Labels

Tuesday, October 22, 2013

43. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்! Course to chose

என்ன படிக்கலாம்? அதற்கு, எப்படிப் படிக்கலாம்

என் மகள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். படித்தாளா?
என் மகன் டாக்டருக்குப் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நடந்ததா?
என் பேரன் agriculture படிக்க வேண்டுமென்கிறான். படிப்பான்!
ஏன் +2 வில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் ஆசைப் படுவது நடப்பதில்லை.?

காரைக்குடி, அங்கு பெயர் பெற்ற பள்ளிக்கூடம், அதில் என் மகள் +2 படித்தாள்.
எப்பொழுதும் முதல் மூன்று பேரில் ஒருவள். 98%க்கு மேல். Cut off for medical course 89.5; for engineering 93.5. We belong to O C category. That was with entrance exam TNPCEE. Counselling கில் Dental course தான் free seat இரண்டாவது சுற்றில் கிடைத்தது. அவளுக்குப் போக விருப்பமில்லை. ஆனாலும் சோர்ந்து போய்விடவில்லை. காரைக்குடி அழகப்பா எஞ்சினீயரிங் காலேஜில் EEE யில் முதல் மாணவியாகச் சேர்ந்து 84% வாங்கி இங்கு TCS ல் சேர்ந்து பின் திருமணமாகி U S ல் வேலை பார்த்து வருகிறாள். மகன் எஞ்சினீயரிங் படிக்க வேண்டுமென்றவனை பயாலஜி யையும் படிக்கச் சொல்லி physics மார்க்கைக் குறைத்ததுதான் சாதனை. இருந்தாலும் சோழிங்கநல்லூர் St.Josephs ல் படித்து CTS Cognizant ல் வேலை பார்த்து வருகிறான். பின் எதற்கு இந்தப் பீடிகை?

உங்கள் குழந்தைகள் (என் பேரனும்தான்) எப்படிப் படிக்க வேண்டுமென்பதற்குத்தான். வாழ்க்கை  பூராவும் அனுபவமாகவே போய்விடக் கூடாதல்லவா? Not only that your ambitions must be high but executions should also be effective. நம் குழந்தை அதைக் கட்டி இழுக்க (கொண்டு செலுத்த!) முடியுமா என்று பார்க்க வேண்டாமா? என் மகள் இழுப்பாள் என்று நம்பி மதுரையில் பிரபல tutorial college ல் week end course ல் சேர்த்து all India medical entrance exam (AIPMT 15% seats for all over India, AIIMS 80000 people for 50 seats, VELLORE only 60 seats, JIPMER only 120 seats) மிற்கு படிக்கச் சொன்னேன். ஒவ்வொரு வாரமும் 2 நாள் அதற்காகச் செலவானது. அது TNPCEE யிலும், +2 விலும் மதிப் பெண்களைக் குறைத்து ஆசைப்பட்டதை அடைய முடியாமல் செய்து விட்டது. ”காலம் போற்று. அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட மாதிரி, இக்கரைக்கு அக்கரை பச்சை, ஆசை இருக்கு தாசில் பண்ணஎன்று கூறலாமா? இம்மாதிரியான ஆல் இந்தியா தேர்வுகளில் வெற்றி பெரும் முதல் 15% பேர்களுக்குத்தான் இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் இடம் கிடைக்கும். மேலும் இதைப் பற்றி தெரிந்தவர்கள் பெருநகரங்களில் 9 வது வகுப்பு முதலே தாயாரால் தயாராகி விடுகிறார்கள்!

பல tuitions, பல guides, பல exams பல CDs என்று கவனம் சிதறுகிறது. எந்தப் பரிட்சைக்குப் படிப்பது எந்தப் புக்கை ஃபோலோ பண்ணுவது. எந்த வாத்தியார் சொல் கேட்பது என்று குழப்பம். இதனால் எந்த டெஸ்ட்டிலும் முழு மார்க்குகள் வாங்குவதில்லை.  

ஆக நம் +2 text book ஒழுங்காகப் படித்து, கடந்த வருடங்களில் நடந்த தேர்வுகளுக்கு பதில் எழுதி அதை எப்படித் திருத்துகிறார்கள் (marking scheme step by step) என்று பார்த்தலே போதும். OC, BC, POOCHI எல்லாம் அப்புறம். தெரிந்தவை, புரிந்தவை எல்லாம் ஞாபகத்தில் இருக்கும் என்று கட்டாயம் இல்லை! அதை நினைவில் வைத்துக்கொள்ள மேலும் பயிற்சிகள் தேவை. பார்க்க இந்த வலைப்பூவில் : 28  ”நினைவாற்றலை மேம்படுத்த

Peter Principle:  (The members of an organization where promotion is based on achievement, success, and merit will eventually be promoted beyond their level of ability)
அதாவது People  tend  to  be  given  increasing  responsibility  until   they cannot  continue  to  work  competently!

கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் கல்வி ஒன்றே
Knowledge is wealth. But imparting  does not reduce it

கல்வியின் வேர்கள் கசப்பானவை, கனிகளோ இனிப்பானவை
Roots of Education are Bitter but the Fruit is sweet                                                              
வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்
Learn through others experience.......you stay young!         

SP.V. Ramanathan 
Life's treasures are people .................. together!



Tuesday, August 13, 2013

42. நாணயங்களும், நாணயமும், ’நா நயமு’ம், Rare,Scarce,Error Coins















நீங்கள் நாணயம் சேகரிப்பவரா? முதலில் இதைத் தெரிந்துகொள்ளுங்கள்! நம்முடைய அறியாமை வியாபாரிகளுக்கு நன்மை. அவர்களின் நா வண்மை நமக்குப் போட்ட வலை. அதேசமயம், விபரம் தெரிந்தவர்கள் சிலர் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் நியாயமானதே. இப்போது சில விஷயங்களைப் பார்க்கலாமா ?
·          Rare,
·          scarce,
·          error
எனும் வார்த்தைகளால்தான் நம்மை இந்த வியாபாரிகள் தூண்டில் போட்டு சுண்டியிழுப்பர்.

நாணயச்சாலைகளில் குறைவான அளவில் அச்சடித்திருந்தால் கிடைப்பது அரிதாக இருக்கும். இவற்றை ‘scarce’ எனலாம். சென்னையில் பெட்டிக்கடைகளில்கூட சாதாரனமாகக் கிடைப்பது கைமுறுக்கு. ஆனால், டில்லியில் ?! மும்பையில் ரோட்டுக்கு ரோடு வடா பாவ்”; நியூ யார்க்கில் கிடைப்பதில்லை. ஆக scarce என்பது ஒரு ஒப்பீடல் (relative term) ஆகிவிட்டது. எனவே, ஏற்கனவே நடந்த ஏலங்களில் எத்தனை முறை ஏலத்திற்கு வந்திருக்கிறது, பிரபலமான Krauss Catalogueபோன்றவற்றில் என்ன கூறப்பட்டிருக்கிறது, கண்காட்சிகளில் வேர்கடலைபோல வெள்ளமாகக் கொட்டிக் குவித்து வைத்திருக்கிறார்களா, எல்லா ஊர்களிலும் நிறையக் கிடைக்கிறதா, நாணயச் சாலைகளில் மொத்தம் எத்தனை அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்ற ஐந்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, ”ரேர்”; Rare  என்பதும் scarceதான். ஆனால் காசுகளின் மேலுள்ள வடிவம் அல்லது பேட்டர்ன் (elephant looked like a pig in George V coins) legend (bharath printed as marath in some coins) அபூர்வமானவைகளாக இருக்கும். அடிக்கடி பார்க்காதவைகளாக இருக்கும்.

இனி எரர்”; அச்சடிக்கும்பொழுது சில சமயங்களில் ஒரு பக்கம் அச்சு விழாமலிருக்கலாம் அல்லது அச்சு தள்ளி விழுந்திருக்கலாம். இவற்றை error என்கிறோம்.

இவற்றை ஒரு ஆல்பத்தில் எப்படி அடுக்குவது ? : கால அடிப்படையில் வரிசைக்கிரமமாக, தேதிவாரியாக, (periods) அல்லது அடுத்தடுத்து அடுக்குகளாக (series), அல்லது மதிப்பு வாரியாக (denominations) அடுக்கலாம்.

இத்துறை சம்பந்தப்பட்ட இன்னும் சில வார்த்தைகள்:
·         செர்டிஃபைட் காயின் : Certified coin = சான்றிடப்பட்ட நாணயம்
·         டை வெரைட்டி : Die variety = பலவகையான வார்ப்புருவுக்கான படிவம், படிவ அச்சு
·         மிண்ட் : Mint = நாணயச் சாலை
·         மிண்ட் வெப்சைட் : Mint websites = இணைய தளம், வலைத் தளம்
·         க்ரேட் : Grade = தரம் பிரித்தல்
·         லோ மிண்டேஜ் : Low mintage = குறைவான அளவில் அச்சடித்திருத்தல்.
·         ஃபேக் : Fake = போலி
·         டெஃபெனிடிவ் சீரீஸ் : Definitive series = வழக்கமான (நிலையான)  வரிசை
·         கமெமொரேட்டிவ் சரீஸ் : Commomerative series = நினைவாக வெளியிட்ட வரிசை

மேலும் விவரங்களுக்கு : இணையதளங்கள்:
http://www.worldofcoins.eu/forum/index.php/topic,16207.0.html?PHPSESSID=c0c4ed9c24fc3b77a6a098c8c226d9ff

வாழ்க்கை சாதிப்பதற்காகபரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம

http://examtechniques.blogspot.com
http://indiacoincollections.blogspot.com

http://indiansvisitingamerica.blogspot.com


Wednesday, July 10, 2013

41. ஆதார அட்டை !! Aadhar,

Before you say OK for a print out of your aadhaar receipt

Don't forget to add Phone number and email id. If you add them you can make certain changes online by yourself.

Insist on including the "aadhar enabled" bank account details (including bank’s IFSC code) to the operators uploading the information as the process of amendment is way too difficult. They are not well informed, so you insist on it.

Not giving details of your bank account can cost you a dear, as most cash subsidies including EPF transfer, bank KYCs, LPG cylinder subsidy and so on will soon be given through banks. If the account details are missing from your Aadhaar Card then be prepared to forgo such subsidies.

After this, you should inform your bank and the subsidy agency about your Aadhaar details to avail subsidies.

You are not allowed to use contact lens while imaging iris.

வாழ்க்கை சாதிப்பதற்காகபரிசோதிப்பதற்காக அல்ல,



அடுத்தவர் அனுபவம், பயன்படுத்த வேண்டியது

நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்

Tuesday, April 9, 2013

40. ஆயுர்வேதம் ஆயுசு கூட்டும் Ayurveda


40. ஆயுர்வேதம் ஆயுசு கூட்டும்

தான் பிறந்து வளர்ந்த ஊரான கொல்லத்தில் இரண்டு வாரங்கள் தங்குவோம் என்று கொஞ்சம்கூட என் மனைவி எதிர்பார்க்கவில்லை! எல்லாம் அவள் அக்காவும் அவா புருஷரும் ஆயுர்வேதத்தில் நம்பிக்கை வைத்து எண்ணெய் போடச் சென்று வந்து குணமான புண்ணியத்தில்தான்.

சீனியர் சிட்டிசன் டிக்கெட்டை தட்கலில் புக் செய்து கொல்லம் சென்று சேர்ந்தோம்.

வைத்தியர் டாக்டர் கொஞ்சம் நம்ம பாரதிராஜா மாதிரி இருந்தார். உன்னிகிருஷ்ணன் s/o கேசவன் பிள்ளை. BAMS, PhD. பரம்பரை வைத்தியர் பட்டமும் வாங்கியவர். பொளந்து கட்டுகிறார் ஆங்கிலத்தில், மலையாளத்திலும்தான். நமக்கும் வசதி, ‘பாரியாளுக்கும்சௌகரியம்’.

நிங்களுக்கு வாத-பித்த தேகமானும். அதே அனுசரித்து எண்ணை இடணம். வலத்தே தோளிக்கு மஸாஜ் செய்யணம். ஏழு திவசம் எண்ணெய் இடணம். ஒரு திவசம் ரெஸ்ட்டானும் purgative தரணம். பின்னே மூனு திவசம் கிழி (முடிச்சு) இடணம். சுக சிகிச்சைதன்னே. நோ ப்ராப்ளம்.” என்றார்.

வேர்க்கக்கூடாது ஆதலால் மழைக்காலத்தில்தான் எண்ணெய் இட வேண்டுமாம். எண்ணை தேய்த்துக் குளித்த உடன் தூங்கக் கூடாது

அடிப்படை எண்ணைகள் நல்லெண்ணை, தேங்காய் எண்ணை, ஆமணக்கு எண்ணை, வேப்பெண்ணை, கடுகு எண்ணை, வாதாம் எண்ணை, ஷீரபலா, தந்வந்த்ரம், முக்கூட்டு போன்றவை ஆகும்.

இலைகள், கருநொச்சி, ஆடாதொடை, ஆமணக்கு, எருக்கு, மஞ்சனத்தி, வேப்பிலை, புளி இலை, முடக்கத்தான், யூகாலிப்டஸ், ஐந்திலை நொச்சி, முருங்கை, நார்த்தை, சதகுப்பை போன்றவை ஆகும்.

தவிர பூண்டு, தேங்காய், இஞ்சி, சீரகம், அரிசி, பெருங்காயம் போன்றவையும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

அவரவர் உடம்புக்குத் தகுந்தவாறு எவைஎவை, எந்த அளவில், எப்படி உபயோகப்படுத்துவது என்பது தீர்மானிக்கப் படுகிறது. வாத உடம்பிற்கு நல்லெண்ணையும் பித்த உடம்பிற்கு தேங்காய் எண்ணையும் கப உடம்பிற்கு கடுகு எண்ணையும் அடிப்படை எண்ணெய்யாக உபயோகப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் தேய்ப்பவருக்கு டெக்னீக் தெரிந்திருக்க வேண்டும்

தங்குவதற்கும் எண்ணெய் போடுவதற்கும் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 1200 ரூபாய் ஆகலாம்.

Wednesday, February 6, 2013

38. நான் பார்த்த நாடுகள். Europe Tour













இங்கிலாந்துசிம்னி வைத்த வீடுகள், குறுகலான தெருக்கள்,மேடம் டூஸாட்ஸ் வாக்ஸ் (மெழுகுச் சிலைகள்) மியூசியம், லண்டன் ஐ வீல் (பறவையின் பார்வை)

ஃப்ரான்ஸ் - ஃபோக்ஸ்டோனை காலேய்லுடன் இணைக்கும் யூரோடனல் (கடலுக்கடியில் ரயில் பாதை), பராதே லாதீன் ஷோ (மிக டீஸண்டான காபரே), ஐஃபில் டவர், நோட்ர் டாம் கதீட்ரல், மோனா லிசா உள்ள மியூஸியம்

பெல்ஜியம்புருஸெல்ஸில் மான்னெக்கென் பீஸா (சிறுநீர் கழிக்கும் சிறுவன்) சிலை, ஆட்டோமியம் (இரும்பு அனுவின் உள்ளமைப்பு) ஆண்ட்வெர்ப் டைமண்ட்லாண்ட்

நெதெர்லாந்து - கூக்கென்ஹோஃப் டுலீப் தோட்டம், சீஸ் ஃபாக்டரி, விண்ட் மில், ,

ஜெர்மெனி டி கோலோன் ஒரிஜினல் ஷாப், கோலோன் கதீட்ரல், ரைன் நதியின்மீது படகு சவாரி, ப்ளாக் ஃபோரெஸ்ட், குக்கூ க்ளாக்

சுவிட்சர்லாந்து – (மல மல  ஆறு எங்கெங்கும்) ரைன் ஃபால்ஸ், ஜூரிச், மவுண்ட் டிட்லிஸ்(10 000 அடி), யூங்ஃப்ராவோ யூரோப்பின் சிகரத்தில் 11333 அடி) வித விதமான 200 கேபிள் கார்கள்
லீகென்ஸ்டெய்ன் வாடூஸ்வரி இல்லா நாடு, எல்ல நாட்டு அரசியல் வாதிகளுக்கும் தாதாக்களுக்கும் அக்கவுண்ட் உண்டு என்கிறார்கள்

ஆஸ்த்ரியா ஸ்வராவ்ஸ்கி (கிறிஸ்டல் கல் நகைகள்), வைன் யார்ட்ஸ் (திராட்ச்சைத் தோட்டங்கள்) வைனும் ஷாம்பேனும்தான்

இத்தாலி - வெனீஸில் கீடெக்கா கானல் போட் ரைட், ஸெயிண்ட் மார்க் பாஸிலிகா, க்ளாக் டவர்
பீஸா - சாய்ந்த கோபுரம், ஃப்ளாரென்ஸ்
ரோம் பழைய ரோமானிய கோட்டைகள், த்ரெவி ஃபவுண்டன், 3D யில் ரோமானிய சரித்திரம், கொலோஸியம்
வாடிகன் உலகத்தின் மிகச் சிறிய நகரம், மிகப் பெரிய கதீட்ரல் ஸெய்ண்ட் பீட்டர்ஸ் பாஸிலிகா

எல்லா நாடுகளிலும் உடைகளும்  கட்டிடங்களும் ரசிக்கத் தக்கவை. நாம் பார்திராத வித்தியாசமானவை.

லண்டனிலிருந்து ஃபோக்ஸ்டோனுக்கு பஸ்ஸில் வந்தோம். ஃபோக்ஸ்டோனிலிருந்து யூரோ டன்னல் வழியாக காலேய்லுக்கு வந்து பின் பாரீஸிற்கு வந்தோம். யூரோ டன்னல் என்பது ஃபோக்ஸ்டோனை காலேய்லுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் போடப்பட்ட ரயில் பாதை ஆகும். பஸ்ஸை அப்படியே ரயிலில் ஏற்றி விடுகிறார்கள். நாம் இறங்கி நிற்க சிறிது இடம் இருக்கிறது. ஒவ்வொரு பஸ்ஸுக்கும் இடையில் ஒரு தடுப்பு இருக்கிறது. சுமார் 30 நிமிடத்தில் பயணம் முடிந்து விடுகிறது.

அலுப்புத் தெரியாமல் எல்லா நாடுகளுக்கும் பஸ்ஸிலேயே போக முடியுமா? முடியும். சாலைகள் அவ்விதம். ஒரு நாளைக்கு ஒரே தடவையில் 500 கிலோ மீட்டர்  மூன்று மணி நேரத்தில் போகிறார்கள். ஆனால் இத்தாலிக்குள் நுழைந்தோமா, டிரைவர் பாடு குஷிதான். இந்தியாவில் இருப்பது போன்று பெருமிதமாக இருந்தது! எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்தார்கள். அதற்கு முந்திய நாடுகளில் பஸ்ஸில் சாப்பிட்டாலே போலிஸில் ஃபைன் கட்ட வேண்டும் என்றார்கள்!

சாலைகளில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் உலோகப் பொருட்கள் அழகானவை. இன்னும் 100 வருடத்திற்கு அழியாதவை. “no cement pillars, which break easily!”

ஜலதோஷம் யாருக்குமே இல்லை

எல்லா நாடுகளிலுமே இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது

அமெரிக்காவில் பெர்ஸனல் கேள்விகள் யாரும் கேட்பதில்லை. -ம் கல்யாணம் ஆச்சா? எத்தனை குழந்தைகள்? என்ன வேலை?
ஐரோப்பாவில் நிறம் மதம் வேறானாலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சில நல்ல கோட்பாடுகள் வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக நம்முடைய குடும்ப வாழ்க்கை முறை அவர்களை விட மேம்பட்டதாகத்தான் கருதுகிறேன்

Wednesday, January 16, 2013

37. Dear Parents, பெற்றோர்களுக்கு


பெற்றோர்களுக்கு

அந்தந்த வயதில் ஏற்படும் உணர்வுகளை சரியான வகையில் புரியவைத்து, இளைஞர்களை வழிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இங்கே இல்லை. கூட்டுக்குடும்பத்தில் பிள்ளைகள் மீதான கண்காணிப்பு அதிகம். தனிக்குடும்பங்கள் அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் தகர்ந்துவிட்டன. பிள்ளைகளால் முடிவெடுக்கவோ, தோல்விகளைத் தாங்கிக்கொள்ளவோ முடியவில்லை. அதனால் வன்முறையில் இறங்குகிறார்கள். – ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி திலகவதி அவர்கள்

(ஆக தாத்தா பாட்டி நம்ம வீட்ல இருப்பது நல்லது!
இன்றைய இரண்டு வயதுக் குழந்தை எவ்வளவு அடம் பண்ணுகிறது பாருங்கள்! (I was a discipline master in the school. I use to come across problem children where the mother is married second time. But could solve their problems with the help of grandparents)

குழந்தைகளுக்கு தோல்விகளைத் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்க்க வேண்டும். வயதுக்கு வரும் பருவத்தில் எழும் ஈர்ப்புகள், உணர்வுகள் பற்றியும், அதைக் கடந்து செல்லும் முறைகள் பற்றியும் கவுன்சலிங் கொடுக்க வேண்டும். இதைப் பெற்றோரே தரலாம். – மன நல மருத்துவர் ஷாலினி அவர்கள்

(சிங்கப்பூரில் 7ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் குழந்தை பிறப்பு பற்றி பாடம் உள்ளது.
ஸயின்ஸ் மியூசியத்தில் டெலிவரி வீடீயோவும் உள்ளது.)

நன்றிவெ. நீலகண்டன்குங்குமம் 24.12.2012


கூட்டுக் குடும்பங்கள் குலைந்துவிட்டன. பாட்டி, அக்கா, தங்கை, சித்தி, என உறவுகளின் தன்மைகளை புரிந்து கொள்ளாமல் வளரும் குழந்தை, தன் பருவத்தில் பெண்ணை பாலியல் பண்டமாகவே பார்க்கும். ’கோ-எஜூக்கேஷன்சிஸ்டம்தான் ஆண்-பெண் நட்பு பற்றிய புரிதலை உருவாக்கும். பெண்ணை சக உயிராகப் பார்க்க வைக்கும். – மன நல ஆலோசகர் வசந்தி பாபு அவர்கள்.

நன்றிவெ. நீலகண்டன்குங்குமம் 21-01-2013