சென்னையில் மினி அடுக்கு மாடி வீட்டில் குடியேறப் போகிறீர்களா?
Well’s always well, கிணறு கிணறுதான் - கிணறு நல்லதுதான் !
தண்ணி டாங்குக்குள்ளே இறங்குறதுனால அப்படி ரெடியா வந்திருக்கிறான். நான் சொன்னபடி நல்ல பையந்தானே? “சார் நீங்க வந்து பாருங்க” என்று சொல்லி டார்ச் லைட்டையும் வைத்துக் கொண்டு காப்பை மாட்டி விட்டு பார்க்கச் சொன்னான்.
“சார் தண்ணி லாரியில உள்ள முழுத் தண்ணியும் உங்களுக்கு விடமாட்டாங்க. பல மாதிரி ஏய்க்கலாம். டாங்கர்ல மூனு போர்ஷன் இருக்கும். அவுட்லெட் பைப் மூனு போர்ஷன்ல இருந்தும் திறந்து விடனும். ஒரு பகுதி 4000 லிட்டர். மேலும் கீழ்ப்பகுதியிலுள்ள பைப்பையும் திறந்து விடனும். லாரியிலேயே மோட்டார் பம்பும் இருந்தால் அதையும் உபயோகப்படுத்தி மொத்த தண்ணியையும் வாங்கிறனும். காசு குடுத்ருக்கோம்ல!” 20 ரூபாய்க்கு இவ்வளவு இன்ஃபர்மேஷனா! இல்ல இல்ல அவன் நல்ல பையன்ல!
இனியும் இம்மாதிரி நிகழாது காக்க காக்க ஒரு பிட் நோட்டீஸ் அடித்து மோட்டார் ஸ்விட்ச்சின் கீழே ஒட்டினேன்.
Optimizing Water Usage & Reducing Costs
Quantity of water being brought in via tankers - 12,000 lt per tanker
Borewell output is slow, so cannot run the motor continuously.
Moreover the motor may get heated up and the coil may melt.
Run for 1hr in the morning and 45 minutes in the evening.
Our water tank can hold 10,000 litres.
Sump can hold 12000 l of corporation water
Consumption of water is calculated at 135 litres per capita daily (lpcd)
18 people x 135 l = 2430 litres
Now you know that we are using a lot.
Pls check if there is water in the sump before switching on the motor.
Usage of water in Washing machine, European closet, Washing utensils should be controlled.
Fixing a meter for each apartment MAY solve the problem
இப்பத்தான் புரியுது maintenance மெயிண்டனன்ஸ் என்று ஒவ்வொரு ஃப்ளாட்டிலும் ஏன் அவ்வளவு அதிகமாகக் கொடுக்கிறார்கள் என்று. ஆண்டவன் புண்ணியத்தில 6 வாரமா ஒரு பிரச்னையில்ல.
நீங்களும் ”பத்திரமா பாத்துக்குங்க”
இன்னும் முடியல. இந்த போர்வெல்ல ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் ஊறும்? 1 HP ஜெட் பம்ப் 200 அடி ஆழத்திலிருந்து 50 அடி உயரத்திற்கு 1 மணி நேரத்தில் எத்தனை லிட்டர் தண்ணீர் ஏற்றும்?
Disclaimer: முடிஞ்சா படிங்க
இது பொது அறிவு நோக்கிலும், சாதாரண வாசிப்பிற்கும் தான் வெளியிடப் பட்டிருக்கிறது. இது வழிகாட்டியாக செயல் படுவதற்காக தயாரிக்கப் பட்டதல்ல. பார்வையையும், கருத்தையும், அபிப்ராயத்தையும் என்னுடைய சொந்த பரிந்துரைகளாகவோ அல்லது ஆலோசனையாகவோ எந்த ஒரு நபரின் தனித் தேவைகளுக்காகவோ என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. விளம்பரத்திற்காகவோ, விற்பனைப் பொருள்களின் அங்கீகாரத்திற்காகவோ இவற்றை உபயோகிக்கக் கூடாது.
சொல்லப் பட்ட விபரங்கள்/விளக்கங்கள்/கருத்துக்கள் ஆகியவை பொதுவான நோக்கில் சொல்லப் பட்டவை. தனி நபர் / அமைப்பு / நிறுவனம் ஆகியவற்றின் குறிப்பிட்ட நோக்கம் / நடவடிக்கை / இலக்கு / தேவை / சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. இதில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கை எடுத்திருந்தாலோ அல்லது செயல் பட்டிருந்தாலோ நான் பொறுப்பேற்றுக் கொள்ள இயலாது.
ஆகவே இதில் உள்ளபடி எந்த ஒரு கருவையும், ஆலோசனையையும் பின்பற்றுவதற்கு முன்னால் கெட்டிக்கார இஞ்சினியர்களைக் கலந்து முடிவு எடுப்பது நல்லது.
இதிலுள்ள தகவல்கள் யாருக்காவது ஏதாவது ஒரு விதத்தில் இழப்பையோ பாதிப்பையோ உண்டாக்கி இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
எனது எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் இதிலுள்ள தகவல்களை எந்த ரூபத்திலும் மறுபதிப்புச் செய்வதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ?!
ரெம்பத்தான் L