1. ’பன்முகத் தெரிவு’ வினாவை உருவாக்குவது எப்படி?
கேள்வியிலேயே குறிப்பிட்ட பொருளை நோக்கி கொண்டு செல்லும் கேள்விக்கு ’குறிக்கோளுடன் கூடிய கேள்விகள்’ (objective questions) என்று பெயர். அவற்றுள் ’பன்முகத் தெரிவு’ வினா’ (multiple choice question MCQ ) என்பது ஒரு வகை, நான்கு மாற்று விடைகளில் மிகவும் சரியான விடையை தேர்ந்து எடுப்பது.
இந்த வினாவை உருவாக்குவது எப்படி? முதலில் மாணவர்களுக்கு ’கோடிட்ட இடத்தை நிரப்புக’ என்று கேள்விகள் கொடுக்கப் படும். அதிலிருந்து சரியான விடை தவிர மிகவும் அதிகமான தடவைகளில் வந்துள்ள தவறான பதில்கள்தான் மாற்று விடைகளாக பயன் படுத்தப் படுகிறது. இதில் மாணவர்கள் எப்படிச் சிந்திப்பார்களோ அதே பாணியில் விடைகள் அமைந்திருப்பதால, அவர்கள் சரியென்று நினைத்து எதிர்பார்க்கும் தவறான விடைகளும் அங்கே இருக்கும். ஆதலால் பரீட்சை முடிந்தவுடன் எல்லா மாணவர்களும் மகிழ்ச்சியாய் இருப்பர், முடிவுகள் தெரியும் வரை!
எதிர்பார்க்கும் விடைகளைக் கண்டு ஏமாற வேண்டாம். விடையைத் தேர்ந்தெடுக்கும் முன் எல்லா மாற்று விடைகளையும் படித்துப் பார்க்கவும் ஏனென்றால் நீங்கள் முதலில் தேர்ந்தெடுத்த விடையை விட மிகச் சரியான விடை வேறொன்று இருக்கலாம்.
அதனால் தான் . . . . மேலே தடிமனான எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தையைப் படிக்கவும்