Labels

Wednesday, October 7, 2015

51. சீனா செல்ல, visiting China

On the way to Big Buddha

சீனா செல்ல!
                                                       முன்னேற்பாடு:

Forbidden city Walk
1.   முதலில் வங்கியில் ஒரு ஆளுக்கு 1,50,000 இருப்பு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும்.
2.   வங்கியின் சின்னமுள்ள தாளில் மேலாளரின் முத்திரையுடன் 6 மாத கணக்கு விபர அறிக்கை ஒன்றுகையெழுத்திட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
3.   கடவுச் சீட்டு முடிய குறைந்தது 6 மாதங்களாவது இருக்க வேண்டும். 
4.   வெள்ளைப் பின்னணியில் கட்டம் கட்டாத
                                  ”கடவுச்சீட்டு புகைப்படஅளவில், 33 மிமீ அகலம் 48 மிமீ  உயரம்,  இரண்டு புகைப்படம் வேண்டும்.

5.   தோராயமாக முதலில் சுற்றுலா தேதிகளை முடிவு செய்து கொள்ளுங்கள். தகுந்த பருவகாலம், மலிவான விமானக் கட்டணங்கள் கிடைக்கும் காலம் ஆகியவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆகஸ்டு கடைசியில் தகுந்த காலம் என நினைக்கிறேன்.



The Peak, Galleria
ஹாங்காங், மக்காவ், ஷாங்ஹாய், பெய்ஜிங் டூர்என்று வலைத்தளங்களில் தேடி எந்தெந்த ஊர்களைப் பார்க்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து அந்த ஊர்களில் எதைப் பார்க்க வேண்டும், குறிப்பிட்ட நாட்களில் அந்த இடத்திற்கு விடுமுறை உள்ளதா என்பதையும் தெரிந்து கொண்டு தேர்ந்தெடுத்து பின் ஹாலிடே பாக்கேஜ்ஜஸ்தரும் டிராவல் ஏஜெண்டுகளைப் பார்த்து உங்களுக்கு வேண்டியதைக் கூறவும். ஓருவருக்கு குறைந்தது  95,000 ஆகலாம்; பொருட்கள் vaaங்கத் தனி!

With Thiru Arun and Thiru Narayanan Family
 டிராவல் ஐட்டினெரியையும், ”ஹோட்டல் புக்கிங்கையும் நீங்கள் ஒத்துக் கொண்ட பிறகு  சீனா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ”சைனீஸ் கான்ஸுலேட்டுக்காக, ஒரு கவரிங் லெட்டரையும் எழுதி உங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள். சைனாவிற்கு மட்டும் விசாவிற்கு ஒருவருக்கு 6000 ரூபாய் ஆகும். டெல்லியில் வாங்க வேண்டும். அவர்கள் ட்கடுவதென்னவோ 2800 ரூபாய்தான். ஹாங்காங்கில் இறங்கியவுடன் 14 நாட்கள் விசா தருவார்கள். அதற்கு மேல் வேண்டுமென்றால் இந்தியாவில்தான் விசா வாங்கிக் கொள்ள வேண்டும்.

The Great Wall of China
Only Cathay Pacific operates a non-stop flight. It’s 5 hours. Take a chinese translation print out from Google with you. You need not speak chinese. Just show them the print out in English equivalent of Mandarin in mandarin characters.

Or take a personal car tour with an English speaking guide like what we did, because we thought that we may not be able to walk fast in a group.

Hong Kong visa and Macau visa are free for 14 days on landing. You have to write a Hong  Kong address in your immigration card.














Thursday, June 25, 2015

50. தந்தையர் தினம் ! வாழ்க்கை அனுபவங்கள் பலருக்கு உதவட்டுமே.


1905ல் என் தந்தையாரின் பாட்டனார் குன்றக்குடியில் யஜூர் வேத பாடசாலை நிறுவி நடத்தி வந்தார்கள். பர்மாவிலும் மலாயாவிலும் லேவாதேவியும் மர வியாபரமும் நடத்தி வந்தார்கள். என் பாட்டனார் என் தகப்பனாருக்கு மூன்று வயதிருக்கும்போதே இறந்து விட்டார்களாம், அவர்களின் பாட்டனார்தான் அவர்களை வளர்த்தது. 14 வயதில் பர்மாவிற்கு கொண்டு விற்கப் போனார்களாம். சொந்த லேவாதேவிக் கடையில் வேலை பழகுவதற்கு. அதாவது முதலைக் கொண்டு போய் வியாபாரம் செய்வது. ( இன்னொரு சமூகத்தில்சாமர்த்தியம்பன்னப் போயிருக்காங்க என்று சொல்லுவார்கள். அதாவது மலாயாவிற்கு சென்று அங்கு கடன் வாங்கி தொழில் செய்து, கடனையும் அடைத்து லாபத்துடன் திரும்பி வருவது. Break even னுக்கு மேலே! மூன்று வருடங்களில். Very enterprising !  18 வயதிலிருந்து 33 வயது வரை ராதா அண் கோ, கமலா அண் கோ, சிவா அண் கோ என்று ஷேர் கம்பனிகளும் ( திரு பழ. கருப்பையா அவர்களின் தந்தையார் பாசின் பழநியப்ப செட்டியார் அவர்கள் பள்ளித் தோழர், ஒரு பார்ட்னர்!) அம்பாள் அண் கோ, பெட்றோ பாட்டரி டிப்போ என்று ஜெனெரல் மெர்ச்சண்ட்ஸ் ஷாப்பிகளும் நடத்தி வந்தார்கள்.

1945ல் என் தந்தையவர்களுக்கு, 33 வயதில், ஷேர் மார்க்கட்டில் 1 லட்ச ரூபாய்க்கு மேல் நட்டம் வந்ததாம்.
முன்னோர்கள் வைத்திருந்த சொத்தை விற்று அதை சரி செய்திருக்கலாம். கையில் இருந்த ஷேர்களை விற்று சுமார்லட்ச ரூபாயை அடைத்து விட்டு, மீதமிருந்த சிறிய தொகையை மலாயாவிற்குச் சென்று சம்பாதித்து அனுப்புவேன் என்று நண்பர்களிடம் கூறி 1948ல் மலாயாவிற்குப் புறப்பிட்டுச் சென்றதாக என் தகப்பனார் என்னிடம் கூறியுள்ளார்கள், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் ஜப்பானியர்களின் சித்திரவதைக்குப்பின் மலாயா பிரிடிஷாரின் கைக்குத் திரும்ப வந்து விட்டது. அங்கு எல்லாம் ஜப்பான் நோட்டுக்களாகப் போனதால் ரொக்கம் கையில் இல்லை. பிரிடிஷ் கரன்சி மறைத்து வைத்திருந்தவர்களிடம் மட்டுமே பணம் இருந்தது, ஆனால் 2 வீடுகளும் தென்னந்தோப்பும் இருந்தன. எங்கள் பங்காளிகளில் ஒருவர் தானாகவே முன் வந்து உதவி செய்கிறேன் என்று கூறியபோதும் அவர்களிடம் ஒரு வீட்டை அடமானம் வைத்தும் மற்றவற்றை விற்றும் லேவாதேவி தொழிலை ஆரம்பித்தார்களாம். தன் திறமையையும் உண்மையையும் முதலில் மதித்தவர்கள் என்பதால் ராமசாமி பெரியப்பச்சி மீது கடைசி வரை அவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள். மலேசியாவில் எங்கள் கடை 1928 நவம்பரில் எங்கள் பாட்டைய்யா மெ.நாக.மெய்யப்ப செட்டியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 20 வருடங்கள் ஏஜெண்டுகளளாலேயே நடத்தப்பட்டு வந்திருக்கின்றது. அவ்வளவு நம்பிக்கையான காலம் அது! 1948ல் தான்  என் தகப்பானாரவர்கள் பத்து பகாட்டிற்குச் (வத்துப்பகார்) சென்றிருக்கிறார்கள். நான் 11 வயதில் 1959ல் பத்து பகாட்டிற்குச் சென்றேன்.

உழைப்பவர்களைக் கண்டால் மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயங்க மாட்டார்கள்.”அப்பறம்என்கிற பேச்சே கிடையாது. உடனே சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்கள்

சில உறவினர்களிடம் கடன் கொடுக்கும்போது எழுதி வாங்குவார்கள். எனக்குத் தெரியும், இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் திருப்பித் தரப் போவதில்ல என்று. “மனுஷங்காரியம் நிச்சியமில்லைப்பா, ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். நல்லா வரும். அப்ப தந்திருவாகஎன்பார்கள் அப்படி 10, 15 வருடம் சென்று பணம் திரும்பி வந்ததும் உண்டு.

என் தாயாரின் பணத்தைத் தனிக்கடையாக வைத்து சம்பாதித்துத் தந்தார்கள். பிற்பாடு என் உறவினர்கள் என் தந்தையிடம் நீங்க எங்க பணத்தையும் பெருக்கித்தரவேண்டுமென்று கேட்டு அவர்கள் செய்து கொடுத்தார்கள்.”தாயைக் கொல்லாத தொழில் வட்டித் தொழில் என்பார்கள.

ஷேர் டிரேடிங், புத்தகங்கள் வாசிப்பது, வரைவது, சங்கீதம் கேட்பது, மொழிகள் கற்றுக் கொள்வது அவர்களது பொழுது போக்காகும். 96 வயதில் இயற்கை எய்தும் வரை நன்கு செயல் பட்டார்கள். 93 வயதில் மலையாளம் எழுதக் கற்றுக் கொண்டார்கள். தமிழ், ஆங்கிலம் தவிர உருது, ஹிந்தி,மலையாளம், ஜாவி மலாயும் எழுதத் தெரியும். இறப்பதற்கு 13 நாட்கள் முன்பு பட்ஜெட் டிரேடிங், ஹாஸ்பிட்டலில் இருந்தவாரே!
  
1981ல் பர்மா காலனிக்கு எதிர்புரம் கற்பக விநாயகர் நகர் அமைத்து கோவிலும் கட்டி அவார்கள் வாழ்நாள் முழுதும் டிரஸ்டியாக இருந்து வந்தார்கள். 9 பார்ட்னர்கள். நிதி, படிப்பு, ஆள்பலம் கொண்ட அனைவரையும் அரவணைத்து, சுமார் 32 ஏக்கர், 346 பிளாட்டுகளை மூன்று வருடங்களில் விற்று முடித்தார்கள். 9 பார்ட்னர்கள் ! !

காரைக்குடி, சேலம், அரூர் ஆகிய நகரங்களில் தங்க நகை அடகு, மறு அடகு கடைகளை நடத்தி வந்தார்கள். காரைக்குடியில் சிமிண்ட் ஏஜென்சியும் நடத்தி வந்தார்கள். பிறகு வைர வியாபாரத்தில் நேரடிக் கொள்முதல் செய்து நடத்தினார்கள்.

மற்றவர்களுக்கு தொந்தரவில்லாமல் இருக்க தம் உடல் நலத்தைப் பேண வேண்டும் என நினைப்பார்கள். பண லாப நட்டங்களுக்காக கவலைப் பட்டதே கிடையாது.

எளிமையான வசதிகள் நிறைந்த வாழ்க்கையை விரும்புவார்கள். எங்களையும் அப்படியே பழக்கி விட்டார்கள்.

ஆலோசனை கேட்பவர்களுக்கு, தனக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கு நல்லதையே  கூறுவார்கள். அவர்களின் இறுதிச் சடங்கின்போது, கட்டத்தளத்தில் கூடியிருந்த கூட்டமே. அதற்குச் சாட்சி.

அப்பச்சி, ஐய்யா, மாதிரி இனிமே எங்களுக்கு உண்மையாக யோசனை பாசனை சொல்ல ஆளில்ல அண்ணே!” அம்மன் சன்னதி கடைகளிலிருந்து வந்த அத்தனை பேரும் சொன்னார்கள். எங்கள் பெரியாயா பேரன் கும்பாபிஷேகதிற்காக காப்புக் கட்டியிருந்ததை அவிழ்த்து வைத்து விட்டு வந்து விட்டார்!

பிரச்சினைகளை வரிசைப்படுத்திவர வர நகளுவோம்என்பார்கள். ”அப்பச்சி! இன்கம் டாக்ஸ்ல கணக்க இந்த வருஷம் மலாய்ல குடுக்கனும்னு சொல்றாக. நீங்க இந்தியாவில இருக்கீங்க. ஆடிட்டருக்கு மலாய் தெரியல. அவரும் யார்ட்டயோ குடுத்து வாங்குவார் போல. அப்புறம் இண்டர்வியூ வேற போகணும். அவன் என்ன கேட்பானோ?” என்று நானும் சரமாரியாக ஃபோனில் பேச, அப்பச்சி சொன்ன பதில்வரவர நகளுவம்”. பின்னொருநாளில் நான் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டேன். தேவர்கள் சிவபெருமானிடம் வந்துஇந்திர லோகமே பற்றி எரிகிறது இங்கும் வரப் போகுது என்ன செய்வதுஎன்று கேட்டார்களாம் அதற்கு சிவ பெருமான் சொன்ன பதில்தான்வரவர நகளுவம்”  பதட்டப்படாதே, ஒன்றொன்றாகக் கடந்து போவோம் என்று அர்த்தமாம்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு, வயதான காலத்திலும் போரடிக்காமல் பொழுது போக்குவது எப்படி என்று அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டோம்.

ஹாஸ்யத்திலும் குறைந்தவரல்ல:
ஒரு முறை மத்தியானம் ஸ்கூல் விட்டு வந்து கதவைத் திறந்தபோது, இடித்துக் கொண்டு விட்டேன். பசி வேறையா! கதவை ஓங்கி ஒரு உதை விட்டேன். படுத்துக் கொண்டிருந்த அப்பச்சிடேய் என்னடா அதுஎன்றார்கள். “ஒன்னுமில்ல கதவு இடிச்சுருச்சு” ”என்ன கதவு இடிச்சுருச்சுருச்சா? அறிவு கெட்ட கதவு என்று சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டார்கள்
வடையைக் கடித்துத்திங்காதே. பிச்சுச் சாப்டம்னா, யாரும் வந்தா அவங்களுக்கு ஒரு பகுதியக் கொடுக்கலாம். நல்ல பிரண்ட்ஷிப் கிடைக்கலாம்.யார் கண்டா நல்ல பிஸினஸ் பார்ட்னரே கிடைக்கலாம!” ஓ அப்ப பாசின் பழ. இப்படித்தானோ என்று நினைத்துக் கொண்டேன்.



Tuesday, May 5, 2015

49. Trip to Dubai. தங்க நகரத்தில் என்ன பார்க்கலாம்?

For those who want to make a trip to Dubai.

You need to stay at least 4 nights.

Book your ticket online. It’s cheaper. Depending on the season, days and time the return fare may vary from 15000 to 20000 rupees. You can postpone the travel for a fee but cannot cancel it. That type of ticket may cost more than 25000.  Visa may cost you about 6000

We stayed at my wife’s niece’s house. Valliammai and Pichappan mapley. Unforgettable enjoyable stay! Valliammai took us around in her car throughout the trip. My nephew Meyyappan and cousin Nadarajan also took us around Dubai. We thank all of you.


The following was our itinery in  Dubai:
Abu Dhabhi, One of the best decorated, modern mosque is there. Best time to see is at night. It’s about 75 mins from Dubai. You need about                                         5 hours – 4pm to 9pm.

 Desert Safari, about 120 Dhirams.  Includes a jeep safari ride on a desert, a dance show by a man wearing LED dress, good veg/nonveg dinner and a belly dance. They pick you up at your residence and drop you back. 3pm to 9pm.


Magical Garden. Comparison unparalleled‼  Flower Garden in a desert! 30 Dhirams. 9am to 6pm. Took us about an hour to reach there. Check it out , if it is open in summer.
Dubai Mall, where Bhurj Khalifah, the worlds tallest tower is located. 128th floor – worth seeing the modern Dubai from there. Only thing if you book your ticket online in advance it’s cheaper. 120 dhirams. On the spot is 400. 

 Atlantis Hotel, Monorail and Palm Jumeirah. 10am to 1pm better


  Marine Drive, boat ride, your choice.

 Gold Souq, where all branded jewellers are located. Many Indian ones too. In some shops if you buy an older design, no wastage or making charges are added. But in Singapore proper Hallmarking will be there. Logo, year, purity in % and 22K, shop’s logo, manufacturers logo will all be displayed.  Because Dubai Municipal Corporation is very strict, they say there will be no frauds. Huge displays of huge jewelleries are there. Better take a taxi. Parking is extremely difficult. You  may need 4 hours in the  evening.

Golden replica of Burj Khalifa in 18 carat gold, weighing 22.65 kg, a gold bar in 24 carat, weighing 160 kg, and a designer party wear, attire crafted in 18 carat gold, weighing 1.075 kg are on display at Malabar Gold.

 Air coditioned buses and ac bus stops {like in Alandur!} are there!

Bon voyage. 



Friday, May 1, 2015

48. குளிக்கலாம் வாங்க! மூச்சை நிறுத்துங்க?

குளிக்கலாம் வாங்க!

“நம்மளால பச்சத் தண்ணீலெல்லாம் குளிக்க முடியாதுப்பா”
“அட? முடியும் வாங்க!”
“அப்டியா”
“நல்லா மூச்சை இழுத்துப் பிடிச்சிக்குனு, பெறகு மெதுவா மூச்சை வெளியே விட்டுக்கினே, தண்ணியையும் மெதுவா தலையில் ஊத்திப் பாருங்க!”

நரம்புகள் தோலின் கீழே முடியும். அவைகள் ஐந்து வகைப்படும். அவற்றில் ஒன்று சூட்டை உணரக் கூடியது. மூச்சை தம் கட்டும்போது அவற்றின் உணரும் தன்மை குறைக்கப் படுகிறது என நினைக்கிறேன்.

எப்படிக் குளிக்க வேண்டும்?
“நல்லா நிறையத் தண்ணிய மோந்து ஊத்தித்தான்”

”இல்லீங்க, ஒரு லிட்டெர் குவளையும் 20 லிட்டெர் வாளித்தண்ணியும் போதுங்க”

குவளையில் தண்ணீர் முகந்து, தலை வழியாக மெதுவாக ஊற்றவும். சுமார் 40-60 செகண்ட் வரை எடுத்துக் கொள்ளவும். காலில் வந்து விழும்போது சுடுவதை உணர்வீர்கள். ஏன் மெதுவாக? Because water is a bad conducor of heat. And therefore we have to give it some time to absorb the heat. தண்ணீர் ஒரு சுமாரான வெப்பம் கடத்தி. ஆகவே நம் உடம்போடு சிறிது நேரமாவது ஒட்டியிருந்தால்தான் அதனால் வெப்பத்தைக் கடத்த முடியும்.

Specific heat capacity of water is 4200 J/kg/0C. அதாவது ஒரு குவளைத் தண்ணீர் (1 லிட்டர் = ஒரு கிலோ)  நம் உடம்பிலிருந்து உஷ்ணத்தை ஒரு டிக்ரீ செல்ஸியஸ் அளவிற்குக் குறைக்க 4200J வெப்ப சக்தியை எடுத்துச் செல்கிறது. ஆக நிறையத்தான் வெப்பத்தைக் கடத்துகிறது. ஆனால் சுமாரான வெப்பம் கடத்தி என்பதால் மெதுவாக ஊற்ற வேண்டும்.

நல்லாக் குளிங்க! !

மூச்சை நிறுத்துங்க?

யோகாவில் ”மூச்சை இழுத்து, நிறுத்தி, மெதுவாக வெளியேற்றி, நிறுத்தி, பின் மூச்சை . . . “ என்று சொல்லிக் கொடுப்பார்கள். உடற்பயிற்ச்சிகளையும் “ காலை மெதுவாகத்  தூக்கி, நிறுத்தி, பின் மெதுவாக கீழே இறக்கி, நிறுத்தி . . .” என்பார்கள். அது எதுக்கு நிறுத்தி நிறுத்தி?

பேருந்தில் அமர்ந்திருக்கும்போது, ஓட்டுனர் ப்ரேக்கை அழுத்தும்போது, நம் உடம்பு தானாக முன்னே போவதை உணர்வீர்கள். அதுதான் inertia என்பது. Inertia is the tendency of a body to coninue to do what it is doing. Resting body continues to be at rest and the moving body continues to move unless acted upon by external forces..  

நீங்கள் மூச்சை உள்ளே இழுத்து நிறுத்தும்போது காற்றானது அலைஅலையாய் சில வினாடிகள் உள்ளே செல்வதை உணரலாம். அதன் பின் நுரையீரலில் அல்வியோலஸ் செல்கள் பிராணவாயுவை உறிஞ்சும். மாறாக காற்றை உள்ளே இழுத்து உடனே வெளியே விட்டால் பிராணவாயு உறிஞ்சப் படுவதில்லை. நீங்கள் அதற்காண கால அவகாசம் கொடுக்கவில்லை.

வாழ்க ஆரோக்கியத்துடன்!


Monday, March 16, 2015

47. டுபெய்? துபாய்? மணல் நகரம்? 1

டுபெய்? துபாய்? மணல் நகரம்?





அண்மையில் திரு பிச்சப்பன், திருமதி வள்ளியம்மையின் அழைப்பின் பேரில் துபாய்க்கு 15 நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டோம். விருந்தோம்பலின் அடையாளம், அவர்கள்.


திரு சபா மெய்யப்பன், திருமதி சீதாலெஷ்மி அவர்களின் அழைப்பின் பேரில் Legacy International நடத்தும் வகுப்பைப் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. திரு சபா மெய்யப்பன், திரு குணா ஆகியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது. திரு ரவீந்திரன், திருமதி தேனம்மை, திருமதி தேன்மொழி திரு சோலை ஆகியோர்கள் குழந்தைகளை வழி நடத்துகிறார்கள். பொது மேடைகளில் பேசுவது, குழுக்களில் பங்கேற்பது, நிர்வகிப்பது, ஆளுமை, உடல் மொழி, ஒவ்வொருவரின் தனித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்வது எப்படி என்று தனிதனியாகச் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்தேன். ஐந்தாம் வகுப்பு முதல் 10வது வரை படிக்கும் குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகள்தான் ஆனாலும் என்ன ஆர்வம்? அதை விட அவர்கள் பயன்படுத்திய புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். கிட்டத்தட்ட 10 வருடங்கள் சென்று எனக்குள் இருந்த ஆசிரியரை மேம்படுத்தி வெளிக்கொணர்ந்தது.

குழந்தைகளுக்கு உதவும்படியான சில தகவல்களைக் கூறும்படி கேட்டுக் கொண்டனர். முதலில் நான் முன்பே வலைத்தளத்தில் எழுதியபடி chemistryயில் Cl, Cl-, Cl2 ஆகியவற்றை எப்படிப் வாசிப்பது போன்றவற்றைக் குறித்துப் பேசினேன். வலைத்தளத்தில் காண்க. summavinmama-rama.blogspot.com

அடுத்து ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி என்பது குறித்து தெரிவித்தேன்.

நினைவாற்றலை நம்மை அறியாமலேயே, சிரமமில்லாமல், பொழுதுபோக்காக மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் கூறினேன்.

புத்தகத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
1.   ஆசிரியர். எத்தனை வருடங்களாக எழுதி வருகிறார்?. எத்தனை புத்தகங்கள் எழுதி உள்ளார்? (கடைசி/பின் அட்டையில் இருக்கலாம்) எழுத்து நடை சுலபமானதா? ஆர்வத்தைத் தூண்டக்கூடியதா? எனப் பார்க்க வேண்டும்.
2.   சமீபத்திய வருடத்தில் பதிப்பிக்கப்பட்டதா?
3.   எத்தனை மறு பதிப்புகள் வந்திருக்கின்றன?
4.   எத்தனை திருத்தப்பட்ட பதிப்புகள் வந்திருக்கின்றன?
5.   முன்னுரையைப் படித்துப் பார்க்க வேண்டும். ஆசிரியரைப்பற்றி நன்கு தெரிந்த ஒருவர் இதை எழுதி இருப்பார். மேலே எண் 1 ல் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
6.   அணிந்துரை, புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் இருக்கும்.
7.   என்னுரையில் ஆசிரியர் அவரின் அனுபவத்தையும் நூல் எழுதியதின் நோக்கத்தையும் தெரிவித்திருப்பார்.
8.   பொருளடக்கம் உங்களுக்கு வேண்டியது புத்தகத்தினுள்ளே இருக்கிறதா என்று தெரிவிக்கும். அட்டவணை / index இருந்தால் இன்னும் நல்லது. தெரியாத ஒரு தலைப்பை எடுத்து எழுத்து நடை உங்களுக்குப் புரிகிறாற்போல இருக்கிறதா என படித்துப் பார்க்கலாம்.
9.   படங்களும் அட்டவணைகளும் நிறைந்திருக்க வேண்டும். 100 வார்த்தைகள் சொல்லக்கூடியவற்றை ஒரு படம் சொல்லிவிடும். மேலும் நன்கு நினைவிலும் நிற்கும்.
10.  பாடத்தின் இறுதியில் கேட்கப் பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதன் கீழேயே விடை கொடுக்கப்ப்பட்டிருக்கக் கூடாது. விடைகள் கடைசிப் பக்கத்தில் இருக்க வேண்டும்.

நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்வது எப்படி?

ஒரு தலைப்பைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதும், புரிந்து கொண்டிருப்பதும், நினைவில் வைத்திருப்பது என்பதும் வெவ்வேறான விஷயங்களாகும்!‼ ஒரு தடவை படித்ததும் தெரிந்த மாதிரி இருக்கும்! இரண்டு மூன்று தடவை படித்ததும் புரிந்த மாதிரி இருக்கும் புரிய வேண்டிய முறையில் புரிந்ததா என்பது application கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்கும்போதுதான் தெரியும்! நினைவில் நின்றதா என்பது தேர்வின்போது நீங்கள் விடை எழுதிக் கொண்டிருக்கும்போதுதான் தெரியும். Too late. இவற்றில் உங்கள் தகுதி நிலை எங்கே இருக்கிறது என்பதை இப்போதே தெரிந்து கொள்வது நல்லது.

பேருந்தில் அமர்ந்திருக்கும்போது தெரிந்த ஒருவரைப் பார்க்கிறோம். அவர் பெயர் நினைவிற்கு வரவில்லை. பேருந்தை விட்டு இறங்கி சிறிது நேரம் சென்று அவர் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது நமது மூளை ஒரு தகவலை மீட்டுக்கொண்டு வர சிறிது அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டது என்று அர்த்தம். மறக்கவில்லை. இந்த time of recall சுருக்க என்ன செய்யலாம்?

நமது உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பயிற்சி தேவைப்படுவது போல மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும் பயிற்சி தேவைப் படுகிறது.

1.   உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்
2.   படிக்கும்பொழுது புத்தகத்தைப் பார்த்து, வாய்விட்டுப் படித்து, எழுதிப் பார்க்கவும். எந்த டி வி சீரியலும் உங்கள் கவனத்தைச் சிதறடிக்க முடியாது. இப்படிச் செய்யும்பொழுது ஒரு தகவலுடனான உங்கள் தொடர்பு நேரம் நீட்டிக்கப்படுகிறது.
3.   குறுக்கெழுத்துப்போட்டி, புதிர்கள், சுடோகு முதலியவற்றை செய்து பாருங்கள். முதலில் சிரமமாக இருந்தாலும் போகப்போக நீங்கள் இவை சுலபமாக வருவதைக் காண்பீர்கள். ஆரம்பத்தில் மற்றவர்களின் உதவியுடன் செய்து பழகுங்கள். நினைவு மீட்டல் சக்தி கூடிக்கொண்டே போகும். நேரம் குறைந்து கொண்டே வரும்!
4.   விஜய் டிவி யில் ’Connexion’, குமுதத்தில்ஆறு வித்தியாசங்கள்’, WhatsApp ல் வரும் emoticons ஆகக் கொடுக்கப்பட்டுள்ள ஊரப் பெயர்கள், சினிமாப் பாடல்கள், படப் பெயர்கள் ஆகியவற்றைக் கண்டு பிடியுங்கள்.

உங்களை அறியாமலேயே, பொழுதுபோக்காக ஆரம்பித்து, வலி தெரியாமல், உங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்து உங்கள் நினைவாற்றல் பெருகுவதைக் காணலாம். வாழ்க, வளர்க.

மேலும் விபரங்களுக்கு: