அமெரிக்காவில் குளிர்காலம் - Winter in America 1
குளிர்காலம் - வட இந்தியாவில் இருப்பவர்களுக்குத் தெரிந்ததுதான்
Summer June21-Sept20 - கோடைக்காலம்
Fall Sep21-Dec20 - இலையுதிர்காலம்
Winter Dec21-Mar20 - குளிர்காலம்
Spring Mar21-June20 - இளவேனிற்காலம்
இலையுதிர்காலமே குளிர் காலத்தைப்போல இருக்கிறது அட்லாண்டாவில். நவம்பர் முதல் வாரம், பகலில் 74º F டிக்ரீ ஃபாரென்ஹெய்ட் ம் இரவில் 40º F டிக்ரீ ஃபாரென்ஹெய்ட் ம் இருக்கிறது. 23.3º C, 4.4º C. இன்னும் உண்மையான குளிர்காலம் எப்படி இருக்குமோ.
வட அமெரிக்காவின் வட பகுதியில் அதாவது நயாகரா, நியூ யார்க், நியூ ஜெர்ஸி, ஸியாட்டல் போன்ற ஊர்களில் முதலில் அதாவது அக்டோபரில் ஆரம்பிக்கும் குளிர் நவம்பரில் ஐஸ் கட்டி உறைவது வரை ஆகிவிடும். பிறகு வட அமெரிக்காவின் தென் பகுதிக்கு லாஸ் ஆஞ்செலெஸ், டல்லாஸ், அட்லாண்டா விற்கு டிசம்பரில் வரும். ஃப்ளோரிடாவிற்கு சாதாரண குளிர்தான்.
கீழ்கண்ட வெப்சைட்டுகளில் பருவ நிலைகளைக் காண்க.
http://www.infoplease.com/ipa/A0762183.html
http://www.mapsofworld.com/usa/thematic-maps/usa-temprature-january.html
குளிருக்கு ஸ்வெட்டரைப்போடாமல் ஹீட்டர் உஷ்ணத்தைக்கூட்டினால் முதலில் கால்களில் வறட்சி ஏற்படும். தோல் வறண்டு வெண்மையாகக் காணப்படும். அரிக்கும். சொரிந்தால் சுகமாக இருக்கும். ரத்தம் வரும். உதடு வெடிக்கும். தொண்டை காய்ந்து போய்விடும். தொண்டையும் மூக்கும் அரிக்கும். வாயினுள் மேலன்னத்தில்இருந்து, மூக்கினுள்ளிருந்தும் சொட்டு ரத்தம் வரலாம். மூக்கினுள்ளே ஒரு சொட்டு உப்பு நீர் விட்டால் காய்ந்து போகாது. இதெல்லாம் மார்கழியில் ஊரில் உள்ளதுதான். 55 வயதுக்கு மேல் சான்ஸ் அதிகம். குழந்தையை பார்த்துக்கொள்கிறோம் பேர்வழி என்று வந்து அவர்கள் நம்மைப் பார்த்துக்கொள்கிறாற்போல வந்துட்டால்? ஆதலால் இங்கே வருமுன் காப்பதே நலம். Doctor's office…very expensive yaar!
குளிர் காலத்தில் காற்றில் உள்ள ஈரம் காய்ந்து போய்விடும். வெப்ப அளவை 76ºF, 24.5ºC பாகை போல வீட்டு ஹீட்டரை வைத்துக்கொள்வது நலம். வீட்டினுள் ஈரப்பதத்தை சீராக வைத்துக்கொள்வது நல்லது. Humidifier பொருத்தலாம். $40-$140. அல்லது ஒவ்வொரு ரூமிலும் பேஸினில் தண்ணீர் ஊற்றி வைத்து விடலாம். வீட்டினுள்ளேயே துணியைக் காயப்போடலாம். கை கால்களில் வாஸலைன் தடவிக்கொள்ளலாம். உதட்டிற்கு Lip Balm உபயோகப்படுத்தலாம். ஈரப்பதம் கூடிவிட்டால் பூச்ணம் பூத்தது போன்ற வாசம் வரும். கதவுகளைத் திறந்து விடலாம். அல்லது வெண்டிலேடர் ஃபானைப் போடலாம்.
மரம் வெப்பத்தைக் கடத்தாது. வீடுகள் மரத்திலானவை. வெளியே உள்ள குளிர் உள்ளே வராது. உள்ளே உள்ள வெப்பம் வெளியே செல்லாது!
ஹீட்டரை குறைத்து வைத்துக்கொண்டு வீட்டினுள் இருந்தால் குளிருக்கு fleece hoodies, fleece pants அணிந்தால் போதும். நல்ல க்ளவ்ஸ், ஸாக்ஸ், கண் மட்டும் தெரிகிறாற்போல உள்ள monkey cap ஊரில் வாங்கி வரலாம்.வெளியே செல்லு முன் inner thermal wear, shirts and pantsம் அணிந்து மேற்கண்டவைகளையும் அணிந்து தேவைப்பட்டால் jerkinsம் ($50)அணிந்து செல்லலாம். அப்பாட! ஏழெட்டுக் கிலோ கூடியிருப்பீர்கள். நான் குறிப்பிட்டு இருக்கும் எதையும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். $10 each @ Walmart, அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் நிறுவணங்களில் ஒன்று.
தொடரும்....
I have hosted two more new blogs in English
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com
Pls read them and post your comments or suggestions for new topics
http://america-for-indian-malaysian-visitors.blogspot.com
http://examtechniques.blogspot.com
Pls read them and post your comments or suggestions for new topics