Labels

Thursday, April 19, 2012

28. நினைவாற்றலை மேம்படுத்த, improve your memory 1


1.   அதிகாலையில் நம்மைச் சுற்றி கவனத்தைச் சிதறடிக்கும் நிகழ்ச்சிகள் இருக்காது. ஆகவே படிப்பில் கவன ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஞாபக சக்தியும் அதிகமாக இருக்கும்.
2.   வெண்டைக்காய், வல்லாரைக் கீரை, சோயா ஆகியவை ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
3.   எந்த ஒரு விஷயமுமே நாம் எவ்வளவு நேரம் அதனோடு தொடர்பில் இருக்கிறோமோ அந்த அளவிற்கு அவை நம் ஞாபகத்தில் இருக்கும், உதாரணமாக நம் பெயர், ஊர் முதலியவை. அப்படித் தொடர்பு நேரத்தைக் கூட்டத்தான் படிக்கும்போதே குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். மனதில் திருப்பி ஒருமுறை கொண்டு வந்து சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். எழுதிப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறோம்.
4.   படங்கள் வரைவது ஞாபக சக்தியைக் கூட்டும். நம் மூளையின் அதிகம் உபயோகப் படுத்தாத ஒரு பகுதி படங்களைச் சேமித்து வைக்கிறது.
5.   படிப்பவற்றை ஒரு chart, table, tree diagrams, mnemonics போன்று தயாரித்துப் படிப்பதும் ஞாபக சக்தியைக் கூட்டும். VIBGYOR - mnemonics
6.   நடந்த சம்பவங்களோடு அல்லது புத்தகத்திலுள்ள படத்துடன் பாடத்தை தொடர்பு வைத்திருப்பதும் நினைவுத் திறனை மேம்படுத்தும். இந்திய V உருவம், ஸ்ரீலங்கா தேங்காய் உருவம்.
7.   வாய்விட்டுப் படித்தால் சுற்றி நடப்பவை எவையும் காதில் விழாது. ஆகவே கவனச் சிதறல் இருக்காது
8.   படித்தவற்றை யாருக்கோ விளக்கிச் சொல்வது போல வாய் விட்டுச் சொல்லிப் பார்க்கும்போது, கோர்வையாக வராவிட்டால், மறந்து போனது என்ன என்று கண்டு பிடிக்கலாம். (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப் படாதீர்கள். மார்க் உங்களது!)
9.   மேற்கண்டபடி நன்றாகச் சொல்ல வந்தாலும், எழுதிப் பார்ப்பது நல்லது. ஏனென்றால் எழுதும்போதுதான் நீங்கள் எதில் குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்று தெரியும்.
10.  ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் கிரகிக்கும் சக்தி குறைவதால் சிறிது ஓய்வெடுக்க வேண்டும். மேலும் குறைந்தது 6 மணி நேரமாவது தூங்கினால்தான் மூளையும் உடம்பும் புத்துணர்ச்சி பெறும்.

11. குறுக்கெழுத்துபோட்டியும், சுடோக்கும், புதிர்களும் கற்கும் திறனையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் (அறிவுத்திறனை விட!).

Friday, April 6, 2012

27. எப்படி ஆவெரேஜ் செய்வது? Averaging in equities


ஒரு கம்பெனி ஷேரை அதிக பட்ச விலையில் வாங்கி விட்டோம். அதை ஆவெரேஜ் (average) செய்து விற்க நினைக்கிறோம். ஆவெரேஜ் செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன. 1. Number averaging 2. Cost averaging

  




Number Average

        Cost Average

# shares
price per share
         Total
               #
       shares
     price          per share
         Total
50
100
5000
50
100
5000
50
90
4500
56
90
5040
50
80
4000
63
80
5040
50
70
3500
71
70
4970
200

17000
240

20050
1
85

1
83.55



மார்க்கெட் ஏறும்போது Cost averaging படி(அதாவது ஒவ்வொரு தவணையும் ஒரே தொகைக்கு எத்தனை ஷேர் கிடைக்கிறதோ அதை வாங்குவது) 5 ரூபாய் லாபத்தை சீக்கிரம் அடையலாம். அதாவது 88.55 ரூபாய் வரும்போது விற்று விடலாம். எண்ணிக்கை யில் ஒரே மாதிரியாக ஆவெரேஜ் செய்திருந்தால் 90 ரூபாய் வர தாமதமாகும்