற்கும் பயன் படுத்த வேண்டும். 

வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்துவது பகுதி சேமிப்பிற்கும்/   பகுதி அன்றாடச் செலவுக்கும் ஒப்பானது. ஏனென்றால் உங்களுக்கு    வாடகை மிச்சம் அல்லது வாடகை வருமானம் வரும்.

                                                                                                                    பணம் வளரட்டும் 

Saturday, December 17, 2011

21. நிதி நிர்வாகம் 2.



பதின்ம வயதினருக்குச் சொல்ல

பணத்தைக் கொண்டு பொருட்களை வாங்க முடியும். எல்லாவற்றையும் வாங்க முடியாது. உதாரணமாக அப்பா அம்மாவையும் அன்பையும் வாங்க முடியாது. ஆக பணத்தின் மதிப்பு என்பது ஒரு அளவுக்கு உட்பட்டதுதான். பணத்திற்கு மட்டுமே மரியாதை என்பது தவறானது.

மருத்துவத்துறையின் முன்னேற்றத்தால் சராசரி ஆயுள் கூடிக் கொண்டே வருகிறது. ஆக நம் முன்னோர்களைவிட நாம் நீண்ட நாட்கள் வாழப் போகிறோம். வயதான காலத்தில் பாதுகாப்புக்குப் பணம் தேவை. பொருளாதார மறுமலர்ச்சியின் விளைவாக வெளிநாட்டுப் பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. நமக்குத் தேர்வு செய்ய ஏராளமான வகைகள்! அதைப் பார்த்து தேவையும் ஆசையும் அதிகரித்து விட்டன. அதற்கும் பணம் தேவை. ஆகவே சேமிப்பும் அவசியமாகிறது.

சேமிக்க வேண்டுமென்றால் மேலும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். அல்லது சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். எது நல்லது?

வருமானம் – செலவு = சேமிப்பு    அல்லது
வருமானம் – சேமிப்பு = செலவு‼

ஆசைப்படுவதை எல்லாம் வாங்கக் கூடாது. வாங்குவதை ஒத்தி வைத்து விட்டுத் தேவையா, உடனடித் தேவையா, அவசியமான தேவையா என்று முடிவெடுத்து வாங்கினால் பணம் மிச்சப்படும். தேவையையும் ஆசையையும் பிரித்து உணர வேண்டும். இரண்டும் வெவ்வேறானவை.

உங்கள் தேவையை (இலக்கை) அடைய ”திட்டமிட” வேண்டும்.

     1.   என்ன வாங்க வேண்டும்?
     2.  அதன் விலை என்ன?
     3.   எவ்வளவு நாட்களில் தேவைப்படும்?
     4.   எந்தச் செலவுகளை குறைத்து அந்தப் பணத்தை சேமிக்கலாம்?
     5.   மேல் வருமானத்திற்கு வழியிருக்கிறதா?  என்று ஆராய வேண்டும் 
                                                                                                                     
                                                                                                                      பணம் வளரட்டும்

Wednesday, December 14, 2011

20. நிதி நிர்வாகம்0.







2011 டிசம்பர் 10ம் தேதி 2வது லைன், பீச் ரோட்டிலுள்ள சென்னை பங்குச் சந்தை கட்டிடத்தில் ”பணத்தைப் பற்றிய விழிப்புணர்வு”  (Pocket Money Program) அதாவது சிறு செலவுக்கான தொகையை எப்படி நிர்வகிப்பது என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப் பெற்றது. அதை சென்னை பங்குச் சந்தை அமைப்பும், செபியின் என்.ஐ.எஸ்.ம்மும் சேர்ந்து நடத்தினர். சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்த 50 ஆசிரியர்களுக்கு 9வது, 10வது படிக்கும் மாணவர்களுக்கு சுவையாகவும், சுலபமாக புரியும் விதத்திலும் எப்படி பணத்தைப் பற்றி எடுத்துச் சொல்வது என்று பயிற்சி அளிக்கப் பட்டது. 

அதில் என்.ஐ.எஸ்.ம்மைச் சார்ந்த திரு. முரளி, முதலீட்டு ஆலோசகர் திரு. வ. நாகப்பன், சென்னை பங்குச் சந்தை அமைப்பைச் சார்ந்த திரு சம்பத் ஆகியோருடன் நானும் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

1.   பணம் மட்டுமே எல்லாவற்றையும் வாழ்க்கையில் தருமா?
2.   பணத்தைச் சேமிக்க வேண்டும், ஏன்?
3.   பணத்தைச் சிக்கனமாகச் செலவளிக்க வேண்டும், எப்படி?
4.   சேமிக்க எப்படித் திட்டமிட வேண்டும்?
5.   பணத்தை முதலீடு செய்ய வேண்டும், ஏன்?
6.   முதலீடு பெருக வேண்டும், ஏன்? எவை அவை?
7.   எந்த வகையான முதலீடு யாருக்கு நல்லது?
8.    வங்கி நடவடிக்கைகள்.
9.    எப்போது, எதற்கு கடன் வாங்கலாம்.
10. ஏமாறாமல் கடன் வாங்குவ்து எப்படி?

என்ற தலைப்புகளில் வருங்கால வளமான இந்தியாவை உருவாக்குவது என்பது குறித்து பேசினோம்.

முக்கியமாக மாநகராட்சியைச் சார்ந்த முக்கிய கல்வி அதிகாரி திரு கோவிந்தசாமி அவர்கள் பேசும்போது “நம்மில் பெரும்பாலோர் சராசரி வயதில் பாதியைக் கடந்துவிட்டோம். இனி எதிர்காலம் மாணவர்கள் கையில்தான். அவர்களை ஒழுங்கான முறையில் வழி நடத்த வேண்டியது நமது கடமை” என்று உணர்ச்சி பூர்வமாகச் சொல்லியதுதான்!
பணம் வளரும் ----

Sunday, November 27, 2011

19. மெட்றாஸ் நல்ல மெட்றாஸ் 2.


சென்னையில்  மினி அடுக்கு மாடி வீட்டில் குடியேறப் போகிறீர்களா?

Well’s always well, கிணறு கிணறுதான்   -  கிணறு நல்லதுதான் !

