Labels

Tuesday, March 7, 2017

58. தெரிந்தது, புரிந்தது, நினைவில் இருப்பது

தெரிந்தது, புரிந்தது, நினைவில் இருப்பது

தெரிந்தது, புரிந்தது, நினைவில் இருப்பது எல்லாம் வெவ்வேறு என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அதற்கு ஒரு கதை இருக்கிறது. நன்றி: தெய்வத்திரு தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள். மாணவர்களுக்காக, கற்பித்தலுக்காக, களம் மாற்றப் பட்டிருக்கிறது.

Conduction, convection, radiation in solids, liquids and gases or vacuum respectively அல்லது கடத்தல், பரவுதல், கதிர்வீச்சு என்று ஒரு ஆசிரியர் பாடம் நட்த்திக் கொண்டிருந்தார். அப்போது தெர்மாஸ் ஃப்ளாஸ்க் (Thermos Flask) ஐ உதாரணமாகக் கொண்டு விளக்கினார். அப்போது “ இது சூடானவற்றை சூடாகவும், குளிர்சிசியான பொருளை வைத்தால் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் என்றார்.

மறுநாள் ஒரு பையன் ஃப்ளாஸ்க்கோடு வந்தான். ஆசிரியரும் தூக்கிப் பார்த்து விட்டு என்னப்பா கனமா இருக்கே? உள்ளே என்னப்பா இருக்கு? என்றார்.
பையன் சொன்னான்ஒரு கப் ஐஸ்கிரீமும், ஒரு கப் காப்பியும்

இதுதான் தெரிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்!

நினைவில் நிறுத்த

புத்தகத்திலேயே முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடு, நெளிவு அடிக்கோடு,   ◯ ◯ ◯வட்டங்கள் போட்டு வைக்கலாம். ஒவ்வொரு பாராவிற்கும் ஒரு முக்கியமான தகவல் இருக்கும். அந்த ஒரு வார்த்தையை அல்லது வாக்கியத்தை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு விரிவாக்கம் செய்து எழுதலாம்.
இவ்வாறு செய்வதால் பரீட்சைக்கு முந்தின நாள் ரிவைஸ் செய்ய வேண்டிய பக்கங்கள் குறைவாக இருக்கும். பயம் ஏற்படாது.

தனி நோட்டில் குறிப்புகள் எடுக்கும்போது வரிசைப் படுத்தி எழுதுங்கள். வாக்கியங்களாக இல்லாமல், சிறு சிறு வார்த்தைகளாக இருக்கட்டும். இந்த வார்த்தைகளைப் பார்க்கும்போது அந்தத் தலைப்பு சம்பந்தமான அனைத்து விபரங்களும் ஞாபகத்திற்கு வ்ரவேண்டும்.

இரைந்து படிக்கலாம். அப்போது கண் வாய் காது என அனைத்தும் பாட்த்திலேயே இருக்கும்.

ஒருவரைக் கேள்வி கேட்கச் சொல்லி பதில் சொல்லிப் பழகலாம். அப்படிச் செய்யும்போது மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறீர்கள். மூளைக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து, பதியப்பட்ட தகவல்களை மீட்டு சரி பார்க்க ஆரம்பிக்கும். எவ்வளவுதான் கிரிக்கெட்டை டிவியில் பார்த்தாலும், திடலில் விளையாண்டால்தான் நமக்கு எவ்வளவு கிரிகெட்டைப் பற்றி தெரிந்திருக்கிறது என்று நமக்கும், பிறருக்கும்! தெரியும்.


மணி அடித்தால் மருந்து

அந்தக் கால சினிமாவில் முடியாமல் இருக்கும் மாமியாருக்கு மருமகள் மருந்து கொடுக்கும் காட்சி வரும். மாமியார் படுத்திருக்க, மருமகள் அருகில் அமர்ந்திருக்க, அலார கடிகாரமும் அருகிலிருக்கும். நடு நிசியில் அலாரம் அடித்தவுடன் மருமகள் கண் விழித்து மருந்தை அளவு கிளாசில் ஊற்றிக் கொடுப்பாள்.                               

டாக்டர் ஒரு நாளைக்கு மூன்று வேளை என்று சொன்னால் சரியாக 8 மணி நேரத்திற்கு ஒரு தடவை என்றும் நான்கு வேளை என்றால் 6 மணி நேரத்திற்கு ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த மருந்து மாத்திரைகள் தொடர்ச்சியாக வேலை செய்யும். இடைவெளி அதிகமானால் மருந்து மறுபடியும் முதலில் இருந்து தன் வேலையை ஆரம்பிக்க வேண்டும். குணமாக நாளாகலாம். பெரும்பாலும் வெறும் வயிற்றில் மாத்திரைகள் சாப்பிடக் கூடாது.



1 comment: