Labels

Wednesday, December 1, 2010

8. அமெரிக்காவில் குளிர் காலம் (2). 8 Winter in America Part 2.




Todays temperature: 13ºC and 5ºC

சாதரணமாக நம் வீட்டிலுள்ள ஃபான் (கூரைக்காத்தாடி!) நாம் கீழிருந்து பார்க்கும்போது anticlockwise (forward) ஆக சுற்றும். காற்றைக் கீழ் நோக்கித்தள்ளும். குளிர்ச்சியை உண்டாக்கும். எப்படி? காற்று நம் தோலின் மேல் படும்போது, நம் உடம்பின் மேலுள்ள வேர்வையை ஆவியாக்கிக் குளிர்ச்சியைத்தருகிறது.

ஆனால் இங்குள்ள ஃபானின் மண்டையில் உள்ள சுவிட்சைத் தட்டினால் clockwise (reverse)ஆகச் சுற்றும். குளிர் காலத்தில் இப்படி ஓட்டுகிறார்கள். ஏன்?!

குளிர்ந்த காற்று அடர்த்தியானது. ஆகவே கீழ் மட்டத்திலேயே இருக்கும். வெப்பமான காற்று மேல் நோக்கிச் செல்லும். வெப்பக்காற்று மேலேயே நிற்கும். கீழே சூடு இறங்க வெகு நேரமாகும். Termostat ஹீட்டரை நிறுத்த நேரமாகும். எலெக்ட்றிசிட்டி பில்லும் எகிறிவிடும். ஃபான் reverseல் ஓடும்போது காற்று நம் உடம்பின் மீது படாது. நம் உடம்பைக் குளிர்விக்காது. ஹீட்டரிலிருந்து வரும் வெப்பக்காற்றை சம அளவில் குளிர்ந்த காற்றுடன் கலக்கும். பக்கவாட்டில் சுவற்றில் பட்டு கீழிறங்கும். பிறகு அறையின் நடுவில் வந்து காற்று மேலே ஏறும். Convection currents!

கீழ்கண்ட சூழ்நிலைகளில் மேற்கண்ட தியரி எடுபடாது.
1. ரூமின் உயரம் 9 அடிக்கு மேல்.
2. ஃபானுக்கும் கூரைக்கும் உள்ள இடைவெளி 1.5 அடிக்கு மேல்
3. 11 * 11 * 11 க்கு மேல் பெரிஅய அறை
4. அறையினுள் படிகளுக்கான திறந்த வெளிகள்

இந்த சூழ்நிலையில் ஃபானை எப்போதும்போல் போட்டு மெதுவாக ஓட விடவும். ரிவர்சோ பார்வர்டோ பானை ஓட விடுவது நல்லது. இல்லையென்றால் மேல் வீட்டுக்காரருக்குத்தான் நல்லது!!

போர்த்திக்கொள்ள 'comfort' என்ற ஃபோம் வைத்த ப்ளான்கெட்டை உபயோகப்படுத்துகிறார்கள். உல்லன் ப்ளான்கெட்டும் உண்டு.

மூக்கிலிருந்து வாய் வளியாக ரத்தம் வந்தால் காற்றில் ஈரப் பதத்தைக் கூட்டுவதோடு மூக்கினுள் saline spray (< $2) விட்டுக் கொள்ளலாம். மூக்கும் வாயும் காய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளவும். பயமுறுத்த வில்லை. எல்லாருக்கும் வரவேண்டும் என்பதும் இல்லை. அறையின் நான்கு மூலைகளிலும் டப்பில் தண்ணீர் வைக்கலாம். Hygrometerஐ ($7) வைத்துப்பார்த்தால் 30%-50% இருந்தால் நல்லது.

இலையுதிர் காலத்தில் காற்றில் மகரந்தம் (pollen grains) அதிகரித்து asthma வர வாய்ப்பு உண்டு. a pollen count between 200 and 400 (pollen grains per cubic meter of air) is considered “high”.

ஃப்ளூ காய்ச்சல், Flu shots for $20 என் று pharmacyயில் preventive ஊசி போட்டு விடுவார்கள்.

காலையும் மாலையும் யோகாவும் முக்கியமாக கபாலபதியும் செய்வது நல்லது. உடம்பை உஷ்ணமாக வைத்துக் கொள்ள உதவும்.

www.wunderground.comல் எப்போது 'cold front' வருகிறது என்று பார்த்து வைத்துக் கொள்ளவும். அப்போது 3-4 நாட்கள் மட்டும் வெளியே செல்ல வேண்டாம்.

பெரும்பாலும் மதியம் 12 - 4 மணிக்குள் வெளியே செல்வது சுகமாக இருக்கும். உடையை அணிந்து செல்வதில் சோம்பல் பட வேண்டாம். எல்லா உடைகளையும், இன்னெர், காப், க்ளவ்ஸ், ஸாக்ஸ் முதற்கொண்டு அணிந்து செல்லவும்.

வீட்டு நுழைவு வாயிலுக்கு வெளியே snow இருந்தால் சுத்தம் செய்ய வேண்டியது வீட்டுக்காரர் பொறுப்பு. தபால்காரர் தடுக்கி விழுந்தால் மருத்துவச் சிலவு உங்களைச் சேர்ந்தது!!
I have hosted  two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com

Pls read them and post your comments or suggestions for new topics

1 comment:

  1. கபாலபதி..?? மாமா யோகாசனாஸ் தெரியுமா உங்களுக்கு..

    வீட்டு நுழைவு வாயிலுக்கு வெளியே snow இருந்தால் சுத்தம் செய்ய வேண்டியது வீட்டுக்காரர் பொறுப்பு. தபால்காரர் தடுக்கி விழுந்தால் மருத்துவச் சிலவு உங்களைச் சேர்ந்தது!! //

    ஹாஹாஹா இது வேறயா..

    ReplyDelete