Labels

Thursday, July 26, 2012

34. கெட் ரெடி ! ! தயாராகுக Get ready 4 Europe Tour








Buy the following in India before your trip. கீழ்க்கண்டவற்றை இந்தியாவிலேயே வாங்கிச் செல்லவும். விலை மலிவு. அங்கே தேடி அலைந்து வாங்குவதற்குள் விரைத்து விடுவோம்! அதற்கான நேரமும் உங்கள் சுற்றுலா நடத்துனர் தரப் போவதில்லை

1.   Small locks சூட்கேஸ்களுக்குத் தேவையான சிறிய பூட்டுகள்

2.   Hand weighing scale. ஸ்பிரிங் பாலன்ஸ்

3.   Fruit knife பழம் நறுக்கும் கத்தி

4.   Muffler கழுத்துக்கு உல்லன் துப்பட்டா

5.   Monkey cap உல்லன் குரங்குக் குல்லாய்

6.   Inner , Thermal wear உடம்புச்சூட்டை உள்ளேயே வைத்திருக்கும், சேலை மட்டும்  கட்டும் பெண்களுக்கு அவசியம்.

7.   Jeans ஜீன்ஸ், சலவைக் கூலி கொடுப்பதற்குப் பதிலாக ஒரு செட் ஆடையையே வாங்கி விடலாம்.

8.   Shawl பெண்களுக்கு

9.   Scarf பெண்களுக்கு

10.  Sweater லேசான ஸ்வெட்டெர்

11.  Gloves சாதாரண கையுறையே போதும்

12.  Cd containing movies, songs, titbits, jokes, puzzles சொகுசுப் பஸ்ஸில் செல்லும்போது பொழுது போக்க உங்கள் பங்களிப்பிற்கு.

13.  Spects ஸ்பேர் மூக்குக் கண்ணாடி

14.  Chargers ஃபோன், காமெரா, எம் பி 3, லாப்டாப் பாட்டெரிகளுக்கு சார்ஜர்

15.  Adaptors (see the pictures of electrical sockets in UK and in Europe) பிளக் பாயிண்டுகள் இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் வெவ்வேறானவை. இந்திய 2 பின், 3 பின் ப்ளக்குகளை அங்கு மாட்ட முடியாது. ஹோட்டலில் 10 யூரோ டெப்பாஸிட் கட்டி அடாப்டர்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டால் அதன் விலை உங்களுக்கு 720 ரூபாய் ஆகிவிடும். அதற்கு, இந்தியாவிலேயே international travel adapter என்று கேட்டு வாங்கிச் செல்லலாம். அல்லது ஃபோட்டோவில் இருப்பது போன்ற பிளக்குகள் இருந்தால் அவற்றை உபயோகப்படுத்தலாம்.

16.  Medicine  எப்போதும் உபயோகப்படுத்தும் மருந்துகளுடன் தலைவலி மாத்திரைகள் போன்றவையும்

17.  Sunglasses அவசியம் தேவை. பனிமலைச் சிகரங்களில் பயங்கரமாகக் கண் கூசும்.

18.  Umbrella திடீரென்று மழை வரும், குறிப்பாக இத்தாலியில்.

19.  Walking shoes, for ladies also. நைக்கி ரீபோக் வாக்கிங் ஷூஸ் வாங்கவும். நிறைய நடக்க வேண்டியதிருக்கும். ஆனால் குளிர் பிரதேசங்கள் ஆனதால் நடப்பதில் சிரமம் தெரியாது, நல்ல ஷூஸ் போட்டிருந்தால். பெண்களுக்கும் வாங்க வேண்டியதுதான்

20.  Lip balm சுவிட்சர்லாந்தில் உதடு வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. 0 டிக்ரீ ஸெல்ஸியஸ்

21.  Buy 2 Suitcases with wheels and strong handles!  கைப்பிடி வலுவானதாக இருக்கட்டும். Checking in, 30 kg, and a hand luggage, 7 kg.

Do not be lazy to carry any of them. You may encounter severe health problems. Temperaure 8-18*C

வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்


http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com
http://indiacoincollections.blogspot.com

Friday, July 20, 2012

33. யூரோப் டூர் 4, Europe Tour 4 – On your Marks






ஆன் யுவர் மார்க்ஸ்.

பாங்க் பாலன்ஸ் ரெடி பண்ணியாயிற்று. அட்வான்ஸ் விஸா பேமெண்ட் கட்டியாயிற்று. மற்ற டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணியாயிற்று. சுமார் 15 நாட்கள் ஆயிற்று. முதலில் UK விஸாவிற்கு பாரங்களை டிராவெல் ஏஜெண்ட்ஸ் தயார் செய்து நம் கையெழுத்தை வாங்கி அனுப்பி வைப்பார்கள். பெரும்பாலும் விஸா நிச்சயமாகக் கிடைப்பதற்குத் தோதாக இவர்களே எல்லாவற்றையும் நம்மிடம் கேட்டு வாங்கி அனுப்புவதால் விஸா கிடைத்துவிடும். நாம் கையெழுத்திட்டு கொடுத்த 15 நாட்களுக்குள் VFSல் இன்டெர்வியூவிற்கான தேதி ஆன்லைனில் கிடைத்து விடும். எல்லாம் சரியாகச் செய்து தந்துவிடுவதால் இன்டெர்வியூவில் கேள்விகளுக்கு இடமில்லை. பிறகு 10 நாட்களில் விசா கிடைத்து விடும்

UK visa கிடைத்த பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கானஷென்ஜென்விசாவிற்கு டிராவெல் ஏஜெண்ட்ஸ் தயார் செய்து மும்பைக்கு அனுப்ப வேண்டும் அது இன்னும் 20 நாட்களுக்கு மேல் ஆகலாம். ஆக பயணம் செய்யும் தேதிக்கு 80 நாட்கள் முன்னதாக நீங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் passport with schegen visa ஏர்போர்ட்டில் இருக்கும்பொது கூட கிடைக்கலாம்



(Foreign exchange வாங்குவதற்கு பாஸ்போர்ட் ஜெராக்ஸ் கையில் வைத்துக் கொள்ளவும். விசா விபரத்தை டிராவெல் ஏஜெண்ட்ஸ் கூட கொடுத்துக் கொள்ளலாம்.) Basic Travel Quota BTQ allowed, cash US $ 3000, Travellers cheque and travellers card US$ 7000. Buy mostly Euro (700) and some Pound (100) , Franc(150) and some US$ (100). Tipping: Euro 2 per person per day. 

Thursday, July 12, 2012

32. ஐரோப்பாவில் காஃபி, Coffee in Europe,







இந்தியாவில் விளையும் காப்பிச் செடிகள் இரு வகைப் படும்; அராபிக்காvum ரோபஸ்ட்டாvum. அராபிக்கா இன்ஸ்டண்ட் காஃபிக்கும் ரோபஸ்ட்டா மற்ற டிக்கா(க்)ஷன் வகையறாவுக்கும் உபயோகப்படுகிறது.

பாரீஸில் மியூசியத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் 7 யூரோ (500 ரூ )கொடுத்து 4 எஸ்ப்ரெஸ்ஸோ ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். 50 மிலி ஐஸ் கிரீம் கப்புகள் 4 தந்தாள். ட்ரேயை வாங்கிகொண்டு பெரிய கப்பு, சீனி, பால் எல்லாம் தருவாள் என்று காத்திருந்தேன். ஆனால் அந்தப் பெண்ஓகே நெக்ஸ்ட்என்றாள்ஒன்றும் புரியவில்லை. எடுத்துக் கொண்டு போய் மற்றவர்கள் உட்கார்ந்திருந்த டேபிளில் வைத்து விட்டு உட்கார்ந்தேன். எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக, ஒரே மாதிரி பார்த்தார்கள்? என் மனைவிகாப்பி எங்கேஎன்றாள். ”உள்ளே பாருஎன்றேன். பால்? என்று கேட்டார்கள். நான் மறுபடி கவுண்டரில் போய் பால் கேட்டபோது 50 ஸெண்ட்ஸ் என்றாள். பிறகு பாலைத் தந்து விட்டு பணம் வேண்டாமென்று விட்டாள். என்னைப் பார்க்க பாவமாயிருந்திருக்கும்போல?

டாக்டரின் கொழுந்தியாள், லண்டனில் வசிப்பவர்  “ நீங்க கப்புச்சினோ என்று கேட்டிருக்க வேண்டும்என்றார்.

ஐரோப்பாவில் காஃபியின் வகை எத்தனையோ எஸ்ப்ரெஸ்ஸோ, கப்புச்சினோ, லாட், மோக்கா இன்னும் உண்டு. எல்லாமே மெஷினில் கொதிக்க வைத்து உடன் காஃபி பால் எல்லாமே ஸ்டீமில் நல்ல பிரஷருடன் மிக்ஸ் ஆகி வரும்.

எஸ்ப்ரஸ்ஸோ, (espresso): 6 கிராம் அளவு வறுத்த ரோபஸ்ட்டா பவுடர் சுமார் 50 மிலி வெந்நீரில் பிரஷரில் குழம்பாகி கெட்டியாக ஸ்ட்ராங்காக மெஷினில் வரும். மேலே பிரவுன் கலரில் ஃபோம் வரும். சீனி இருக்கும். இந்த மாதிரி  சைஸ்ல கப் நீங்க எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க. அமெரிக்கா கப்பு டாப்புன்னா யூரோப் கப்பு ட்ராப்புதான்! விலை சுமார் 1.75 யூரோ, 125 ரூபாய்தான்! அமெரிக்கா கப்புல காப்பி குடிசே களைச்சுருவம். யூரோப்ல (எஸ்ப்ரெஸ்ஸோ) கப்புதான் 50 mm,  கீர்த்தியோ பெரிது! துளி துளியாகத்தான் குடிக்க வேண்டும். (no milk)

கப்புச்சினோ, (cappuccino) = எஸ்ப்ரெஸ்ஸோ + பால் ஆவி? (steamed milk) + நுரை (foam) எல்லாம் சம அளவில் கலந்தது.