தண்ணி டாங்குக்குள்ளே இறங்குறதுனால அப்படி ரெடியா வந்திருக்கிறான். நான் சொன்னபடி நல்ல பையந்தானே? “சார் நீங்க வந்து பாருங்க” என்று சொல்லி டார்ச் லைட்டையும் வைத்துக் கொண்டு காப்பை மாட்டி விட்டு பார்க்கச் சொன்னான்.
“சார் தண்ணி லாரியில உள்ள முழுத் தண்ணியும் உங்களுக்கு விடமாட்டாங்க. பல மாதிரி ஏய்க்கலாம். டாங்கர்ல மூனு போர்ஷன் இருக்கும். அவுட்லெட் பைப்  மூனு போர்ஷன்ல இருந்தும் திறந்து விடனும். ஒரு பகுதி 4000 லிட்டர். மேலும் கீழ்ப்பகுதியிலுள்ள பைப்பையும் திறந்து விடனும். லாரியிலேயே மோட்டார் பம்பும் இருந்தால் அதையும் உபயோகப்படுத்தி மொத்த தண்ணியையும் வாங்கிறனும். காசு குடுத்ருக்கோம்ல!” 20 ரூபாய்க்கு இவ்வளவு இன்ஃபர்மேஷனா! இல்ல இல்ல அவன் நல்ல பையன்ல!
இனியும் இம்மாதிரி நிகழாது காக்க காக்க ஒரு பிட் நோட்டீஸ் அடித்து மோட்டார் ஸ்விட்ச்சின் கீழே ஒட்டினேன்.
Optimizing Water Usage & Reducing Costs 
Quantity of water being brought in via tankers - 12,000 lt per tanker
Borewell output is slow, so cannot run the motor continuously.
Moreover the  motor may get heated up and the coil may melt.
Run for 1hr in the morning and 45 minutes in the evening.
Our water tank can hold 10,000 litres.
Sump can hold 12000 l of corporation water
Consumption of water is calculated at 135 litres per capita daily (lpcd)
18 people x 135 l = 2430 litres
Now you know that we are using a lot.
Pls check if there is water in the sump before switching on the motor.
Usage of water in Washing machine, European closet, Washing utensils  should be controlled.
Fixing a meter for each apartment MAY solve the problem
இப்பத்தான் புரியுது maintenance மெயிண்டனன்ஸ் என்று ஒவ்வொரு ஃப்ளாட்டிலும் ஏன் அவ்வளவு அதிகமாகக் கொடுக்கிறார்கள் என்று. ஆண்டவன் புண்ணியத்தில 6 வாரமா ஒரு பிரச்னையில்ல.
நீங்களும் ”பத்திரமா பாத்துக்குங்க”
இன்னும் முடியல. இந்த போர்வெல்ல ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் ஊறும்? 1 HP ஜெட் பம்ப் 200 அடி ஆழத்திலிருந்து 50 அடி உயரத்திற்கு 1 மணி நேரத்தில் எத்தனை லிட்டர் தண்ணீர் ஏற்றும்?
Disclaimer: முடிஞ்சா படிங்க
இது பொது அறிவு நோக்கிலும், சாதாரண வாசிப்பிற்கும் தான் வெளியிடப் பட்டிருக்கிறது. இது வழிகாட்டியாக செயல் படுவதற்காக தயாரிக்கப் பட்டதல்ல. பார்வையையும், கருத்தையும், அபிப்ராயத்தையும் என்னுடைய சொந்த பரிந்துரைகளாகவோ அல்லது ஆலோசனையாகவோ எந்த ஒரு நபரின் தனித் தேவைகளுக்காகவோ என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. விளம்பரத்திற்காகவோ, விற்பனைப் பொருள்களின் அங்கீகாரத்திற்காகவோ இவற்றை உபயோகிக்கக் கூடாது.

சொல்லப் பட்ட விபரங்கள்/விளக்கங்கள்/கருத்துக்கள் ஆகியவை பொதுவான நோக்கில் சொல்லப் பட்டவை. தனி நபர் / அமைப்பு / நிறுவனம் ஆகியவற்றின் குறிப்பிட்ட நோக்கம் / நடவடிக்கை / இலக்கு / தேவை / சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. இதில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கை எடுத்திருந்தாலோ அல்லது செயல் பட்டிருந்தாலோ நான் பொறுப்பேற்றுக் கொள்ள இயலாது.
ஆகவே இதில் உள்ளபடி  எந்த ஒரு கருவையும், ஆலோசனையையும் பின்பற்றுவதற்கு முன்னால்  கெட்டிக்கார  இஞ்சினியர்களைக் கலந்து முடிவு எடுப்பது நல்லது.
இதிலுள்ள தகவல்கள் யாருக்காவது ஏதாவது ஒரு விதத்தில் இழப்பையோ பாதிப்பையோ உண்டாக்கி இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
எனது எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் இதிலுள்ள தகவல்களை எந்த ரூபத்திலும் மறுபதிப்புச் செய்வதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ?!
ரெம்பத்தான்  L

Sunday, November 13, 2011

18. மெட்றாஸ் நல்ல மெட்றாஸ் 1

18. சென்னையில் அடுக்கு மாடி வீட்டில் குடியேறப் போகிறீர்களா?
Well’s always well, கிணறு கிணறுதான்   -  கிணறு நல்லதுதான் !

மேலேயுள்ளவை எல்லாம் கட்டுரைக்கான தலைப்புகள்! எப்டி வேணுனாலும் வச்சுக்குங்க!
முதல்ல நம்ம ஊரத்தெரிஞ்சுக்குங்க. காரக்குடி! தான்.

பையனுக்குச் சென்னைல வேலை கிடைச்சாச்சு. நம்மளுக்கும் வேலை இல்ல! பட்டணம் போகலாம்மான்னு இரண்டு பேரும் யோசித்தோம். பையனுக்கும் 6 வருஷம் ஹாஸ்டல் சாப்பாடு அலுத்துப் போச்சு. அம்மாவத்தான் அடிக்கடி தேடிக்குவான். அதுக்காக நான் மட்டும் போகாம காரைக்குடியிலேயா உட்கார்ந்திருக்க முடியும்?

புதுசாக் கட்ன வீட்ல குடியேறுவதே ஒரு தனி ஆனந்தம்தான். 30க்கு 60தில கீழ ஒரு வீடு, மேல 2 வீடு அப்றம் மேலே இன்னொரு வீடு. நமக்கு முதல் தளத்துல பின் வீடு. (னம்ம நோக்கப்படி ஸ்பெல்லிங்லாம் பார்க்காம எழுதறதே ஜாலிதான்)

கீழேயுள்ள வீட்டில் 9 IT பிள்ளைங்க. அடுத்த வீட்டில் 6 IT பிள்ளைங்க. நம்ம வீட்ல 3 பிள்ளைங்க !‼

முதல் இரண்டு நாட்கள் 6 பாத்ரூம் டாப்லையும் தண்ணி ஒழுங்கா வந்துச்சு. அடுப்படில 2 பீலி?லையும் பேஸின் 2 லையும் தண்ணி ரெம்ப ரெம்ப மெதுவா வந்துச்சு. சில சமயங்களில் வராது. ஆகா வீடு நல்லாருக்குனு எல்லாரும் சொல்லி கண்ணு பட்டுப் போச்சோன்னு நினைத்தேன்.

பில்டரக் கூப்பிட்டுக் கேட்டா “ சார், ஏர் லாக் ஆகியிருக்கும் எல்லா பைப்பையும் தொறந்து விட்டுட்டு சிறிது நேரம் சென்று பாருங்கள். சரியாகிவிடும்” என்றார். ஏதோ ஆன மாதிரியும் இருந்துச்சு, ஆகாத மாதிரியும் இருந்துச்சு.

அடுத்த வீட்டுக்கு வந்த  ப்ளம்பரைக் கூப்பிட்டு சரி செய்யச் சொன்னேன். நல்ல பையன், வந்தான், ஸ்பானரை வைத்துத் திருகினான். அருவியாக் கொட்டினது. அதாவது பேஸின் பைப்புகளுக்கெல்லாம் நுனியில் ஒரு ஃபில்ட்டர் வைத்திருக்கிறார்கள். அது அடைத்துக் கொண்டிருப்பதாகக் கூறினான். ”டாங்க க்ளீன் பண்ணுங்க சார்” என்றான்.

டாங்க க்ளீன் பண்ண ஏறிப் பார்க்கனுமில்லியா? ஏணிப்படியே வைக்கலை. ஓரு வழியா சுவத்தைப் புடிச்சு ஏறிப் பார்த்தா மூடியே இல்லை. தண்ணியும்தான். பில்டரக் கூப்பிட்டு ”ஏணிப்படி வைச்சுத் தாங்க, மூடியப் போட்டு தண்ணிய மூடுங்க” என்று செல்லில் சொல்லிவிட்டு வந்தா போர்வெல் மோட்டார் பெரும் சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.

