டுபெய்? துபாய்? மணல் நகரம்?
அண்மையில் திரு பிச்சப்பன், திருமதி வள்ளியம்மையின் அழைப்பின் பேரில் துபாய்க்கு 15 நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டோம். விருந்தோம்பலின் அடையாளம், அவர்கள்.
திரு சபா மெய்யப்பன், திருமதி சீதாலெஷ்மி அவர்களின் அழைப்பின் பேரில் Legacy International நடத்தும் வகுப்பைப் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. திரு சபா மெய்யப்பன், திரு குணா ஆகியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது. திரு ரவீந்திரன், திருமதி தேனம்மை, திருமதி தேன்மொழி திரு சோலை ஆகியோர்கள் குழந்தைகளை வழி நடத்துகிறார்கள். பொது மேடைகளில் பேசுவது, குழுக்களில் பங்கேற்பது, நிர்வகிப்பது, ஆளுமை, உடல் மொழி, ஒவ்வொருவரின் தனித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்வது எப்படி என்று தனிதனியாகச் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்தேன். ஐந்தாம் வகுப்பு முதல் 10வது வரை படிக்கும் குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகள்தான்‼ ஆனாலும் என்ன ஆர்வம்? அதை விட அவர்கள் பயன்படுத்திய புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். கிட்டத்தட்ட 10 வருடங்கள் சென்று எனக்குள் இருந்த ஆசிரியரை மேம்படுத்தி வெளிக்கொணர்ந்தது.
குழந்தைகளுக்கு உதவும்படியான சில தகவல்களைக் கூறும்படி கேட்டுக் கொண்டனர். முதலில் நான் முன்பே வலைத்தளத்தில் எழுதியபடி chemistryயில் Cl, Cl-,
Cl2 ஆகியவற்றை எப்படிப் வாசிப்பது போன்றவற்றைக் குறித்துப் பேசினேன். வலைத்தளத்தில் காண்க. summavinmama-rama.blogspot.com
அடுத்து ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி என்பது குறித்து தெரிவித்தேன்.
நினைவாற்றலை நம்மை அறியாமலேயே, சிரமமில்லாமல், பொழுதுபோக்காக மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் கூறினேன்.
புத்தகத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
1. ஆசிரியர். எத்தனை வருடங்களாக எழுதி வருகிறார்?. எத்தனை புத்தகங்கள் எழுதி உள்ளார்? (கடைசி/பின் அட்டையில் இருக்கலாம்) எழுத்து நடை சுலபமானதா? ஆர்வத்தைத் தூண்டக்கூடியதா? எனப் பார்க்க வேண்டும்.
2. சமீபத்திய வருடத்தில் பதிப்பிக்கப்பட்டதா?
3. எத்தனை மறு பதிப்புகள் வந்திருக்கின்றன?
4. எத்தனை திருத்தப்பட்ட பதிப்புகள் வந்திருக்கின்றன?
5. முன்னுரையைப் படித்துப் பார்க்க வேண்டும். ஆசிரியரைப்பற்றி நன்கு தெரிந்த ஒருவர் இதை எழுதி இருப்பார். மேலே எண் 1 ல் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
6. அணிந்துரை, புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் இருக்கும்.
7. என்னுரையில் ஆசிரியர் அவரின் அனுபவத்தையும் நூல் எழுதியதின் நோக்கத்தையும் தெரிவித்திருப்பார்.
8. பொருளடக்கம் உங்களுக்கு வேண்டியது புத்தகத்தினுள்ளே இருக்கிறதா என்று தெரிவிக்கும். அட்டவணை / index இருந்தால் இன்னும் நல்லது. தெரியாத ஒரு தலைப்பை எடுத்து எழுத்து நடை உங்களுக்குப் புரிகிறாற்போல இருக்கிறதா என படித்துப் பார்க்கலாம்.
9. படங்களும் அட்டவணைகளும் நிறைந்திருக்க வேண்டும். 100 வார்த்தைகள் சொல்லக்கூடியவற்றை ஒரு படம் சொல்லிவிடும். மேலும் நன்கு நினைவிலும் நிற்கும்.
10. பாடத்தின் இறுதியில் கேட்கப் பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதன் கீழேயே விடை கொடுக்கப்ப்பட்டிருக்கக் கூடாது. விடைகள் கடைசிப் பக்கத்தில் இருக்க வேண்டும்.
நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்வது எப்படி?
ஒரு தலைப்பைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதும்,
புரிந்து கொண்டிருப்பதும், நினைவில் வைத்திருப்பது என்பதும் வெவ்வேறான விஷயங்களாகும்!‼ ஒரு தடவை படித்ததும் தெரிந்த மாதிரி இருக்கும்! இரண்டு மூன்று தடவை படித்ததும் புரிந்த மாதிரி இருக்கும்‼ புரிய வேண்டிய முறையில் புரிந்ததா என்பது application கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்கும்போதுதான்
தெரியும்‼! நினைவில் நின்றதா என்பது தேர்வின்போது நீங்கள் விடை எழுதிக் கொண்டிருக்கும்போதுதான் தெரியும். Too late. இவற்றில் உங்கள் தகுதி நிலை எங்கே இருக்கிறது என்பதை இப்போதே தெரிந்து கொள்வது நல்லது.
பேருந்தில் அமர்ந்திருக்கும்போது தெரிந்த ஒருவரைப் பார்க்கிறோம்.
அவர் பெயர் நினைவிற்கு வரவில்லை. பேருந்தை விட்டு இறங்கி சிறிது நேரம் சென்று அவர் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது நமது மூளை ஒரு தகவலை மீட்டுக்கொண்டு வர சிறிது அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டது என்று அர்த்தம். மறக்கவில்லை. இந்த time of recall ஐ சுருக்க என்ன செய்யலாம்?
நமது உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பயிற்சி தேவைப்படுவது போல மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும் பயிற்சி தேவைப் படுகிறது.
1. உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்
2. படிக்கும்பொழுது புத்தகத்தைப் பார்த்து, வாய்விட்டுப் படித்து, எழுதிப் பார்க்கவும். எந்த டி வி சீரியலும் உங்கள் கவனத்தைச் சிதறடிக்க முடியாது. இப்படிச் செய்யும்பொழுது ஒரு தகவலுடனான உங்கள் தொடர்பு நேரம் நீட்டிக்கப்படுகிறது.
3. குறுக்கெழுத்துப்போட்டி, புதிர்கள், சுடோகு முதலியவற்றை செய்து பாருங்கள். முதலில் சிரமமாக இருந்தாலும் போகப்போக நீங்கள் இவை சுலபமாக வருவதைக் காண்பீர்கள். ஆரம்பத்தில் மற்றவர்களின் உதவியுடன் செய்து பழகுங்கள். நினைவு மீட்டல் சக்தி கூடிக்கொண்டே போகும். நேரம் குறைந்து கொண்டே வரும்!
4. விஜய் டிவி யில் ’Connexion’,
குமுதத்தில் ’ஆறு வித்தியாசங்கள்’, WhatsApp ல் வரும் emoticons ஆகக் கொடுக்கப்பட்டுள்ள ஊரப் பெயர்கள், சினிமாப் பாடல்கள், படப் பெயர்கள் ஆகியவற்றைக் கண்டு பிடியுங்கள்.
உங்களை அறியாமலேயே, பொழுதுபோக்காக ஆரம்பித்து, வலி தெரியாமல், உங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்து உங்கள் நினைவாற்றல் பெருகுவதைக் காணலாம். வாழ்க, வளர்க.
மேலும் விபரங்களுக்கு: