1. The Peak
2. Tian Tan Buddha
3. Ngong Ping 360
4. Disneyland
5. Ocean Park
6. Repulse Bay
7. Golden Bauhinia Square
8. Avenue of stars
9. Soho Central
10. Lan Kwai Fong
11. Murray House
12. Stanley market
13 Seafood bazaar
14. Wetland Park
15. Jade street
16. Ladies market
17. Sai kung town
18. Lemma island
இரண்டாவது
கொழுந்தியாள் விசாலாட்சி முத்துராமன் அவர்கள் மகள் பாலாம்பாள் நாராயணன் அவர்களின்
நெடுநாள் அழைப்பை ஏற்று நானும் சகதர்மினி சகுந்தலாவும் ஹாங் காங் செல்ல முடிவு
செய்தோம். தற்செயலாக பாலாவும் மகன்களின் விடுமுறைக்காக சென்னை வந்து திரும்பியதால்
அவர்களுடனேயே போக முடிவு செய்தோம். கூட்டிப்போகாம விடமாட்டேன் என்றால் என்ன
செய்வது? ஏற்கனவே குவேய்த்துக்கு வரவில்லை என்று ஆதங்கம் வேறு. மாப்பிள்ளையோ மறு
மகன். செல்வத்துக்கும், மக்கள் செல்வத்திற்கும் எங்கள் மனதில் குறையில்லை.
அன்பிற்கும் உரிமைக்கும் குறைவில்லை. கொழுந்தியாள் பேரன் சேட்டை செய்தால்
கண்டிக்கும் உரிமையும் நமக்கு உண்டு.
அங்கு இறங்கிய பின் விமான
நிலையத்தில் ஒரு மாத விசா தருகிறார்கள். ஒரு மாதம் அங்கு தங்கியிருந்தோம். இடையே
சீனாவிற்கும் 5 நாட்கள் சென்று வந்தோம்.
Ana, பேருதான் ஆனா, ஆனால் எல்லாவற்றிலும் “அ” தான். பேரன் வசியப்பட்ட்து இவரிடம்தான். சட்டை iron செய்தால் குறைவான மடிப்புகளுடன் இருக்கும். படு வேகம். பிலிப்பைன்ஸிலிருந்து வந்திருக்கும் வீட்டு உதவியாளர்.
ஹாங் காங்கில் Big
Buddha அல்லது Giant Buddha அல்லது Tian
Tan Buddha எனும் வெண்கலச் சிலை லந்தவ் தீவில் ஙோங் பிங் எனும் இடத்தில் (Lantau , Ngong Ping) 1700
அடி உயரத்தில் இருக்கிறது. ஹாங் காங் வரும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் காணவேண்டிய
முதல் இடம் இது. சுற்றிப் பார்க்க 6 மணி நேரம் தேவைப்படலாம். 112 அடி
உயரமும் 2,50,000 கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கலச்சிலை 1993ல் இங்கு
நிறுவப்பட்டது. உள்ளே ஸ்டீல் ஃப்ரேம்களினால் ஆனது. முகம் தஙப்பூச்சுப் பெற்றது. தாய்வானில்
உள்ள சிலைக்கு அடுத்த பெரிய சிலை இதுதான். கேபிள் காரில் வந்து இறங்கி சில நிமிடங்களில்
சென்று விடலாம். போகும் வழியில் சீன கலாச்சார நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டே
செல்லலாம். 268 படிகள் உள்ளன. சிலையின் அடிவாரத்தின் உள்ளே மூன்றடுக்கு கண்காட்சியகம்
உள்ளது. பராமரிப்புக்காக சில நாட்களுக்கு மூடப்படும். தெரிந்து கொண்டு செல்லவும்
புத்த பிக்குகள் தங்கும் அழகிய
போ லின் மொனாஸ்ட்ரி இங்கு உள்ளது.
இங்கு செல்ல உள்ள கேபிள்
காரின் உள்ளே நுழைந்த உடனேயே உடம்பில் ஒரு புத்துணர்ச்சி (புத்தரினாலோ) ஏற்படும்.
மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும். 6 கி மீ தூரமுள்ள இரு வழிப் பாதையாகும் இது. 25
நிமிடப் பயணத்தில் பறவையின் பார்வை போல பன்னாட்டு விமான நிலையம், தென் சீனக்கடல்,
பெரிய புத்தர், லந்தவ் தீவின் பசுமையான வடக்குப் பகுதி எல்லாவற்றையும் காணலாம். பசுமையான
சுற்றுச் சூழல் அப்படியே பாதுகாக்கப் படுகிறது. போக வர HK $ 130. சீனியர்
சிட்டிசெனுக்கு 114 தான்.
மக்கள்: ஹாங் காங் என்றால்
நறுமணமுள்ள துறைமுகம் என்று அர்த்தம். காந்தனீஸ் என்ற வட்டார சீன மொழி பேசுபவர்கள்.
ஆங்கிலத்தை பிரிட்டிஷாரைப்போல உச்சரிப்புடன் பேசுகிறார்கள். சீனாவோடு தொடர்பை
பெரிதும் விரும்பவில்லை.
பஸ்ஸில், டிரெயினில் முதியோர்களுக்கு,
குழந்தையுடன் வருபவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு நீங்கலாக, உடனே மனமார எழுந்து இடம்
கொடுப்பார்கள். வழி கேட்டால் காட்டுவார்கள். ஆனால் ஆங்காங்கே இருக்கும்
வழிகாட்டும் அம்புகளே போதும். க்யூவில் நிற்பதா, இடம் பார்த்து உட்காருவதா, குப்பை
போடுவதா, ரோட்டோரம் நடப்பதா, எதிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டும்.