12. நன்றி சொல்லும் தினம், பகுதி 2. Thanksgivingday 2.
ஸேல்ஸ்ல சீப்பா வாங்குவதென்றால் சும்மா இல்லே. நிறைய பிரப்பரேஸன்ஸ் எல்லாம் செய்ய வேண்டும். முதலில் ஏற்கனவே 'பங்கு பெற்றவர்க' ளிடம் கேளுங்கள். நிறைய வெப்சைட்டுகளில் இதைக் குறித்து முன் கூட்டியே 'ரகசியத்' தகவல்கள்வெளியாகும். எந்தெந்த சூப்பர் மார்க்கெட்டில் என்னென்ன ஸேல்ஸ் என்று 'கிசுகிசு' வரும்.
கொழுந்தியாள் மகள் வள்ளியம்மை ஃப்ளோரிடாவிலிருந்து e mail அனுப்பியிருந்தாள். ஒவ்வொரு ஸ்டோரும் எத்தனை மணிக்குத் திறக்கிறார்கன், என்னென்ன பொருகள் என்ன விலைக்கு ஸேல்ஸ் ஆகப்போகிறது என்று எக்ஸெல் வொர்க்ஷீட்டில்!
Store, Opening time, Category, Sub-Category, Brand, Description, Price என்று.
http://blacfridaybuyingguide.shopping.officelive.com
தம்பி மாப்பிள்ளை லாப்டாப்பில் வியாழனன்று தேடி $500 தொஷீபா லாப்டாப் $188க்கு "Best Buy"யில் ஸேல்ஸ் போட்டிருப்பதாகக் கண்டு பிடித்து வைத்திருந்தோம்.
என் மாப்பிள்ளையும் hard disk, vacuum cleaner என்று பல ஐட்டெம்ஸ்!
Target, Sears, Macys, Bestbuy, KMart,Office Depot, Home Depot என்று பல ஸ்டோர்கள். ஆன்லைனில் Amazon, eBay, Meritline, Overstock, Deals2catch என்று பல.
Deals on clothing, toys, electricals, electronics and housewares starting at midnight.
At 5:00am, the doorbuster deals will become available.
என் மாப்பிள்ளையும் தம்பி மாப்பிள்ளையும் "மாமா உங்களுக்குக் குளிர் தாங்காது. நாங்க ஆளுக்கு ஒரு கடையாகப்பார்த்துக்கொள்கிறோம்" என்றார்கள்.
என் மனைவியும் பல gift குடுக்க வேண்டிய ஐட்டெம்ஸ் லிஸ்ட் வைத்திருந்தார். பக்கத்தில் நடந்து போகக் கூடிய தூரத்தில் Walmart ஒன்றுதான்.
சில கடைகளில் காலை3 மணி போல் கூப்பன் குடுத்து காலை5-9க்குள் வாங்கிக் கொள்ளச் சொல்வார்கள்.
எல்லாரும் இரவு 11.30 க்குக் கிளம்பி விட்டார்கள்.
மனைவியும் மகள்களும் Walmartக்குப் போனார்கள். சும்மா பார்த்திட்டு வருவம், காலையில்தானே ஸேல்ஸ் என்று.
மாப்பிள்ளைகள் மாமியாருக்கு லாப்டாப்புக்கு கூப்பன் வாங்க 2.30am க்குப் BestBuy போவதாக இருந்தார்கள். ஆனால் சீக்கிரமே போய் விட்டார்கள். போனால், அங்கே நம்மாளுக, ஊர் ஆளுக எல்லாம் பாய் விரித்துப்படுத்திருக்காக! பிறகு ஒரு நாள் இண்டெர்னெட்டில் தேடி $600 லாப்டாப்பை $300க்கு வாங்கியது வேறு விஷயம். சந்தேகம் வேண்டாம் "இங்கே பாருங்க" தமிழ் கூட நல்லா அடிக்க வருது!
எலெக்ரிக்கல் சாமான்கள் வாங்கும்போது ஞாபகம் வைத்துக்கொள்ளவும், 110V. அப்புறம் ரிச்சி ஸ்ட்றீட்டில் 1600 ரூபாய்க்கு ஸ்டெப் டவுன் அடாப்டெர் (voltage converter) வாங்க வேண்டும். லாப்டாப், ஸெல்ஃபோன் வகையறா வாங்கலாம்.
மனைவியும் மகள்களும் நிறைய்ய சாமான்களுடன் வந்திறங்கினார்கள். மாப்பிள்ளைகளும்தான்..இரவு2மணிக்கே. ஏனப்பா ஸேல்ஸ் காலையில்தானே? இப்ப மணி என்ன?
எல்லாரும் சிரித்தார்கள்."நாங்க வால்மார்ட்டைச் சுத்திப் பார்க்கப் போனோமா. அது 'வால்மார்ட் ஸூப்பர் ஸெண்ட்டர்' 24 ஹவர்ஸ். ஸேல்ஸ்க்காக புது விலை எல்லாம் ஒட்டி வைத்துவிட்டார்கள். வாங்கிக்கொண்டு வந்துவிட்டோம்" என்றார்கள்.
I have hosted 2 more blogs.
Pls view and post your comments.