இந்தச் சத்தத்தோடு இரண்டு நாட்கள் ஓட்டியாயிற்று. மூன்றவது நாள் சத்தம் கூடிக் கொண்டே வந்தது. பக்கத்து ஃப்ளாட்டிலிருந்து எல்லாரும் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். எதிர்த்த வீட்டுக்காரர் வந்தார். “நாங்கள்ளாம் எப்பிடி சார் குடியிருக்கிறது. கண்ட நேரத்தில மோட்டாரப் போட்றீங்க. கம்ப்ளேய்ண்ட் பண்ணப் போறேன்” என்றார். யார்ட்டனு கேட்காம இதாண்டா சாக்குன்னு பில்டர் நம்பரைப் போட்டுக் குடுத்தேன்! பில்டர் ஆளை அனுப்பி மோட்டரைக் கழற்றிச் சென்றார். 3 நாள் ஆகுமென்றார். 


ஒரு மோட்டரைக் கெடுத்தாயிற்று, இன்னொன்னை விடலாமா. IT பிள்ளைங்க எல்லாம் sump மோட்டார்ல கை வச்சுட்டாங்க.  ஸம்ப்ல தண்ணியில்லாமே ஓட்டிட்டாங்க. பதறிப்போய் ஒடி ”அப்பா, அம்மா பிள்ளைங்களா நீங்கள்ளாம் எஞ்சினியர்தானே படிச்சீங்க?” ”ஆமா அங்கிள் ஆனா IT, Computer Science, Electronic and communication” என்றதுகள். கேலி பன்றேன் என்று தெரிந்து போய்விட்டது. ஸம்ப்ல தண்ணியில்லாம ஓட்னா மோட்டார் காயில் எரிந்து போய் விடும் அம்மா என்று சொல்லி விட்டு டாங்கர் (தனியார், மாநகராட்சி இரண்டிலும் இருக்கிறது) தண்ணிக்கு ஆர்டர் குடுத்தோம்.

12000 லிட்டர், 900 ரூபாய், 48 மணி நேரத்தில முடிச்சுட்டாங்க க்ITடிக்கரப் பசங்க. 8000 லிட்டர்னா ரூ.600தான். நமக்கு பங்கு 3/18 தான் குடுக்கனும். இருந்தாலும் 48 ஹவர்ஸ்லயா. தர முடியாது என்று சொல்லி விட்டேன். ”எப்பிடி சார், 12000 லி. 1 வாரத்துக்கு வரனும் சார். இன்னும் ஆள் வராத வீட்லல்லாம் தொறந்து பார்ப்பம் சார்” என்றார் பக்கத்து வீட்டுக்காரர். ஆனால் ஒன்னும் மிஸ்டேக் இல்லை!

மறுபடியும் ஒரு டாங்கிற்கு ஆர்டர் குடுத்தோம்.  இதுவும் 48 மணி நேரத்தில் முடியப் போற சமயத்தில் சரிசெய்யப்பட்ட போர்வெல் மோட்டார் வந்து சேர்ந்து காப்பாற்றியது.

அப்ப நம்ம எதிர் வீட்டு வாட்ச்மேன் பையன் வந்தான். ”ஸார் கார்ப்பொரேஷன் பைப் கனக்‌ஷனுக்காக ஸம்ப்பில் ஒரு இன்லெட் பைப் இருக்கும்  சார். இன்னும் கனக்‌ஷன் கொடுக்கவில்லை. அதனால் அது ஓப்பனா இருக்கோ, என்னமோ?” என்றான். டார்ச் லைட்டைக் கொடுத்து ஸம்ப்பில் இறங்கிப் பார்க்கச் சொன்னேன். “அடைக்கல சார்” என்றான். ”பிளக் போட வராது சார், அரை இஞ்ச் cap காப்தான் போடனும். 5 ரூபாய்தான்” என்றான். ”இந்தா பிடி 20 ரூபாய், வைச்சுக்கோ. அடுத்த டாங்க் வர்ரதுக்குள்ள வேலைய முடிச்சுரு. இப்பப் பார்த்து விடு.” என்றேன். “சார் சாயந்திரம் பார்க்கிறேன்” என்றான். என்னடா இவன் தவணை போடுறானே என்று நினைத்தேன். ஆனால் நல்ல பையன். சாயந்தரமா குளிச்சு முழுகி வந்தான்.

தொடரும்