Labels

Saturday, December 17, 2011

21. நிதி நிர்வாகம் 2.



பதின்ம வயதினருக்குச் சொல்ல

பணத்தைக் கொண்டு பொருட்களை வாங்க முடியும். எல்லாவற்றையும் வாங்க முடியாது. உதாரணமாக அப்பா அம்மாவையும் அன்பையும் வாங்க முடியாது. ஆக பணத்தின் மதிப்பு என்பது ஒரு அளவுக்கு உட்பட்டதுதான். பணத்திற்கு மட்டுமே மரியாதை என்பது தவறானது.

மருத்துவத்துறையின் முன்னேற்றத்தால் சராசரி ஆயுள் கூடிக் கொண்டே வருகிறது. ஆக நம் முன்னோர்களைவிட நாம் நீண்ட நாட்கள் வாழப் போகிறோம். வயதான காலத்தில் பாதுகாப்புக்குப் பணம் தேவை. பொருளாதார மறுமலர்ச்சியின் விளைவாக வெளிநாட்டுப் பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. நமக்குத் தேர்வு செய்ய ஏராளமான வகைகள்! அதைப் பார்த்து தேவையும் ஆசையும் அதிகரித்து விட்டன. அதற்கும் பணம் தேவை. ஆகவே சேமிப்பும் அவசியமாகிறது.

சேமிக்க வேண்டுமென்றால் மேலும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். அல்லது சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். எது நல்லது?

வருமானம்செலவு = சேமிப்பு    அல்லது
வருமானம்சேமிப்பு = செலவு

ஆசைப்படுவதை எல்லாம் வாங்கக் கூடாது. வாங்குவதை ஒத்தி வைத்து விட்டுத் தேவையா, உடனடித் தேவையா, அவசியமான தேவையா என்று முடிவெடுத்து வாங்கினால் பணம் மிச்சப்படும். தேவையையும் ஆசையையும் பிரித்து உணர வேண்டும். இரண்டும் வெவ்வேறானவை.

உங்கள் தேவையை (இலக்கை) அடைய திட்டமிட வேண்டும்.

     1.   என்ன வாங்க வேண்டும்?
     2.  அதன் விலை என்ன?
     3.   எவ்வளவு நாட்களில் தேவைப்படும்?
     4.   எந்தச் செலவுகளை குறைத்து அந்தப் பணத்தை சேமிக்கலாம்?
     5.   மேல் வருமானத்திற்கு வழியிருக்கிறதா?  என்று ஆராய வேண்டும் 
                                                                                                                     
                                                                                                                      பணம் வளரட்டும்

Wednesday, December 14, 2011

20. நிதி நிர்வாகம்0.







2011 டிசம்பர் 10ம் தேதி 2வது லைன், பீச் ரோட்டிலுள்ள சென்னை பங்குச் சந்தை கட்டிடத்தில் பணத்தைப் பற்றிய விழிப்புணர்வு”  (Pocket Money Program) அதாவது சிறு செலவுக்கான தொகையை எப்படி நிர்வகிப்பது என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப் பெற்றது. அதை சென்னை பங்குச் சந்தை அமைப்பும், செபியின் என்..எஸ்.ம்மும் சேர்ந்து நடத்தினர். சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்த 50 ஆசிரியர்களுக்கு 9வது, 10வது படிக்கும் மாணவர்களுக்கு சுவையாகவும், சுலபமாக புரியும் விதத்திலும் எப்படி பணத்தைப் பற்றி எடுத்துச் சொல்வது என்று பயிற்சி அளிக்கப் பட்டது

அதில் என்..எஸ்.ம்மைச் சார்ந்த திரு. முரளி, முதலீட்டு ஆலோசகர் திரு. . நாகப்பன், சென்னை பங்குச் சந்தை அமைப்பைச் சார்ந்த திரு சம்பத் ஆகியோருடன் நானும் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

1.   பணம் மட்டுமே எல்லாவற்றையும் வாழ்க்கையில் தருமா?
2.   பணத்தைச் சேமிக்க வேண்டும், ஏன்?
3.   பணத்தைச் சிக்கனமாகச் செலவளிக்க வேண்டும், எப்படி?
4.   சேமிக்க எப்படித் திட்டமிட வேண்டும்?
5.   பணத்தை முதலீடு செய்ய வேண்டும், ஏன்?
6.   முதலீடு பெருக வேண்டும், ஏன்? எவை அவை?
7.   எந்த வகையான முதலீடு யாருக்கு நல்லது?
8.    வங்கி நடவடிக்கைகள்.
9.    எப்போது, எதற்கு கடன் வாங்கலாம்.
10. ஏமாறாமல் கடன் வாங்குவ்து எப்படி?

என்ற தலைப்புகளில் வருங்கால வளமான இந்தியாவை உருவாக்குவது என்பது குறித்து பேசினோம்.

முக்கியமாக மாநகராட்சியைச் சார்ந்த முக்கிய கல்வி அதிகாரி திரு கோவிந்தசாமி அவர்கள் பேசும்போதுநம்மில் பெரும்பாலோர் சராசரி வயதில் பாதியைக் கடந்துவிட்டோம். இனி எதிர்காலம் மாணவர்கள் கையில்தான். அவர்களை ஒழுங்கான முறையில் வழி நடத்த வேண்டியது நமது கடமைஎன்று உணர்ச்சி பூர்வமாகச் சொல்லியதுதான்!
பணம் வளரும் ----