Labels

Saturday, February 8, 2014

45. yoga vil ’நடுவில கொஞ்சம் தகவலைக் காணோம்’ !

ஆஹா யோகா’ 

ஒரு பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கிறீர்கள். பல வாகனங்கள் உங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. திடீரென்று ஒரு கன ரக வாகனம் ஃபுல் லோடு ஏற்றிக் கொண்டு செல்கிறது. உங்கள் இதயம் அதிர்வது போன்று உணர்கிறீர்கள். ஏன்?

பஸ்ஸில் அமர்ந்திருக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பஸ் செல்லும்போது பஸ் பாடி, ஜன்னல்கள் அதிர்வதைப் பார்க்கிறீர்கள், அல்லது உண்ர்கிறீர்கள். அதற்குக் குறைவான வேகத்திலோ அல்லது நன்கு வேகமாகப் போகும்போதோ அப்படிப்பட்ட அதிர்வை உணர்வதில்லை! ஏன்?

பத்தாம் வகுப்பில் இயற்பியலில் படித்துப் புரிந்து கொண்டிருக்க வேண்டிய ஒத்ததிர்வு அல்லது ‘resonace’ எனப்படுவதாகும் அது!

யோகாவிற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

எந்த ஒரு அலைபோல் அதிர்வுறும் பொருளும் மேலும் கீழும் அசையும் போது, இடம் பெயர்ந்து, ஒரு நிலையான மைய்யப் புள்ளியை நோக்கியே மீண்டும் மீண்டும் வரும். அந்த இடப் பெயர்ச்சியின் அளவிற்கு வீச்சு அல்லது amplitude என்று பெயர்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இயற்கையானஇயல் அதிர்வெண்’ (natural frequency) உண்டு. அந்த frequency யில் அது அதிர்வுறும் பொழுது அதன் வீச்சு பெருமமாக, maximum amplitude இருக்கும்.

ஒரு பொருளின் மீது அதிர்வுகளை செயற்கையாகத் (driver frequency) திணிக்கும்போது திணிப்பதிர்வெண் எண்ணிக்கையிலேயே அதிர்வடையும். ஆனால் வீச்சு பெருமமாக இருக்காது.

புறத்திலிருந்து வரும் விசை அதிர்வெண் (driver frequency) ஒரு பொருளின் இயல் அதிர்வெண்ணுக்கு ’natural frequency’ சமமாக இருப்பின், அப்பொருள் அதிக பட்ச வீச்சைப் பெறும். புறவிசையின் அதிர்வு எண்ணிக்கை இயற்கை/இயல் அதிர்வெண்ணுக்குக் கூட இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஒரு பொருள் அதே frequencyயில் அதிர்வுறும்; ஆனால் வீச்சு பெருமமாக இருக்காது.

Every object has a natural frequency, at which it vibrates with maximum amplitude. Even otherwise it vibrates, but not with maximum amplitude. When a driver frequency from outside forces upon an object to let it vibrate with the same frequency as the natural frequency of the object, it vibrates with maximum amplitue and hence the vibrations of the object can be felt or seen. 

When the fully loaded container lorry passes by you, and if the speed of the engine is same as the the natural frequency of your heart, about 3 Hz , then it lets your heart vibrate with maximum amplitude and you can feel your heart thumping

When the bus engine speed is the same as the natural frequency of the bus body, the bus body vibrates with maximum amplitude and you can feel it.

சப்தமும் யோகாவும்
மேலே குறிப்பிட்ட ஒத்ததிர்வுதான் யோகா பயிற்சியின்போது எழுப்பப்படும் ஆ,ஊ.ம் (a u m) aum எனும் ஓசையின் அடிப்படை.
’ எனும் சப்தம் கீழ் வயிற்றின் இயல் அதிர்வெண்ணுடன் ஒத்திருப்பதால் அந்தப் பகுதியில் வீச்சு/அதிர்வு பெருமமாக
ஏற்பட்டு இரத்த ஓட்டத்தை அதிகமாக்கும். இரத்த ஓட்டம்தான் கழிவுகளை நீக்குவது. இதே போன்றுதான் ‘ஊ’ எனும் சப்தம் நெஞ்சுப்பகுதியிலும், ‘ம்’ எனும் சப்தம் தலைப் பகுதியிலும் அதிர்வுகளை உண்டாக்கி வீச்சை அதிகப்படுத்தி உறுப்புகளின் செயல் பாடுகளை மேம்படுத்துகின்றது.

மூச்சும் யோகாவும்
நுரையீரலின் சாதாரண அளவு சுமார் 3000 cm சிரமப்பட்டு வேகமாக மூச்சை இழுத்தால் 6000 cm3 வரை கொள்ளும். அதேபோல் சிரமப்பட்டு வேகமாக மூச்சை வெளியேற்றினால் மீதம் 1000 cm3 தான் கொள்ளும்சாதாரணமாக மூச்சை வெளியேற்றினால் 1200 cm3 காற்று உள்ளே மீதம் இருக்கும். இதற்கு ‘residual air’ என்று பெயர். சாதாரணமாக ஒவ்வொரு முறை மூச்சை இழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் 500 cm3 காற்றுதான் பரிமாற்றம் ஆகும். இதற்கு ‘tidal air’ என்று பெயர்.


கபாலபதி செய்யும்போது residual air ஐயும் வேளியேற்றுவீர்கள். அதாவது எப்பொதும் உள்ளேயே இருக்கும் 1200 cm3  காற்றையும் மாற்றுகிறீர்கள். இது அதிக பிராண வாயுவைத் தருகிறது. தங்கிப் போன காற்றின் துர் நாற்றத்தையும் அகற்றுகிறது. மேலும் கபாலபதி தலைக்கு உள்ள இரத்த ஓட்டத்தை அதிகப் படுத்தும். மைக்ரேய்ன் ‘migraine’ உள்ளவர்கள் பலர் குணமடைந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால் மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்கள் அவர்களது குடும்ப மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் ’ கபாலபதி’ செய்யவே கூடாது.

யோகா செய்ய உட்காரும்போதுதான் பலர் நமக்கு இழைத்த அநீதிகளெல்லாம் ஞாபகத்திற்கு வரும்! அதனால்தானோ என்னவோ யோகா ஆசிரியர்கள் எல்லாம் ஒவ்வொரு நிலையைச் செய்யும்போதும் ‘உறுப்பின் மீது கவனம்’, ’எண்ணிக்கையில் கவனம்’ என்று சொல்வர்

நமது நுரையீரலின் கொள் அளவை அறிந்து கொள்ளவும் மேம்படுத்தவும் கீழ்கண்ட ஸ்பிரோமீட்டரைப் பயன்படுத்திப் பார்க்கலாம்

Photo of spirometer



யோகா கற்றுக் கொள்ளும்போது நீங்கள் ஆசிரியரிடம் கேட்டு எடுத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள்
  1. 1.   நிலை
  2. 2.   செய்முறை
  3. 3.   கவனம் செலுத்த வேண்டிய இடம்
  4. 4.   பயிற்சிக் குறிப்பு
  5. 5.   நடைக் குறிப்பு
  6. 6.   பயன்கள்


யோகா செய்வதன் மூலம் சிறிது பிராண வாயுவை ‘oxygen’ நம் நம் உடலில் சேமித்து வைத்துக் கொள்கிறோம். மற்ற உடற்பயிற்சிகளில் ஆக்ஸிஜனை உபயோகப்படுத்துகிறோம். மேலும் மனப் பயிற்சியும் (பக்குவமும்) உணவுப் பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்கிறோம்.

Knowledge is wealth. But imparting  does not reduce it
கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் கல்வி ஒன்றே
Roots of Education are Bitter but the Fruit is sweet
கல்வியின் வேர்கள் கசப்பானவை, கனிகளோ இனிப்பானவை
Learn through others experience.......you stay young!                                                              
வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்

Life's treasures are people .................. together!
வாழ்க்கையின் பொக்கிஷமே மக்கள்தான்……….இயை(ணை)ந்து வாழும்போது!