நீங்கள் நாணயம் சேகரிப்பவரா? முதலில் இதைத்
தெரிந்துகொள்ளுங்கள்! நம்முடைய அறியாமை
வியாபாரிகளுக்கு நன்மை. அவர்களின் நா வண்மை
நமக்குப் போட்ட வலை. அதேசமயம், விபரம் தெரிந்தவர்கள் சிலர் சும்மா வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும்
நியாயமானதே. இப்போது சில விஷயங்களைப் பார்க்கலாமா ?
· Rare,
· scarce,
· error
எனும் வார்த்தைகளால்தான் நம்மை இந்த வியாபாரிகள்
தூண்டில் போட்டு சுண்டியிழுப்பர்.
நாணயச்சாலைகளில் குறைவான அளவில் அச்சடித்திருந்தால்
கிடைப்பது அரிதாக இருக்கும். இவற்றை ‘scarce’ எனலாம். சென்னையில் பெட்டிக்கடைகளில்கூட
சாதாரனமாகக் கிடைப்பது கைமுறுக்கு. ஆனால், டில்லியில் ?! மும்பையில் ரோட்டுக்கு ரோடு “வடா பாவ்”; நியூ யார்க்கில் கிடைப்பதில்லை. ஆக scarce என்பது ஒரு ஒப்பீடல் (relative
term) ஆகிவிட்டது. எனவே, ஏற்கனவே நடந்த ஏலங்களில் எத்தனை முறை ஏலத்திற்கு வந்திருக்கிறது, பிரபலமான Krauss
Catalogueபோன்றவற்றில்
என்ன கூறப்பட்டிருக்கிறது, கண்காட்சிகளில் வேர்கடலைபோல வெள்ளமாகக் கொட்டிக் குவித்து வைத்திருக்கிறார்களா, எல்லா ஊர்களிலும் நிறையக் கிடைக்கிறதா, நாணயச் சாலைகளில் மொத்தம் எத்தனை அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்ற ஐந்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, ”ரேர்”; Rare என்பதும் scarceதான். ஆனால் காசுகளின் மேலுள்ள வடிவம் அல்லது “பேட்டர்ன்” (elephant looked like a pig in
George V coins) legend (bharath printed as marath in some coins) அபூர்வமானவைகளாக இருக்கும். அடிக்கடி பார்க்காதவைகளாக இருக்கும்.
இனி “எரர்”; அச்சடிக்கும்பொழுது சில
சமயங்களில் ஒரு பக்கம் அச்சு விழாமலிருக்கலாம் அல்லது அச்சு தள்ளி விழுந்திருக்கலாம். இவற்றை error என்கிறோம்.
இவற்றை ஒரு ஆல்பத்தில் எப்படி அடுக்குவது ? : கால அடிப்படையில்
வரிசைக்கிரமமாக, தேதிவாரியாக, (periods) அல்லது அடுத்தடுத்து அடுக்குகளாக (series), அல்லது மதிப்பு
வாரியாக (denominations) அடுக்கலாம்.
இத்துறை சம்பந்தப்பட்ட
இன்னும் சில வார்த்தைகள்:
· செர்டிஃபைட் காயின் : Certified
coin = சான்றிடப்பட்ட நாணயம்
· டை வெரைட்டி : Die
variety = பலவகையான
வார்ப்புருவுக்கான படிவம், படிவ அச்சு
· மிண்ட் : Mint
= நாணயச் சாலை
· மிண்ட் வெப்சைட் : Mint
websites = இணைய தளம், வலைத் தளம்
· க்ரேட் : Grade
= தரம் பிரித்தல்
· லோ மிண்டேஜ் : Low
mintage = குறைவான அளவில்
அச்சடித்திருத்தல்.
· ஃபேக் : Fake
= போலி
· டெஃபெனிடிவ் சீரீஸ் : Definitive
series = வழக்கமான (நிலையான)
வரிசை
· கமெமொரேட்டிவ் சரீஸ் : Commomerative
series = நினைவாக வெளியிட்ட
வரிசை
மேலும் விவரங்களுக்கு :
இணையதளங்கள்:
வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
http://indiacoincollections.blogspot.comhttp://indiansvisitingamerica.blogspot.com