ஸுரிச்சில் ஒருவர் கப்புச்சினோ என்று டோக்கன் வாங்கிவிட்டு காஃபி கவுண்டரில்ஒன்லி காஃபிஎன்று கேட்டு வாங்கி, பாலை அவர் வாங்கி ஊற்றிக் கொண்டார். சீனி அல்லது ஸாச்சரின் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். அதுதான் நம்ம காஃபி.

மோக்கா, (mocha) = எஸ்ப்ரெஸ்ஸோ + சாக்லேட் பால் ஆவி?!

லாட், (latte) = எஸ்ப்ரெஸ்ஸோ + நிறைய பால் ஆவி

நரசுஸ்  3 இன் 1 காஃபி 3 ரூபாய்தான். நல்ல ஃப்ளாஸ்க்கில் ஹோட்டல் ரெஸ்டாரண்டில் வெந்நீர் வாங்கி எடுத்துச் செல்வது நல்லது. ஆஹா பேஷ் பேஷ்.

Thursday, July 5, 2012

31. யூரோப் டூர்2, சும்மா இருந்தால் விசா சுலபமா கிடைக்காது! Europe Tour2,






சும்மா இருந்தால் விசா சுலபமா கிடைக்காது!

US விசா sponsored விசா வாகச்சே இவ்வளவு சிரமங்கள் தெரியவில்லை
SOTC (Sindh Oriental Travel Company) was acquired by Kuoni Travels, Popular in Europe and with headquarters at Zurich. They are also owners of VFS Global, a company which helps in prcessing visas.

Marketing Persnnel கார்த்திக் நம்ம வீட்டுக்கு வந்து 42000 ரூபாய்க்கான செக்கையும் வாங்கிக்கொண்டு, ஒரு அக்ரீமெண்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்.  நாம் ஒரு வேளை போக வேண்டாமென்று நினைத்தால் பணம் திரும்பக் கிடைக்காது. எதற்கும் அக்ரீமெண்டை படித்து வைத்துக் கொள்வது நல்லது. ஃபாண்ட் சைஸ்தான் 8க்கும் கீழே! பாஸ்போர்ட் காப்பி ஒன்று கேட்பார்கள். பாஸ்போர்ட் குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடி ஆகக் கூடியதாக இருக்க வேண்டும்.

இரண்டு பேருக்கு, மொத்தம் சுமார் 3.5 லட்ச ரூபாயும் கைச் செலவுக்கு சுமார் 50,000 ரூபாயும் உங்கள் S.B. கணக்கில் காட்ட வேண்டும். ரொக்கப் பரிமாற்றங்கள் கூடாது என்று சொன்னார்கள். செக்தான், ஆனால் பினாமியாக இருக்கக் கூடாது. விளக்கங்கள் தேவை. அப்பத்தான் மியூச்சுவல் ஃப்ண்ட், ஷேர், போஸ்ட் ஆபீஸ், இன்ஸூரன்ஸ், நம்ம வயது! எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. ஷேர்ஸ் 10% நட்டத்தில் இருந்தது சில சுமாரான கம்பெனிகளும் இருந்தன. மேலும் மகன் “அப்பா ஊருக்கெல்லாம் கதை சொல்லிட்டு நமக்கு இப்பிடி வைச்சிட்டுப் போயிருக்காரே என்று சொல்லப்படாதில்லையா! அதனால எல்லாத்தையும் சப்ஜாடா வித்து செக்கை பாங்க்ல போட்டாச்சு. மியூச்சுவல் ஃப்ண்ட் எல்லாம் பத்திர வடிவில் இருந்ததால் பணம் வர நாளாகலாம். இருந்தாலும் redemption  க்கு அனுப்பி விட்டேன். Post Office Monthly Income Scheme எல்லாமே முடிவடையும் தருவாயில் இருந்ததால் அதையும் குளோஸ் செய்தாயிற்று. எல்லாரையும் இதைச் செய்யச் சொல்லவில்லை. என் வயதிற்கு இது சரி. அவ்வளவுதான். மீதி இருப்பதை பாங்கில் F.D. போட்டாயிற்று. 6 மாத S.B. கணக்கு அறிக்கை வேண்டும்

அடுத்து சொத்து பத்திரங்கள் வேண்டும். ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். தமிழில் இருந்தால் High Court ல் கொடுத்து மொழிபெயர்த்து நோட்டரியிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.
பாங்க் டெப்பாஸிட்டுகள், எல்.ஐ.சி சர்ட்டிபிகேட், மூன்று வருட இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன் ஆகியவையும் வேண்டும்.
எதையும் கொடுப்பதற்கு முன்னால் அவசியம் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளவும்.
பாஸ்போர்ட், விஸா, ட்ராவெல் இன்ஸூரென்ஸ், பெட்டிகள் ஆகியவற்றை உங்கள் மோபைலில் ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Yoga helps you to keep warm in cold countries esp. kapaalapathy.
FYI Yoga retains oxygen, Gym uses up oxygen.