Labels

Friday, April 29, 2011

17. Driving in US - யு எஸ் சில் போக்குவரத்து


பொலிஸ்?, போலீஸ்?, cop, officer?

"எப்பிடீப்பா வீட்டுக்குப்போறே?"

"நடராஜா ஸர்வீஸ்தான்!"

"பஸ் நம்பர் 11 தான்"
"
காலாற நடந்து போவதுதான்".

யு எஸ் ல் நடந்து போவதே சுகம்தான். நட ராஜா இல்ல, நடப்பவர்தான் ராஜா.
 25 அடி முன்னாடியே நம்மைப் பார்த்தவுடன் காரை நிறுத்தி தயவு செய்து போய்விடப்பா என்று கையைக் காட்டுவார்.
 ஆரம்பத்தில், நானும் நின்னுனின்னு பார்த்தேன். நான் (கிராஸ் பண்ணிப்) போனால்தான் அவர் (கார்) போவார் போல இருந்தது. இப்பல்லாம் சும்மா அப்பிடியே கிராஸ்தான். அடுத்த வாரம் ஊருக்கு வந்து இதை மறந்திறனும்!

இங்கேயெல்லாம் மினிமம் ஸ்பீடும் உண்டு, மாக்ஸிமம் ஸ்பீடும் உண்டு. அதைக்குறித்து ஒரு கதையும் உண்டு.

நம்ம ஊரில் (NH….) National Highway என்பது போல இங்கு Interstate ( I-   ).

ஓரு சமயம் ஹை வேயில் மிக மெதுவாக ஒரு கார் சென்று கொண்டிருப்பத்தை பார்த்த traffic cop காரை நிறுத்தி விசாரித்தார்.

 உள்ளே நான்கு மூதாட்டிகள்.

ஓட்டுனரைப்பார்த்து traffic cop, " மேடம். மிக மெதுவாகச் செல்வதும் ஆபத்துதான். நீங்க என்ன 20 மைல் வேகத்தில் செல்கிறீர்கள்?'

"அங்கே பாருங்க I-20 என்று போட்டிருக்கிறது " என்றார் ஓட்டுனர் மூதாட்டி.

"மேடம், அது ஹைவே நம்பர். ஸ்பீடு லிமிட் இல்லே. அது சரி (உள்ளே பார்த்தவாரு) இந்த மூனுபேரும் ஏன் இப்பிடி வெளிறிப்  போயிருக்காங்க?"

"இப்பத்தான் I-120 யிலிருந்து வெளியே வாரம்!"

யு எஸ்ஸில் நமக்கு இடது பக்கம்தான் டிரைவர் இருப்பார். ஸ்பீடு 30 mph (miles per hour) ரிலிருந்து 70 வரை இடத்திற்கு தகுந்தவாரு இருக்கும். 10 மீட்டர் இடைவெளி அவசியம். டிராஃபிக் லைட்டில் அல்லது yieldல் நிற்காமலோ, அல்லது அடிக்கடி லேன் மாறுவதோ, ஒரு ஆளாக HOV laneல் சென்றாலோ traffic "officer"  அதாவது போலீஸ்காரர் நமக்குப் பின்னால் நீல விளக்குகள் மின்ன  வந்து நிறுத்தச்சொல்லி விசாரிப்பார். முதலில் நமது டிரைவிங் லைசென்சை வாங்கிக்கொண்டுபோய் அவர் காரில் உள்ள கம்ப்யுட்டரில் நம் மீது ஏற்கனவே குற்றங்கள் பதிவாகி இருக்கின்றனவா என்று சரி பார்த்துக்கொள்கிறார்கள்.
நாம் காரை விட்டுக் கீழே இறங்கக் கஊடாது. கண்ணாடியை மட்டும் கீழே இறக்கினால் போதும். பின் வந்து நம்மிடம் குற்றம் என்னவென்று சொல்கிறார்கள். நம்முடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் காரினுள் உள்ள வீடியோ நம்மை பார்த்து பதிவு செய்துகொண்டிருக்கும். டிக்கெட் குடுத்துட்டார்னா இன்சூரன்ஸ் தாளிக்கப் போறான்னு அர்த்தம்!

சில குற்றங்களை ஆன்லைன் எக்ஸாம் எழுதி சமாளிக்கலாம்!

கப்ஸ் சாரி G P S ன்னு ஒன்னு. செல் போன் போன்றது. அது மட்டும் வேலை செய்யலை, யு எஸ்ஸில் பெட்ரோல் விலை எகிறிடும்! அதுதான் வழிகாட்டி. புறப்படும் இடத்தையும் சேரும் இடத்தையும் அதனுள் இட்டுவிட்டால், நம்மை மாப் மூலமாகவும், சொல்லிக்கொண்டுவந்தும், வழியை விட்டுவிட்டால் திருத்திக்கொண்டும் நம்மை இட்டுக்கினு போயிரும்!

நம்மூருக்கு வந்து கூகிள் மாப்பில் "get directions " ல் மந்தவெளி மக வீட்டிலிருந்து பெசன்ட் நகர் பிரதர் வீட்டுக்கு ௧௫ நிமிஷங்களில் சென்றுவிடலாம் என்று வழிகாட்டுகிறது. ஆச்சரியமாயில்லை!  (அதென்ன இங்கலிஷ் நம்பர் அடித்தால் தமிழ் நம்பர் வருது!)

இதுவரை படித்ததற்கு நன்றி.

மேலும் படிக்க
http://chennai.sancharnet.in/kkd_spvr
http://examtechniques.blogspot.com