Chemistry, a mystery for many‼
வேதியியல் ஒரு புதிரா‼ புதிரல்ல! கற்கும் முறை சரியில்லை.
இமயமலை என்ற உடன் ^ கோபுரம் போன்ற தோற்றமும் பனியும்தான் ஞாபகத்திற்கு வரும். அதுபோல CuSO4 என்ற உடன் சி யூ எஸ் ஓ ஃபோர் என்று படிக்காமல் காப்பர் ஸல்ஃபேட் , “ஊதாஆ கலரு” கிறிஸ்டல் என்று ஞாபகத்திற்கு வர வேண்டும்! அப்போதுதான் வேதியியல் ”புரிய வேண்டிய முறையில்” புரிந்திருக்கிறது என்று அர்த்தம். அப்படிப் புரிய என்ன செய்ய வேண்டும்?
ஒரு மொழியைப் படிக்க ஆரம்பிக்கும்போது எழுத்து, வார்த்தைகள், வாக்கியங்கள் என்று படிப்பது போல வேதியியலைப் (chemistry} படிக்க ஆரம்பிக்கும்போது குறி, சூத்திரம், சமன்பாடு (symbols, formula, equations) என்று மனனம் செய்ய வேண்டும். அதேபோல 3Rs of Chemistry, அதாவது வாசிப்பது, எழுதுவது, கணக்குகள் போடுவது என்று முறையாக அவசரமில்லாமல் படிக்க வேண்டும். இவை நன்கு தெரிந்த பின்தான் மற்ற
chaptersக்குப் போக வேண்டும்.
டாக்டர் அறிவொளி ஒரு கதை சொல்வார். ”ஒரு மாதிரியானதெல்லாம் ஒரு மாதிரி தானே தவிர ஒரே மாதிரியல்ல”. மனநல மருத்துவ மனையில் ஒரு அறையில் அடைக்கப் பட்டிருந்த ஒருவர் ”லைலா, லைலா” என்று கத்திக் கொண்டிருந்தார்.
வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர் “இவர் ஏன் இப்படிக் கத்திக் கொண்டிருக்கிறார்” என்று கேட்டார். அதற்கு அங்கிருந்த காப்பாளர் “இவர் லைலாவைக் காதலித்து இப்படி ஆயிட்டார்” என்கிறார். சில அறைகள் தாண்டி மறுபடி ஒருவர் அதே போல லைலா லைலா என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே பார்வையளர் காப்பாளரிடம் “எனக்குத் தெரியும். இவரும் லைலாவைக் காதலித்துத்தான் இப்படி ஆயிட்டார்” என்றார். காப்பாளர் “இல்லீங்க இவர் லைலாவைக் கலியாணம் பண்ணித்தான் இப்படி ஆயிட்டார்” என்றாரே பார்க்கலாம்!
பெரும்பாலான மாணவர்கள் CI, Cl- , Cl2
எல்லாவற்றையும் குளோரீன் என்றே வாசிப்பார்கள்.
எல்லாமே ’ஒரு மாதிரியாக இருந்தாலும் ஒரே மாதிரியல்ல’!
CI chlorine atom அனு
Cl- chloride ion அயனி
Cl2 chlorine
molecule மூலக்கூறு
இவைகளின் வேதிவினைகள், (reactions) வெவ்வேறானவை. ஆகவே தவறாக வாசித்தால் அவைகளின் reactions யையும் தவறாகத்தான் புரிந்து கொள்வார்கள். ஒரு மாதிரியானதெல்லாம் ஒரே மாதிரியல்ல !
ஆக கால தாமதம் ஆனாலும்
symbols, formula, equations ஆகியவற்றை நன்கு மனனம் செய்யாமல், அடுத்தடுத்த chapters ஐ ஆசிரியர் நடத்திக்கொண்டு செல்வதும் தவறு. மாணவர்கள் அப்படிப் படிப்பதும் தவறு. நல்ல அஸ்திவாரம் இல்லாமல் மேலேமேலே கட்டிக் கொண்டு சென்றால் என்னவாகும்?
Chemistry is observation,
Physics is aaccuracy!?