Labels

Saturday, September 17, 2016

56. ஷாக்காயிட்டேன் !



56. ஷாக்காயிட்டேன் !

(< 10 மில்லிஆம்பியர் ) சும்மாதான் தொட்டென்பா, ஷாக்கடிச்சிருச்சுஅதைச் சொல்ல அவர் இருக்காரே !!
(>20 மில்லிஆம்பியர்) ஆக இருந்திருந்தால் சொல்ல அவர் இருக்க மாட்டார்

வீட்டிற்குள் வரும் மின்சாரம் மூன்று வயர்களைக் கொண்டது. ஃபேஸ் (Phase or Live,L,), நியூட்ரல் (Neutral, N ) மற்றும்
எர்த் (தரை/பூமி, Earth, E.)



எலெக்ட்ரான்கள் ஃபேஸ் வயர் வழியாக சக்தியை கொண்டு வந்து மின் சாதனத்தினுள் சூடாக்குவது, சுற்றுவது, வெளிச்சம் கொடுப்பது போன்ற வேண்டிய வினைகள் புரிந்து நியூட்ரல் வயர் வழியாக வெளியேறும்.

அயர்ன்பாக்ஸ், கிரைண்டர், மோட்டோர்கள் இன்னும் பல மின் சாதனங்களின் வெளிப்புறம் உலோகத்தால் ஆனவை. கிழே விழுவது போன்ற ஏதாவது ஒரு காரணத்தினால் லைவ் வயர் இந்த உலோகத்தைத் தொட நேர்ந்தால், கசியும் மின்சாரம் இந்த பெட்டியினுள் பாய்ந்து விடும். நாம் அதைத் தொட நேர்ந்தால் நமக்கு மின் அதிர்ச்சி ஏற்படும். பூமியும் நாமும் ஒரே சக்தி நிலையில், 0 வோல்ட்டில் இருக்கிறோம். ஃபேஸ் வோல்டேஜ் 240 ஆகவும் எர்த் வோல்டேஜ் 0 ஆகவும் வித்தியாசம் இருப்பதால் மின்சாரம் நம் உடம்பு வழியாக பூமிக்குச் செல்கிறது. ஷாக் 0அடிக்கிறது.  இதைத் தவிர்க்க அந்த உலோகப் பெட்டியினை ஒரு வயர் கொண்டு பூமியுடன் இணைக்க வேண்டும்பெட்டியிலிருந்து மின்சாரம் பூமிக்குள் பாய்ந்து விடும். பூமியும் நாமும் ஒரே சக்தி நிலையில் இருப்பதால் மின்சாரம் நம்முள் பாய்வதில்லை.






எர்த் வயர்  நம்மை ஷாக் அடிப்பதிலிருந்து காப்பாற்றும், ஆனால் கரெண்டு பில் எகிறி விடும். மின்சாரம் உள்ளே resistance  உள்ள பாகங்களின் வழியாகப் பாயாது. நியூட்ரல்  வழியாகவும் இ பி க்குத் திரும்பாது. ஆகவே மின்னோட்டத்தின் அளவு அதிகரிக்கும். பூமி எவ்வளவு எலெக்ட்ரான்களை வேண்டுமானாலும் உறிஞ்சிக்கொள்ளும். அப்ப பில்லிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது?! அங்கதான் நம்ம MCB Mini Circuit Breaker, or Fuse  உதவுகிறது. MCB டிரிப் ஆகும். ஃப்யூஸ் உருகிவிடும், சரியான அளவுள்ள காரீய,ஈய வயர் உபயோகப் படுத்தியிருந்தால். சும்மா காப்பர் வயரை உருவி மாட்டியிருந்தால் கடவுள்தான் காப்பாத்தனும்! தீப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

எர்த் வயரும் வேண்டும். முறையான ஃப்யூஸ் வயரும் வேண்டும். நியூட்ரலையும் எர்த்தையும் இ பி லைன்மென் ஒன்று சேர்த்து விடுவார்கள். ஆகவே நீங்கள் தனியாக எர்த் அடிப்பது நல்லது. If not கம்ப்யூட்டர் அடி வாங்கும்.

Phase to neutral    240 V  இணைப்பு சரியாக இருந்தால் பல்ப் நன்றாக எரியும்
Phase to earth         240 V   எர்த் இணைப்பு சரியாக இருந்தால் பல்ப் நன்றாக எரியும்
Earth to Neutral      < 3 V ஒரு பல்பைக் கனெக்ட் செய்தால் டிம்மாக எரியும். or voltmeter will show <3V

எச்சரிக்கை: அனுபவமிக்க பழுதுபார்ப்பவர்களைக் கொண்டு பழுது நீக்கவும். நீங்களாக எதையும் தெரியும் என்று தொடாதீர்கள். ஒரு ஷணத்தில் மறதியும் அதன் விளைவுகளும் கற்பனையை மீறி இருக்கும். நான் ஒரு இயற்பியல் ஆசிரியராய் இருந்தாலும் எலெக்ட்ரீசியனைக் கொண்டுதான் பழுது நீக்குவேன். 3/100 Ampere போதும் மேலே அனுப்ப! MCB, Fuse  does not work speedily at times. படிப்பறிவு வேறு. பட்டறிவது வேறு! எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டால் அனுபவம்தான் காப்பாற்றும். நம் தொழில் எலெக்ட்ரீசியன் அல்ல.
சில் சொற்கள்
Maximum = அதிக பட்சம்
Minimum = குறைந்த பட்சம்
Optimum = உகந்த அளவு
Threshold = ஒரு நிலையைத் துவக்கத் தேவையான குறைந்த அளவு

யோகாசனம் அல்லது ஃபிஸியோதெராப்பி பயிற்சிகளை மெல்ல மெல்ல மெதுவாக கடுமையின்றிச் செய்யவும்



Friday, September 9, 2016

55ஹாங் காங் சுற்றுலா 2



விக்டோரியா பீக் The Peak, Peak Tower, Galleria

இரண்டாவது, முக்கியமாக பார்க்க வேண்டிய இடம், மன அமைதிக்காக. கிட்டத்தட்ட 1200 அடி உயரத்தில் ஹாங் காங் மெயின் ஐலண்டில் விக்டோரியா பீக் இருக்கிறது. Tram terminus  இருக்கும் பீக் டவரினுள் கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ரெஸ்டாரண்டுகள் உள்ளன. ஆக உச்சியில் 428 மீட்டர் உயரத்தில் Sky Terrace 428  இருக்கிறது. இங்கிருந்து 360 டிக்ரீ சுற்றிலும் பறவையைப் போல ஹாங் காங்கை பார்க்கலாம்.

லயன்ஸ் பாவிலியனிலிருந்து ஹாங் காங்கைப் பார்த்தீர்களனால் திகைத்துப் போவீர்கள். அப்படியொரு வானவிளிம்பு. ஒரு ஊரை இப்படி முழுவதுமாகப் பார்க்க முடியுமா என்று மலைத்துப் போவீர்கள்.

மேலே செல்ல double decker  பஸ் உண்டு. வலது பக்கம் அமர்ந்து சென்றால் பஸ் மேலே செல்லும்போதுகட்டிடங்கள் எல்லாம் சாய்வாக இருப்பது போன்ற ஒரு மாயயை உருவாக்கும்.





Octopus card

ஹாங் காங் வந்த வேகத்திலேயே நீங்களும் பீப் பீப் என்று சத்தம் உண்டாக்கும் அட்டையை உபயோகப் படுத்த ஆரம்பித்து விடுவீர்கள். MTR  ரயில் நிலையங்களில் கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக, முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்பட்ட Octopus Card களை அட்டை படிப்பி  தொடு திரையில் காட்டி விட்டு சுழலும் வாயிலைத் தாண்டிச் செல்லும்போது ஏற்படுத்தும் சத்தம் அது. அடிக்கடி வெளியே சென்று வந்தீர்களானால் தூக்கத்தில் கூட இந்தச் சத்தம் கேட்கும்!

This stored-value electronic card can be used for most public transport, as well as purchases in convenience stores, fast food shops, supermarkets, vending machines and more.

Simply place the Octopus card over a card reader and the payment amount will be automatically deducted from the stored value. Started 20 years ago

On-loan Octopus card with a refundable deposit of HK$50 is available.  A refund handling fee will be charged if you return the On-loan Octopus less than 90 days from the date of issue. $50 which covers the card cost and ensures uninterrupted Octopus service in case of negative value for up to HK$35 on a single occasion. Child, Adult and Elder cards are available.

ஹாங் காங் மக்கள்: புகைவண்டி, பேருந்துகளில் ஏறுவதிலும், இறங்குவதிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்கும். நம்மூரைப்போல தற்கொலைக்குத் தயாரவது போல வண்டி வாசலில் நின்று கொண்டிருக்க மாட்டார்கள்!

 தூரத்துல பாருங்க பெட்டி மேலே சவாரி
  















மின் தூக்கியினுள் செல்ல முன்னுரிமை

  
குப்பைத் தொட்டி மேலே உள்ள வாசகத்தைப் படிங்க. தொட்டிக்கு வெளியே போட்டால் 20,000 அபராதம். அப்ப தொட்டியில்லாத இடத்ல போட்டா?  இல்லாத இடமா!!!

 வகையினத் தேக்கம்!

சினிமா: உலகம் சுற்றும் வாலிபனிலிருந்து கபாலி வரை எத்தனையோ படங்கள் இங்கே எடுக்கப் பட்டிருக்கின்றன. தங்கத்தோனியிலேமறக்க முடியுமா. ஏழாம் அறிவு “ யெல்லே லமா ”  பாடல் கௌலூனில் Stars Avenue”  வில் படமாக்கப்பட்ட்து. ஏகன், லிங்கா, கிங் மற்றும் பல.












Being brought up in Malaysia, we did not go to chinese temples.

Since we have seen Disneyland in Orlando, we skipped HK Disney, and Ocean Park.

Ladies street is like Change Alley in Singapore.

Jade market as in China.

Star Ferry for harbour crossing like in Penang.

Hong Kong double decker tramways with ’ding ding’ noise costs only  $2.30 It's 100yrs old. Have’nt seen Calcutta yet.

Museums on science and various history topics are there.

Sky100, hongkong observation desk,  IFC mall like Stratosphere Hotel in Las Vegas, Burj Kalifah in Dubai

Observation wheel is like London Eye.

Madame Tussauds have seen in New York and London

Macau,  a portuguese  settlement, 44 km west of Lanatau, Europe's first and last colonial outpost in Asia. Shenzen, Shanghai and Beijing are also worth your visit. Only Beijing was in my agenda.

வாழ்க வளமுடன் , வந்தோர்கள், வரவேற்றோர்கள் !!




Monday, August 29, 2016

54. ஹாங் காங் சுற்றுலா 1




1. The Peak
2. Tian Tan Buddha
3. Ngong Ping 360
4. Disneyland
5. Ocean Park
6. Repulse Bay
7. Golden Bauhinia Square
8. Avenue of stars
9. Soho Central
10. Lan Kwai Fong
11. Murray House
12. Stanley market
13 Seafood bazaar
14. Wetland Park
15. Jade street
16. Ladies market
17. Sai kung town

18. Lemma island

 
இரண்டாவது கொழுந்தியாள் விசாலாட்சி முத்துராமன் அவர்கள் மகள் பாலாம்பாள் நாராயணன் அவர்களின் நெடுநாள் அழைப்பை ஏற்று நானும் சகதர்மினி சகுந்தலாவும் ஹாங் காங் செல்ல முடிவு செய்தோம். தற்செயலாக பாலாவும் மகன்களின் விடுமுறைக்காக சென்னை வந்து திரும்பியதால் அவர்களுடனேயே போக முடிவு செய்தோம். கூட்டிப்போகாம விடமாட்டேன் என்றால் என்ன செய்வது? ஏற்கனவே குவேய்த்துக்கு வரவில்லை என்று ஆதங்கம் வேறு. மாப்பிள்ளையோ மறு மகன். செல்வத்துக்கும், மக்கள் செல்வத்திற்கும் எங்கள் மனதில் குறையில்லை. அன்பிற்கும் உரிமைக்கும் குறைவில்லை. கொழுந்தியாள் பேரன் சேட்டை செய்தால் கண்டிக்கும் உரிமையும் நமக்கு உண்டு.

அங்கு இறங்கிய பின் விமான நிலையத்தில் ஒரு மாத விசா தருகிறார்கள். ஒரு மாதம் அங்கு தங்கியிருந்தோம். இடையே சீனாவிற்கும் 5 நாட்கள் சென்று வந்தோம்.

 \


Ana, பேருதான் ஆனா, ஆனால் எல்லாவற்றிலும் “அ” தான். பேரன் வசியப்பட்ட்து இவரிடம்தான். சட்டை iron  செய்தால் குறைவான மடிப்புகளுடன் இருக்கும். படு வேகம். பிலிப்பைன்ஸிலிருந்து வந்திருக்கும் வீட்டு உதவியாளர்.

ஹாங் காங்கில் Big Buddha அல்லது Giant Buddha அல்லது Tian Tan Buddha எனும் வெண்கலச் சிலை  லந்தவ் தீவில் ஙோங் பிங் எனும் இடத்தில்  (Lantau , Ngong Ping) 1700 அடி உயரத்தில் இருக்கிறது. ஹாங் காங் வரும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் காணவேண்டிய முதல் இடம் இது. சுற்றிப் பார்க்க 6 மணி நேரம் தேவைப்படலாம். 112 அடி உயரமும் 2,50,000 கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கலச்சிலை 1993ல் இங்கு நிறுவப்பட்டது. உள்ளே ஸ்டீல் ஃப்ரேம்களினால் ஆனது. முகம் தஙப்பூச்சுப் பெற்றது. தாய்வானில் உள்ள சிலைக்கு அடுத்த பெரிய சிலை இதுதான். கேபிள் காரில் வந்து இறங்கி சில நிமிடங்களில் சென்று விடலாம். போகும் வழியில் சீன கலாச்சார நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டே செல்லலாம். 268 படிகள் உள்ளன. சிலையின் அடிவாரத்தின் உள்ளே மூன்றடுக்கு கண்காட்சியகம் உள்ளது. பராமரிப்புக்காக சில நாட்களுக்கு மூடப்படும். தெரிந்து கொண்டு செல்லவும்

புத்த பிக்குகள் தங்கும் அழகிய போ லின் மொனாஸ்ட்ரி இங்கு உள்ளது.

இங்கு செல்ல உள்ள கேபிள் காரின் உள்ளே நுழைந்த உடனேயே உடம்பில் ஒரு புத்துணர்ச்சி (புத்தரினாலோ) ஏற்படும். மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும். 6 கி மீ தூரமுள்ள இரு வழிப் பாதையாகும் இது. 25 நிமிடப் பயணத்தில் பறவையின் பார்வை போல பன்னாட்டு விமான நிலையம், தென் சீனக்கடல், பெரிய புத்தர், லந்தவ் தீவின் பசுமையான வடக்குப் பகுதி எல்லாவற்றையும் காணலாம். பசுமையான சுற்றுச் சூழல் அப்படியே பாதுகாக்கப் படுகிறது. போக வர HK $ 130. சீனியர் சிட்டிசெனுக்கு  114 தான்.

மக்கள்: ஹாங் காங் என்றால் நறுமணமுள்ள துறைமுகம் என்று அர்த்தம். காந்தனீஸ் என்ற வட்டார சீன மொழி பேசுபவர்கள். ஆங்கிலத்தை பிரிட்டிஷாரைப்போல உச்சரிப்புடன் பேசுகிறார்கள். சீனாவோடு தொடர்பை பெரிதும் விரும்பவில்லை.
பஸ்ஸில், டிரெயினில் முதியோர்களுக்கு, குழந்தையுடன் வருபவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு நீங்கலாக, உடனே மனமார எழுந்து இடம் கொடுப்பார்கள். வழி கேட்டால் காட்டுவார்கள். ஆனால் ஆங்காங்கே இருக்கும் வழிகாட்டும் அம்புகளே போதும். க்யூவில் நிற்பதா, இடம் பார்த்து உட்காருவதா, குப்பை போடுவதா, ரோட்டோரம் நடப்பதா, எதிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டும்.




Wednesday, July 6, 2016

53. ஆயுர்வேதம் ஆரோக்கியம் கூட்டும் 3 !








ஆயுர்வேதம் ஆரோக்கியம் கூட்டும் 3 !

ஆடி மாதம் ஆயுர்வேத எண்ணை போடல் ஆரோக்கியம் கூட்டும்.

கதகளி ஆட்டக்கார்ர்கள் 80 – 90 வயது வரை ஆரோக்கியமாக ஆடுவதற்குக் காரணம் எண்ணை போடல் ஆகும்.

நாம் ஏன் நமது ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்
1.   மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல், நம் அடிப்படைத் தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள
2.   நமது அனுபவம் மற்றவர்களுக்குப் பயன்பட
3.   குடும்பத்தினர், உறவினர் ஆகியவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், உதவிகள் ஆகியவற்றை நிறைவேற்ற
  
ஆடி மாதத்தை கற்கடகம், ராமாயண மாதம், பஞ்ச மாதம், ஆயுர்வேத மாதம் எனவும் கேரளாவில் கூறுவார்கள். ஆனி 15 முதல் மழையும், வெய்யிலும், காற்றும் தினசரி, உடனுக்குடன் மாறி மாறி வரும். தக்‌ஷினாயன த்தில் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலமாகும் இது. வர்ஷ ரிதுமழை சீஸன்என்கிறார்கள். இது வாத பூமியாகும். இந்தப் பருவத்தில் பச்சைக் காய்கறிகளில் துவர்ப்பு, புளிப்பு கூடும். பல நோய்கள் உண்டாகவும் பரவவும் ஏதுவான காலமாகும். அதனிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கற்கடக கஞ்சி குடிப்பார்கள். எண்ணெய் போட்டு உடலை வலுப்படுத்திக் கொள்வார்கள். வேலைக்குச் செல்பவர்கள் காலை ஐந்தரை மணிக்கே வந்து எண்ணெய் போட்டுச் செல்கிறார்கள். சுக சிகிட்ஷா என்கிறார்கள்

தமிழகத்தைப் போல் இங்கும் (கேரளாவில்தான்) ஆடி அமாவாசை, ஆடித் திருவாதிரை ஆகிய விழாக்களை விஷேசமாகக் கொண்டாடுகிறார்கள். ராமாயணத்தை வீடுகளிலும், விஷ்ணு கோவில்களிலும் படிக்கிறார்கள்.

பிரேஸில் கால் பந்தாட்ட வீரர் நெய்மாருக்கு 2014ல் அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்து முன்போல் விளையாட கேரள அரசு உத்தரவாதம் அளித்து அழைப்பு விட்டிருந்தது.

குடிதண்ணீரில் -  தாக சமனி - பதிமுகம் எனும் மரத்திலிருந்து மரத் துகள்களை வைத்துத் தயாரிக்கப்படும் பவுடர். இதை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்துக் குடிக்கிறார்கள். கிருமிநாசினி.. இதில் தாகம் தவிர்க்கும் செங்கருங்காலியும் சிறிதளவில் வெட்டிவேர், நன்னாரி, சுக்கு, மல்லி, கரிங்கலி முதலியவைகளும் கலந்திருக்கும்.

உட்கொள்ள மருந்து - திரிபலம் – மூன்று பழம் – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய். இவை  மலமிளக்கி, ஜீரண சக்தி, இரத்த சுத்திகரிப்பு என செயல் படுகின்றன.
அஷ்டவர்க்க கஷாயம் - 8 விதமான இயற்கை மருந்துகள் - இரவிலும், காலையிலும் -  வயிற்றுப் பொருமல், மூட்டு வலிகளைப் போக்கும். மற்ற மாத்திரைகள் தேவையைப் பொறுத்துத் தருகிறார்கள்.

தலைக்குபலாசு அஷ்வகந்தாதீ லஷாதி தைலம்

தலைக்கு - ராஸநாதி சூரணம் - ஜலதோஷம் வராமல் தடுக்க

உடம்புக்கு தேய்த்துக்கொள்ள - கற்பூர, கொத்தஞ்சுக்காதி, முருக, தன்வந்த்ரம் கலந்த எண்ணை – வாத பித்த கப உடம்பைப் பொருத்து

கிளிவெள்ளைப் பூண்டு, தேங்காய், கருநொச்சி, ஆடுலோடகம்(ஆடுதொடா), ஆமணக்கு, எருக்கு, கொத்த்ஞ்சுக்காதி, புளி இலை, முருங்கை, புங்க இலை, நார்த்த இலை இவற்றில் சில கொண்டு தயாரிக்கப்படும் சிறிய துணி முடிச்சு

பிறந்த பூமியல்லவா! “கொல்லம் கண்டா, இல்லம் வேண்டா எண்ட பாரியாள் அவள்ட சேச்சிகள் பறையும்.
கொல்லத்தில் ஹாஸ்பிட்டல் இருக்கும் இடம் காங்கத்துமுக்கு. டாக்டரின் மகன் பெயர் டாக்டர் விஷ்னு
பிரபஞ்ச வர்த்தமான குழம்பு - பஞ்சகர்மா - நவரத்ன கிளி என்று இன்னும் பல இருக்கின்றது

 












ஆமணக்கு

 மாத்திரை, கிளி

 பாபு
ஷொய் ஜூ

 ஸந்தோஷ்


Friday, July 1, 2016

52. ஆயுர் வேதம் ஆரோக்கியம் கூட்டும் 2 !

ஆயுர் வேதம் ஆரோக்கியம் கூட்டும் 2 !

 ஆடு தொடா  இலை 

எருக்கு 

கரு நொச்சி 

இந்த வருடம் (2016) ஆனி மாதத்தில் கேரளாவில் மழைக்காலம் ஆரம்பித்தது. மறுபடி மூன்றாம் வருடமாக (ஜூன் மாதம் பிற்பகுதியில்) எண்ணை போட கொல்லம் வந்து சேர்ந்தோம். “கொல்லம் கண்டா இல்லம் வேண்டா என்பது பழமொழி

முன்கூட்டியே காரைக்குடியிலிருந்து ஃபோன் செய்து வைத்தியர் இருப்பாரா, அறைகள் கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு புறப்பட்டு வந்தோம்.

காலை 10 மணிக்கு வைத்தியர் எங்கள் குறைகளைக் கேட்டு அறிந்து மருந்தாளுனரிடமும் (pharmacist) எண்ணை தேய்ப்பவரிடத்திலும் (physiotherapist) விபரங்களைக் கூறிவிட்டார். கற்கடக பருவ காலமாதலால் கூட்டம்தான். ஒரு ஆளுக்கு எண்ணை தேய்க்க ஒரு மணி நேரம் ஆகும். காலை 5.30 முதல் உள்ளூர்வாசிகள் வர ஆரம்பிக்கிறார்கள். 9 மணிக்கு மேல் வைத்தியசாலையில் தங்கி இருப்பவர்களுக்கு ஆரம்பிக்கிறார்கள்.

இரண்டு பேருக்கு சாப்பாடு, மருந்துகள், அறை வாடகை, எண்ணை தேய்க்க என்று 11 நாட்களுக்கு சுமார் 28,000 ரூபாய் வரை ஆகலாம்..

ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும் எண்ணை தேய்க்கிறார்கள். ஆனால் “Dress code” என்ன   “loin cloth” தான்!!

முதலில் ஒரு நாற்காலியில் உட்கார வைத்து உச்சந்தலையில் எண்ணை வைத்துத் தேய்க்கிறார்கள். பிறகு கழுத்திலும் முதுகிலும் தேய்த்து, தடுமன் பிடிக்காதிருக்க ராஸனாதிப் பொடியும் தேய்த்துவிடுகிறார்கள். தந்வந்த்ர எண்ணையில் முருக எண்ணையும், கற்பூர எண்ணையும் கலந்து (சுமார் 1 ½ லிட்டர்) சூட்டோடு தேய்க்கிறார்கள்.



அதற்கென காஞ்சீர  மரத்தால் செய்யப்பட்ட மேஜையில் கால்களை நீட்டி உட்காரச் சொல்லி இரண்டு பக்கமும் இருவர் நின்று சூடான எண்ணை கொண்டு அழுத்தித் தேய்ப்பார்கள். நம்மை உட்கார வைத்து கைகளை மஸாஜ் செய்வார்கள்.

பிறகு குப்புறப் படுக்க வைத்தும், மல்லாக்க படுக்க வைத்தும் கை விரல் முதல் கால் விரல் வரை அழுத்தி நீவி விடுவார்கள்.

வலி இருக்கும் இடத்தில் சற்று நேரம் கூடுதலாகவும், அழுத்தம் கூடுதலாகவும் தேய்த்து விடுவார்கள்.

அதன் பின் நீராவிக் குளியலில் நன்கு வேர்க்கும்வரை அல்லது நம்மால் தாங்க முடிந்த வரை இருக்க வேண்டும். துர்நீர் வெளியேறவும் மருந்துகளின் குணங்கள் உள்ளேறவும் பயன் படுகின்றது இது. இதற்காக பிரத்யோகமாக காட்டுப் பலா (அய்னி/அஞசிலி) மரத்தாலான பெட்டி ஒன்று உண்டு. அதனுள் ஒரு நாற்காலியும் உண்டு. பிரஷர் குக்கரிலிருந்து வரும் ஆவி உள்ளே செலுத்தப் படுகிறது. தலை மட்டும் வெளியே தெரியும்படி கதவைச் சாத்தி விடுவார்கள்


இறுதியாக கடலை மாவு தேய்த்து சுடு தண்ணீரில் குளித்து ராஸனாதிப் பவுடரை முகர்ந்து பார்த்து, உச்சந்தலையில்  தேய்த்துக்கொண்டு வரலாம்.

இள்ஞ்சூட்டில் எண்ணையை மஸாஜ் செய்வதால் உடம்பில் உள்ள நாடி நரம்புகள் தசைகள் இளகி ரத்த ஓட்டம் சரியான முறையில் நடைபெறும். எண்ணையில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படும். மூட்டு வலியும் குறையும். பசி கொடுக்கும். மேலும் அழுத்தி மஸாஜ் செய்பவதால் கல்சியம் படிந்து இறுகிப்போன எலும்பு இணைப்புகளும், தசையை எலும்புடன் இணைக்கும் நார்களும் இள்கி தளர்வு கொடுக்கும். இது முதல் 3-5 நாட்களுக்கு நடக்கும். பிற்கு உடலுக்கு பலமூட்டவும், மறுபடியும் வராமல் தடுக்கவும் (கிளி) சிகிச்சை தொடரும். எண்ணை தேய்த்ததைப் போலவே கிளி முடிச்சையும் சூடான எண்ணையில் நனைத்துத் தேய்ப்பார்கள்.


athira, sutha, prasanna senior